Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, January 30, 2017

பிருகத் ஜாதகா – தமிழில்-8


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்…(தொடர்ச்சி)


இதுவரையில் கூறியபடி, நாம் மேலும் ஒருபடி முன்னேறி செல்கிறோம், அதாவது, வெளிச்சத்தின் விளைவால் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவனின் செயல் பலமிழந்து போகுமானால், அது எதிர் விளைவாக இருக்கும், அத்தகைய எதிர்ப்பானது நேரிடையாகவோ அல்லது தகுதி மற்றும் வலிமையின் அடிப்படையிலோ அமைவதுடன், அத்தகைய செயல் நோக்கமானது மிகக் கடினமானதாக இருக்கும், அந்த நடவடிக்கைத் தடை செய்யப்படுமானால், டைகரஸ் நதியின் போக்கினைப்போல் செல்லும். இந்தக் கேள்வியானது முற்றிலும் கர்ம விதி சார்ந்த ஒரு கேள்வியாகும்முந்தைய கர்மாவின் விளைவு தற்போதைய கர்மாவிற்கு எதிரானதாக இருக்கும். ஒர் எதி விளைவை எதிர்க்கும்போது, ஒருவர் முதலில் அதுபற்றிய அறிவின் திறனையும் செயல் கோட்பாட்டினைப் பற்றிய அறிவும் நிறைந்தவராக இருக்க வேண்டும். முந்தைய அறிவு ஒருவருக்கு சோதிடத்தின் மூலம் வழங்கப்படுகிறது, பிந்தையது வினைப்பயன் முதிர்ச்சி எனும் அறிவால் கிடைக்கிறது. இரண்டாவதில் கூறப்பட்ட வழிமுறைகளானது தியானத்தின் (மனப்பயிற்சி அல்லது வளர்ச்சி) கொடையாகவும், சில சிறப்பு வாய்ந்த யாகத்தீயினால் செய்யப்படும் வேத யாகங்கள் மூலமாகவும் கிடைக்கின்றன. இது பயனற்றத் தடைகளை எதிர்த்து, தடையற்ற ஓட்டத்தின் மூலமாக எடுத்துச் செல்கிறது. எதிரியின் பலமோ அல்லது எந்தத் திசையிலிருந்து தாக்குதல் நடைபெறும் என்று அறியாத நிலையிலும் ஒரு மனிதன் தாம் வெற்றி பெறுவோம் என்று எப்பொழுதும் நம்பிக் கொண்டிருக்கிறான். சோதிடமானது ஒருவனின் எதிரியை மட்டுமின்றி அவனது நண்பனையும் அதாவது யாரிடமிருந்து உதவியைப் பெற இருக்கின்றானோ அவனையும் சுட்டிக் காட்டுகிறது. நண்பர்களையும் அதற்குரிய களங்களையும் எதிரிகளையும் அதற்குரிய களங்களயும் சுட்டிக்காட்டும் சோதிடம், மறைமுகமாக அவனது பேதமற்ற சம களத்தையும் அதாவது அவன் சுதந்திரமாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளவற்றையும், உழைப்பின் விகிதாச்சாரத்திற்கேற்ப கிடைக்க இருக்கும் வெற்றியையும் சுட்டிக் காட்டுகிறது.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014



No comments: