Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, December 19, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-16


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)

            சாதகத்திற்கும் ஹோரை சோதிடத்திற்கும் உள்ள மிக முக்கிய வித்தியாசம்: முந்தையது ஒருவரின் மிக நீண்ட வாழ்வின் பலன்களைக் கணிப்பது, பிந்தையதோ, அடுத்து நிகழ உள்ள உடனடி எதிர்காலத்தைக் கணிப்பது, மேலும் ஒன்று அனைத்து நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைக் கணித்துக் கூறும், மற்றொன்றோ ஒப்பு நோக்குகையில் அவ்வளவாக முக்கியத்துவம் அல்லாத நிகழ்வினைக் கூறுகிறது, உதாரணமாக, அன்றைய நாளில் தமக்கு ஏற்படக்கூடிய உணவுத்தட்டுப்பாடு, அவர் இருக்கும் திசை போன்றவை. இத்தகையவற்றில், சோதிடரானவர் பொதுவாக ஒரு சிறு தாளில் விடையை எழுதி மடித்து கையில் வைத்துக்கொண்டு, கேள்விக் கேட்பவரை அதைப் பார்க்கச் சொல்லி, தமது முந்தைய அனுபவ அறிவைக் கொண்டு, அவரை மலைக்க வைக்கிறார். இத்தகைய வாழ்வின் நிகழ்வுகளானது அவர் முன் ஒருவர் வைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படக்கூடிய விளைவுகளாக, இயல்பான உடனடி விளைவுகளைத் தெரிவிக்கக் கூடியதாக ஹோர சோதிடம் இருப்பதால், இது சாதக சோதிடத்தின் வரம்பிற்குள் வருவதில்லை. ஒருவன் கோடாரியை ஒரு மரத்தின் மீது செலுத்திய பிறகு, அது எந்த திசையில் விழும் என்று கணிப்பதில் சிரமம் இல்லை, ஆனால் செலுத்துவதற்கு முன்பு சொல்ல முடிவதில்லை. எனவே மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரா முடியாத ஆனால் இயல்பான ஒருவரின் அந்த நிமிட நிகழ்வுகளை இத்தகைய சிறு கணிப்புகளினால் அறிய முடியும் ஹோரை சோதிடம் தவறானது என்றே கூறிடத் தோன்றுகிறது.

            நாடிகிரந்தங்கள் என்று அழைக்கப்படும் சில புத்தகங்களைப் பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டியுள்ளது. இந்தச் சுவடிகள்,  வாழும் அனைத்து உயிரினங்களின் கணக்குகளையும் சுருக்கமாகக் கொண்டிருக்கின்றன. இது அத்தகைய பொருளின் மேலெழுந்தவாரியான தகவலோடு இருக்க, அனைத்து புத்தகங்களும் தற்போது கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவ்வாறு அவை இருப்பது உண்மையானால், எவ்வாறு அவை கிடைக்கப்பெற்றன?எவ்வாறு அவை தயாரிக்கப்பட்டன? எனும் கேள்வி எழுகின்றது.


 [*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014



No comments: