Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, December 24, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-17


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)

           
            கோள்கள் சுற்றுவட்டப்பாதையில், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு நொடியிலும் அவைகளின் இருப்பிடங்கள் மாறிக்கொண்டு இருக்கின்றன. எனில், எந்தக் காலக் கட்டத்தில், கோள்கள் தாங்கள் இருந்த இடத்திற்கு மீண்டும் வரும் எனும் கேள்வி எழுகிறது. இது கணிதம் சார்ந்தது, 7 அல்லது 8 எனும் எண்களின் மீச்சிறு பொதுப் பெருக்கம் சார்ந்தது. இத்தகைய எண்கள், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களும் மற்றும் சந்திரன் சூரிய வீதியைச் சுற்றி வரும் கால அளவைக் கொண்டதுமுறையே.,

புதன்
87.9693
நாட்கள்
வெள்ளி
224.7008
நாட்கள்
பூமி
365.2564
நாட்கள்
செவ்வாய்
686.9795
நாட்கள்
வியாழன்
4332.5848
நாட்கள்
சனி
10759.22000
நாட்கள்
சந்திரன்
27
நாட்கள் 7 மணி 45 நி 11.5 நொ

            இதன் மீச்சிறு பொது பெருக்கம் என்பது 4,320,000,000  ஆண்டுகள், அது இந்து வானியல் கணக்கான ஒரு கல்பத்திற்கு சமம். அதன்படி, அனைத்து கோள்களும், மேசத்தின் ஆரம்புள்ளிக்கு, அதாவது, கிரீன்வீச் தீர்க்க ரேகையிலிருந்து கிழக்கே 76 எனும் இடமான இலங்கைக்கு மீண்டும் வந்து சேரும். ஒரு கல்பம் என்பது 1000 சதுர்யுகம் ஆகும். ஒரு சதுர்யுகம் என்பது 4320000 ஆண்டுகள், அதன்படி கலியுகமானது 432000 ஆண்டுகள் ஆகும்.

            துவாபரயுகம்             432000  x 2 = 864000 ஆண்டுகள்

            திரேதாயுகம்              432000  x 3 = 1296000 ஆண்டுகள்

            கிருதயுகம்                 432000  x 4 = 1728000 ஆண்டுகள்



 [*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014


No comments: