Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, June 13, 2014

புளூட்டோ – அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட குறுங்கோள்.


    இது 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோள் எனும் தகுதி கொடுக்கப்பட்டது. புளூட்டோ ஒரு னிக்கட்டிக் கோள். 1977 வாக்கில் நிறைய பணிக்கட்டிக் குறுங்கோள்கள் நமது சூரியனைச் சுற்றி வருவதைக் கண்டுபிடித்த அறிவியலாளர்கள், அவற்றை ஒப்பு நோக்குகையில், புளூட்டோவும் ஒரு குறுங்கோள் எனும் முடிவுக்கு வந்தனர். இது சூரிய சுற்றுவட்டப்பாதைக்கு வெளியில் செல்வதாகவும் உறுதிசெய்ததின் விளைவு, 2006-ல் இதன் கோள் தகுதியை நீக்கிவிட்டனர்.
 
புளூட்டோ
·         புளூட்டோவிற்கு ஐந்து சந்திரன்கள் உள்ளன.
·         1930-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
·         முதலில் இதற்கு வைக்கப்பட்ட பெயர் எக்ஸ் கோள்
·         சூரியக்குடும்பத்தின் ஒன்பதாவது கோள் (என இருந்தது)
·         சூரிய சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகியும் செல்கிறது.
·         இதன் விட்டம் 2274 கி.மி. சூரியனிலிருந்து 591.35 கோடி கி.மி.தொலைவில் உள்ளது.
·         இது சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 248 ஆண்டுகள்.
·         தனது முழு சுற்றில் ஒருமுறை இது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைகிறது. இருபது ஆண்டுகள் இருந்துவிட்டு மீண்டும் விலகி செல்கிறது.
·         தன் சுற்று வட்டப்பாதையை ஆக்கிரமித்து வைத்துக் கொள்ளவில்லை என்பதாலும் கோள்தகுதியை இழந்துவிட்டதாம்.
·         பொதுவாக நெப்டியூனுக்கு அடுத்த சுற்றில் வருகிறது.
·         மற்ற கோள்கள் போல் அல்லாமல், எதிர் சுற்றில் சுற்றிவருகிறது.
·         பனிக் கோள் என்பதால் இதன் வெப்ப நிலை -235 செல்சியஸ்.
·         70% திடப்பொருளும், 30% திரவப் பொருளும் அமைந்தது.
·         பெருமளவு நைட்ரஜன், சிறிதளவு மீத்தேன், ஈதேன், கரியமிலவாயு.
·         காந்தப்புலம் பற்றிய பதிவுகள் இல்லை.

(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)
அடுத்துமுன் கதைச் சுருக்கம்

Tuesday, June 10, 2014

நெப்டியூன் ...... நானும் கோள்தான்......நானும் கோள்தான்

 
நெப்டியூன்


இது சூரியக் குடும்பத்தின் எட்டாவது கோள். இது 1846-ல் கண்டுபிடிக்கப்பட்ட கோள். இந்தக் கோளைப் பொருத்தவரையில் இது தொலை நோக்கியால் கண்டுபிடிக்கப்படுமுன் கணித சமன் பாடுகளின் படி உறுதி செய்யப்பட்டக் கோள். இது கலிலியோவால் 1613 வாக்கில், ஒரு விண்மீன் என கருதப்பட்டது.


·         இது சூரியனிலிருந்து 450.40 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.

·         இதன் விட்டம் 49532 கி.மீ.

·         இதன் சுற்றுப்பாதை நியூட்டனின் விதிப்படி இல்லை என வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்

·         இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 164.79 ஆண்டுகள்.
·         இது பனிப்பாறைகளால் ஆன வாயுக் கோள்.

·         இதின் சூழல் ஹைட்ரஜன் மற்றும் கொஞ்சம் ஹீலியம் , மீத்தேன் கொண்டது.

·         நெப்டியூன் நீல வண்ணம் கொண்டது. இதில் உள்ள மீத்தேன் சிவப்புக் கதிர்களை உறிஞ்சுக் கொள்வதாலும், அதன் அறிந்துகொள்ள முடியாத நிற மண்டலம் வெளியிடும் கதிர்களாலும் நீலமாக காட்சி அளிக்கிறது.

·         நெப்டியூனின் காற்றானது மணிக்கு 2400 கி.மீ. வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. இதுதான் சூரியக் குடும்பத்தில் உள்ளக் கோள்களிலேயே அதிக காற்று வேகம் கொண்டது.

·         இதன் உட்புற வெப்ப மூலகங்களால், இது சூரியனிடமிருந்து பெரும் கதிர் வீச்சினைவிட இருமடங்கு வெளிப்படுத்துகிறது.

·         இதற்கும் கரும்புள்ளி இருக்கிறது. அது பூமியின் விட்டம் அளவில் இருக்கிறது.
·         நெப்டியூனுக்கும் வளையங்கள் உள்ளன.

·         நெப்டியூனுக்கும் நிலவுகள் உள்ளன.

·         சனி மற்றும் வியாழனில் உள்ளது போலவே, இதிலும் ஹட்ரஜன், ஹீலியம், ஹைட்ரோகார்பன், நைட்ரஜன், உள்ளதோடு, அமோனியா மற்றும் மீத்தேனும் உள்ளன.

·         யுரோனசில் உள்ளது போல் நெப்டியூ.னுக்கும் காந்தப்புலம் இருக்கிறது. அது அதன் உட்கூறில் உள்ள பொருட்களால் ஏற்படுகிறது. பூமியின் காந்தப் புலத்தைப் போல் 27 மடங்கு அதிகம்.


(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)

அடுத்து … புளூட்டோ

Sunday, June 8, 2014

யுரோனஸ் … யுரோனஸ் – உள்ளே வா..

         
சூரியக் குடும்பம் - புதிதாக சேர்க்கப்பட்ட மும்மூர்த்திகளுடன்
 
 நமது பண்டைக்கால வானியல் மேதைகள், சூரிய நகர்வு, சந்திரன் நகர்வு மற்றும் கண்ணால் காண முடிந்த கோள்கள், காண முடியாத கோள்கள் ஆகியவற்றை கண்டுணர்ந்து, ஆனால் துள்ளியமாக நகர்வுகளைத் தீர்மானித்து, ஏழு கோள்களை வகைப்படுத்திக் கொடுத்தனர். சோதிடம் சொல்ல வந்த மேதைகள், சூரிய சந்திர சுற்று வட்டப்பாதையின் இடைவெட்டுப் புள்ளிகளை நிழற்கோள்கள் என வகைப்படுத்தி மொத்தம் ஒன்பது கோள்கள் என வரிசைப்படுத்தினர். இது பன்னெடுங்காலக் கணக்கு.

            ஆனால் மேல் நாட்டினர், தொலை நோக்கிகளும், இயற்பியல் சாதனங்களும் வந்தபின், இருக்கும் கோள்களுடன் புதிதாக மூன்று கோள்களைக் கண்டுபிடித்தனர். அதுவும் பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையில். அவை வானியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கொள்கைகளும் வகுக்கப்பட்டன. தமிழக அமைச்சர்களின் பதவி திடீரென்று பறிக்கப்படுவதுபோல், கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கோள்களில் ஒரு கோளின் தகுதியைப் பறித்து விட்டனர். மற்ற இரண்டு கோள்களின் தகுதி எப்போது பறிக்கப்படுமோ தெரியவில்லை. அந்த மும்மூர்த்திகள் முறையே, யுரோனஸ், நெப்டியுன், புளூட்டோ.

யுரோனஸ்

சூரியக் குடும்பத்தில் ஏழாவது கோள். 1781 வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றைப் போல் கண்ணால் காணக்கூடியதாக இருந்தாலும், வெகு காலம் வரை இது ஒரு விண்மீன் என்றே தவறாக அறியப்பட்டிருந்தது. காரணம், இதன் மெல்லிய வெளிச்சம் மற்றும் இதன் மிக மெதுவாக சூரியனைச் சுற்றி வரும் இயற்பியல் தன்மை.


யுரோனஸ்


·         யுரோனஸ் நீலப்பச்சை வண்ணம் கொண்டது. இதில் உள்ள ஹைட்ரஜன்-மீத்தேன் சுற்றுச் சூழலில் மீத்தேனின் பங்களிப்பால் இவ்வாறு தோன்றுகிறது.

·         சூரியனிடமிருந்து 287.10 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.

·         இது சூரியனைச் சுற்றிவர 84.30 ஆண்டுகள் ஆகிறது.

·         இது ஒரு பனிக் கோள்.

·         மற்றக் கோள்களின் அச்சு சாய்ந்திருப்பது போல் அல்லாமல் இது 97.77 பாகை சாய்திருக்கிறது. இந்த கோளின்மீது, வேறு ஏதோ ஒன்று மோதியதின் விளைவாக இது நேர்ந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.

·         இதனால் பருவ நிலை மாற்றம் என்பது இருபத்தோரு ஆண்டுகளுக்கு நீள்கிறது. அதாவது ஒருபருவம் என்பது 21 ஆண்டுகள்.

·         இதன் வளிமண்டலம் 82.50% ஹைட்ரஜன், 15.20% ஹீலியம், 2.30% மீத்தேன் கொண்டுள்ளது.

·         25% பாறைகளாலும், 65% பனிக்கட்டியாலும், 10% ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தாலும் அமைந்துள்ளது.

·         84 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவருகிறது.

·         யுரோனசுக்கு 27 சந்திரன்கள் உள்ளன.

·         இதற்கு 13 வளையங்கள் உள்ளன. தெளிவாகத் தெரியக்கூடிய இரண்டு வளையங்கள், முறையே சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் உள்ளன.

·         யுரோனசின் வெப்ப நிலை -224.2 செல்சியஸ்.

·         இதற்கும் காந்தப் புலம் உண்டு. இதன் அச்சு வெகுவாக சாய்ந்திருப்பதால் இதன் காந்தப் புலமும் இதனால் ஒரு ஒழுங்கற்ற நிலையிலேயே இருக்கிறது.


 (நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)
அடுத்து … நெப்டியூன்