Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, December 2, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-13

                        

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)



            இதன் சுற்றானது வருடத்திற்கு 50” எனும் அளவில் பின்தங்குகிறது. ஆனால், இந்தியக் கணிதத்தின்படி மேசத்தின் முதல் புள்ளியானது சூரியப்பாதையில் உள்ள ரேவதி விண்மீன் (யோகதாரா தொகுப்பில்) மீது அமைந்துள்ளது. இந்த விண்மீனானது வான்-புவி வெட்டுப்புள்ளிக்கு (vernal Equinox) கிழக்கே 20o உள்ளது. இந்த விண்மீனிலிருந்து கோள்களின் இருப்பிடத்தைக் கணிப்பது  நிர்ணய ஸ்புடம் என்றும், vernal Equinox-லிருந்து இருப்பிடத்தைக் கணிப்பது சாயன ஸ்புடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையே ஏற்படும் சிறு இடைவெளி வித்தியாசமானது அயனாம்சம் என அழைக்கப்படுகிறது. இந்திய சோதிடமானது  கோள்களின் நிர்ணய ஸ்புடம் எனும் கணக்கினையும், நவீன அட்டவணையானது நமக்கு சரியான சாயன ஸ்புடத்தையும் தருகிறது; எனவே, அயனாம்சத்தின் அளவு துள்ளியமாகத் தெரிய வருமானால், அதனை சாயன ஸ்புடத்திலிருந்து கழிக்கலாம்அதன் மீதமானது நிர்ணய ஸ்புடத்திற்கு தேவையாகும். ஆனால் மிகச்சரியான அயனாம்சம் தெரியவில்லை, அதனை நேரடியாகக் உற்றுநோக்கி அறிய முடிவதில்லை, ஏனெனில் ரேவதி விண்மீனானது மறைந்து விட்டது. இந்த பொருள் பற்றி ஏப்பிரல் (1883) தியோசொபிஸ்ட் இதழில் எழுதியிருக்கிறேன். பல்வேறு பஞ்சாங்க வெளியீட்டாளர்கள், தங்களுக்கு ஒத்துவரும் வகையில், தன்னிச்சையாக பல்வேறு அயனாம்ச இடைவெளி அளவினைக் குறிப்பிடுகிறார்கள். அத்தகைய அயனாம்ச இடைவெளியினை 1 சனவரி 1883 அன்றைய நாளில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:-




            *நான், 1 சனவரி 1883 அன்று, 20o 23’ 8” மற்றும் 20o 25’ 22” ஆகியவற்றிற்கு இடையேயான உண்மையான இடைவெளி அளவினைக் கண்டுபிடித்துள்ளேன். அவற்றிற்கான சராசரியானது, 20o 24’ 15” எனில் அதிகபட்சத் தவறானது 1’ 7” ஆகும். எனவே, சரியான அயனாம்சத்திற்கும் மேலேக் குறிப்பிட்ட  பல்வேறு அயனாம்சங்களுக்குமான வித்தியாசத்தைக் காண்போம்.




இதனை மற்றொரு விதத்தில் கூறுவோம். இந்த அயனாம்சப் பிழையானது, இக் குறிப்பிட்ட நேரத்தில் கோள்களின் நிலையினை, முதல் நான்கு பஞ்சாங்கங்களின்படி எப்படி பாதிக்கிறது என்பதைக் காணவும்:-




            எனவே, தற்போதைய பஞ்சாங்கங்களின் அடிப்படையில் கணிக்கப்படும் சாதகத்தில் கோள்களின் நிலையானது தவறாகவே இருக்கும் எனக் கூறலாம்.

            மீண்டும், இராசிமானம் அல்லது இத்தகைய கால அளவினைக் கருதாமல் அடிவானில் உள்ள இராசிகளை அப்படியே நிலப்பரப்பின் எல்லா எல்லைகளுக்கும் எடுத்துக் கொள்ளும்படி தயாரிக்கபட்ட கீழே உள்ள தவறான அட்டவணையினைத் தாங்கள் அறியாமலேயே, பெரும்பாலான சோதிடர்கள் சாதகம் கணிக்கின்றனர்.



வாசகர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்குமான சரியான அட்டவணையினை, இணைப்பில் பார்க்கவும்.



[*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]





முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014


No comments: