Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, December 22, 2014

இராசிச் சக்கரத்தில் இட ஒதுக்கீடு -2



            அவ்வாறு சாய்வாகச் சுற்றுவதால் சூரியனின் கதிர்களானது, பூமியின் வடபகுதியில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையிலும், தென் பகுதியில் ஒரு எல்லை வரையிலும் முழுமையாகப் பாய்கின்றன. அந்த எல்லையினை இரு கற்பனைக் கோடுகளினால் வரையறை செய்துள்ளனர்.

            மேலே, அதாவது வட எல்லையினை, கடக ரேகை எனவும், தென் எல்லையினை மகர ரேகை எனவும் அழைக்கின்றனர்.



            கடக ரேகை என்பது உத்திராயணம் (வட நகர்வு) முடியும் இடமாகவும்தட்சினாயணம் (தென் நகர்வு) தொடங்கும் இடமாகவும் இருக்கிறது. அதுபோலவே, மகர ரேகை என்பது தட்சினாயணம் (தென் நகர்வு) முடியும் இடமாகவும் உத்திராயணம் (வட நகர்வு) தொடங்கும் இடமாகவும் இருக்கிறது.

            இந்த ரேகைகளின் முக்கியத்துவமானதுகடகரேகையானது 23.5 பாகை வடக்கே அட்ச ரேகையை உருவாக்குகிறதுஅதாவது ஜுன் 21 அன்று பூமியின் வடபகுதியில் சூரியன் நேரடியாக தன் கதிர்களைப் பாய்ச்சும் காலம். அப்போது தென்பகுதி  மழைக்காலமாக உள்ளதுஅது போல் மகர ரேகையானது 23.5 பாகை தெற்கே அட்ச ரேகையை உருவாக்குகிறதுஅதாவது டிசம்பர் 21 அன்று பூமியின் தென்பகுதியில் சூரியன் நேரடியாக தன் கதிர்களைப் பாய்ச்சும் காலம். அப்போது வடபகுதி மழைக்காலமாக உள்ளது.  இந்தக் கோடுகள் தற்போது வரையப்பட்டவையாக இருந்தாலும், இந்தக் கணிதமானது 2000 வருடங்களுக்கு முன்பே வரையறை செய்யப்பட்டவை எனத் தெரியவருகிறது.

            புவியின் மீது இக் கோடுகள் இவ்வாறு இருக்கும்.





            பொதுவாக, பூமத்திய ரேகைக்கு வடக்கே தான் பெரும்பாலான நாடுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, சோதிடத்தில் பல கணிதங்களைக் கண்டிருந்த இந்தியா, பூமத்திய ரேகைக்கு வடக்கே தான் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, கடக ரேகையானது இந்தியாவை வடக்கு தெற்காக இரு பிரிவுகாளாகப் பிரிக்கிறது. ஜூன் மாதம் என்பது தட்சினாயணம் தொடங்கும் காலம் என்பதாலும், அது கடகத்தின் முடிவு-தொடக்கம் என்பதில் இருப்பதால், அந்தக் குறிப்பிட்ட இராசிக்கு (கடகம்) அதி முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். முடிவுதொடக்கம் எனக் குறிப்பிட்டதால், அங்கே சிம்மம் கணக்கில் கொள்ளப்படுகிறது.

            அடுத்து, பூமியானது பகலில் சூரியனால் வெப்பமும் வெளிச்சமும், இரவுப் பொழுதுகளில் சந்திரனால் குளிர்ச்சியும் வெளிச்சமும் பெறுகிறது. சந்திரன் சூரியனிடமிருந்து பெற்ற வெளிச்சத்தைப் பிரதிபலித்தாலும், ஏனையக் கோள்களை ஒப்பு நோக்குகையில் சந்திரன் மட்டுமே அதிக வெளிச்சம் தரும் கோள். எனவே, சூரியனுக்கும், சந்திரனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் எனும் கருத்து உருவாகிறது. சூரியனின் நகர்வே முதன்மை என்பதால், கடிகாரச் சுற்றில் (இராசி சக்கரச் சுற்று) சூரியனுக்கு முன்னுரிமையும், அதற்கு பின்னால் சந்திரனும் வரிசைப் படுத்தப்படுகின்றன. எனவே, சூரியனானது சிம்மத்திலும், சந்திரனானது கடகத்திலும் குறிக்கப்படுகின்றன.

            அடுத்து, பூமி மையக் கொள்கைப்படி, கோள்களின் வரிசையானதுபூமி (உடன் சந்திரன்), புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன், சனி என உள்ளது. இதில் சூரியனும் சந்திரனும் முதன்மைப் படுத்தப்பட்டு விட்டதால், மீதம் உள்ள கோள்களின் வரிசையானது பூமி (உடன் சந்திரன்), புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன், சனி என வருகிறது.

            அதேபோல், சூரிய மையக் கொள்கைப்படி வரிசையானதுசூரியன், புதன், வெள்ளி, பூமி (உடன் சந்திரன்), செவ்வாய், வியாழன், சனி என உள்ளது. இதிலும் சந்திரனும் சூரியனும் முதன்மைப் படுத்தப்பட்டுவிட்டதால், எஞ்சியவை சூரியன், புதன், வெள்ளி, பூமி (உடன் சந்திரன்), செவ்வாய், வியாழன், சனி என வருகிறது.

            எனவே இந்த வரிசையை, சூரியனிலிருந்து கடிகாரச்சுற்றில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என வரிசையாகவும், சந்திரனிலிருந்து (பூமியின் துணைக்கோள்) எதிர் சுற்றில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என வரிசையாகவும் இராசிகளில் அமைத்துள்ளனர். இதன் மூலம், 12 இராசிகளிலும், வான் மண்டலக் கோள்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

            அவ்வாறு அமைத்ததன் மூலம், சூரியனின் வட நகர்வில் அனைத்துக் கோள்களும் இடம் பெற்றுள்ளன. அதேபோல் சூரியனின் தென் நகர்விலும் அனைத்துக் கோள்களும் இடம் பெற்றுள்ளன.





            இது தான் சரியான இட ஒதுக்கீடு அல்லவா.

[கோள்கள் ஸ்தூலம் சூட்சமம் என இரண்டு வகைகளில் இருப்பதால் இரண்டும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன எனும் சோதிடக் கருத்தும் உண்டு]


No comments: