Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, October 6, 2014

சோதிடத்தில் வானியல் கோட்பாடுகள்



                      அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
                                                புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப்
                                                பகலிடத் துமிர வும்பணிந் தேத்தி
                                                இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
-    திருமூலர்



      வானியல் கோட்பாடுகள், பொதுவாக இரண்டு நிலைகளில் வகுக்கப்பட்டுள்ளன. ஒன்று பூமி மையக் கொள்கை, மற்றொன்று சூரிய மையக் கொள்கை.


      பூமி மையக் கொள்கையின்படி, சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களும், பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்பதாகும். தொன்றுதொட்டு வெகு நாட்கள் வரையில், இந்தக் கொள்கையையே வானியல் அறிஞர்களும் கொண்டிருந்தனர். சுழன்றும் ஏர்பின்னது உலகம் எனும் வள்ளுவரின் வாக்கில், பூமி சுற்றிவருவதைப் பதிவு செய்துள்ளதைக் காணலாம். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டைச் சார்ந்த பல்துறை வித்தகரும் வானியல் அறிஞருமான தாலமியும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வானியல் அறிஞரும் கணித மேதையுமான ஆர்யபட்டாவும் இதேக் கருத்தைத்தான் கொண்டிருந்தார்.

 
தாலமியின் பூமி மையக் கொள்கை



      சூரிய மையக் கொள்கையானது, இன்று வானியல் துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, வானியல் அறிஞர்களால் பின்பற்றப்படும் கொள்கையாகும். இதன்படி, இந்த பிரபஞ்சத்தில் பால் வீதியில் நமது சூரியக்குடும்பம் உள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும், சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இக்கருத்து வெகுகாலந்தொட்டு, சரியாக நிருபிக்கப்பட முடியாமல் இருந்து வந்தது.  இந்தக் கொள்கையை பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் கோபர்னிகஸ் தனது கோட்பாட்டின் மூலம் நிரூபித்தார்.

கோபர்னிகஸின் சூரிய மையக் கொள்கை


      இவை இரண்டில் எந்தக் கொள்கை மெய்யானது?


பூமி மையம் -எதிர்(vs.)- சூரிய மையம்

      இரண்டுமே மெய்யானதுதான். எப்படி? ஒன்று காட்சித் தோற்றத்தின் அடிப்படையிலானது, பிரிதொன்று இயல் தோற்றத்தின் அடிப்படையிலானது. எப்படி?




No comments: