Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, December 9, 2014

இராசி மண்டலம் – சோதிடக் கணக்கு-2



            சாதகக் கணிதத்தை எளிமையாக ஆக்கும் பொருட்டு சோதிட இராசி மண்டலத்தைத் தத்தமது வசதிக்கு ஏற்ப, வடிவ அட்டவணையினை சோதிட அறிஞர்கள் வடிவமைத்துள்ளனர்.
           
            பொதுவாக, கீழ்வரும் வடிவ அட்டவணைகளே உலகெங்கும் சோதிடக் கணக்கிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

1.       தென்னிந்திய முறை
2.       வட இந்திய முறை
3.       கிழக்கு இந்திய முறை (மிகக் குறைவாக)
4.       மேலை நாட்டு முறை


            பொதுவாக இந்திய முறையில் சதுர அல்லது செவ்வகக் கட்டங்களும், மேலை நாட்டு முறையில் வட்டப் பிரிவு முறையிலும் அட்டவணைகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர முன்னெடுங்காலத்தில், சுமேரியர்கள், பாபிலோனியர்கள், கிரேக்கர்கள், மாயன்கள் வெவ்வேறு குறியீட்டு முறைகளில் கையாண்டுள்ளனர். ஆனால் அவை தற்போது வழக்கொழிந்து போயுள்ளன.

வட இந்திய முறை:


            இம்முறையில், செவ்வகத்தின் மேல் மையக் கட்டமானது, மேசத்தில் தொடங்கி, கடிகார எதிர்ச்சுற்றில் வரிசையாக நகர்ந்து, மீனத்தில் முடிவடைகிறதுஒன்று(1) என குறிப்பிடப்பட்ட கட்டமானது முதல் கட்டமாகக் குறிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஒன்று (1) என்பது இலக்னத்தைப் பொருத்து இடம் மாறும். அதாவது, இலக்னம் 9-ல் அமையப் பெறுமானால், ஒன்று இருக்கும் இடம் ஒன்பதாக(9) குறிக்கப்பட்டு, தொடர்ந்து 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 என குறிக்கப்படும். ஒன்பதிற்குரிய இராசி என்னவோ அதுவே அந்த முதலிடத்தில் இருக்கும். ஆனால், 1 என்பது மேசத்தையும், 12 என்பது மீனத்தையும் குறிக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது.

கிழக்கு இந்திய முறை:


            இம்முறையிலும், செவ்வகத்தின் மேல் மையக் கட்டமானது, மேசத்தில் தொடங்கி, கடிகார எதிர்ச்சுற்றில் வரிசையாக நகர்ந்து, மீனத்தில் முடிவடைகிறதுஆனால் ஒன்று(1) என்று குறிப்பிடப்படுவது இலக்னத்தை மட்டிலும் குறிக்கப் பயன்படுகிறது. எனவே இலக்னம் எங்கிருக்கிறதோ அங்கிருந்து ஒன்று(1) தொடங்கி 12 வரையில் குறிக்கப்படுகிறது. இருப்பினும், மேசம்…… மீனத்தின் இடத்தில் மாற்றம் இருப்பதில்லை. பொதுவாக இம்முறை கிழக்கு இந்திய சோதிட முறை என அறியப்பட்டாலும், தாய்லாந்து, மலேசியா போன்ற கீழை நாடுகளிலும் இந்த வடிவிலான சோதிடக் கணிதமே பயன்பாட்டில் உள்ளது.


மேலை நாட்டு முறை:



            மேலை நாட்டு முறையில், செவ்வகக் கட்டத்திற்கு பதிலாக, வட்டம் பயன்படுத்தப்படுகிறது. இலக்னத்தின் தொடக்கப்புள்ளி முதல் இடமாகவும், அதைத் தொடர்ந்து, இரண்டு, மூன்று எனவும் தொடர்கிறது. இலக்னத்தின் தொடக்கப்புள்ளி என்பது, சோதிடக் கணித சமன்பாடுகளின் நிறுவப்பட்ட அந்த வட்டத்திற்கு உரிய பாகையாகும். இதுபற்றி தேவைப்படும்போது, நட்சத்திர ஹோரமானி, பாவங்கள் கணக்கிடுதல் முதலியவற்றைப் பார்ப்போம்.



No comments: