Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 28, 2015

இராசிகளில் கோள்களின் (நகர்வு) வக்கிரம் (2)




            வேறு ஏதேனும் வலைப்பதிவில் வக்கிரம் பற்றிய விரிவு இருப்பின் தெரியப்படுத்துங்கள் என்று எழுதியிருந்தேன். இன்னும் சற்றுக் கூடுதலான தகவல்களுடன் எழுதலாம் என்றுதான் அவ்வாறு கேட்டிருந்தேன். எதுவும் வரவில்லை. முடிந்தவரையில் கோள்களின் வக்கிரத்தை விளக்க முற்படுகிறேன்.

            காட்சிப்பிழை என்கிற வார்த்தை இப்பதிவுகளில் அடிக்கடி பயன்படுத்தப் படுகிறதல்லவா? அந்தக் காட்சிப் பிழைதான், வக்கிரம் எனும் சொல்லிற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. சூரியக் குடும்பக் கோள்களை இருபிரிவாகப் பிரிக்கலாம். உள்வட்டக் கோள்கள்வெளிவட்டக் கோள்கள் என இருவகைப்படுத்தலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள கோள்களான, புதனும், வெள்ளியும் உள்வட்டக் கோள்கள் என்றும், பூமிக்கு வெளியே உள்ள கோள்களான செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்றும் வெளிவட்டக் கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

            பூமியானது 365.26 நாட்களில் சூரியனைச் சுற்றிவரும் வேளையில், சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் 88 நாட்களில் சூரியனைச் சுற்றிவந்து விடுகிறது. அதேபோல், வெள்ளிக் கோளும் 225 நாட்களில் சுற்றிவந்து விடுகிறது. ஆனால் வெளிவட்டக் கோள்கள் சூரியனைச் சுற்றிவர, பூமியின் நாட்களைவிட அதிகம் எடுத்துக் கொள்கின்றன. செவ்வாய் – 687 நாட்களும், வியாழன் 11.86 ஆண்டுகளும், சனி 29.45 ஆண்டுகளும் எடுத்துக் கொள்கின்றன.

            இந்தக் கோள்களின் நகர்வை நாம் பூமியிலிருந்துதான் காண்கிறோம். சூரியன் பூமியைச் சுற்றுவதுபோல் (புவிமையக் கொள்கைகாட்சிப் பிழை), பிறக் கோள்களும் பூமியைச் சுற்றுவதுபோல்தான் காண்கிறோம். ஆனால் உண்மையில் அனைத்து கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன. ஆனாலும், நாம் பூமியிலிருந்து பார்ப்பதால் அவற்றின் சுற்று முறையில், காட்சிப்பிழை ஏற்படுகிறது. அதாவது சில நேரங்களில் சில கோள்கள் பின்னோக்கி நகர்வது போல் தோற்றம் ஏற்படுகிறது. அது சூரியன்-பூமி சுற்றுப்பாதையின் கோண அளவில் ஏற்படும் காட்சியே ஆகும்.

      எடுத்துக்காட்டாகபுதனின் சுழற்சியை எடுத்துக் கொள்வோம். புதனானது, சூரியனை 88 நாட்களில் சுற்றி வருகிறது. மறுமொழியில் சொல்வதென்றால், பூமி ஒருமுறை சுற்றி வருவதற்குள், புதன் ஏறக்குறைய நான்கு முறை சுற்றி வந்துவிடுகிறது. அவ்வாறெனில், இராசி மண்டலத்தை (இராசி சக்கரத்தை) ஓர் ஆண்டிற்குள் நான்கு முறை சுற்றி வரவேண்டும். ஆனால், சூரியன் இராசி சக்கரத்தை ஆண்டிற்கு ஒரு முறை சுற்றிவரும் நிலையில், எப்போதும் அதன் அருகிலேயே (அதிகபட்சம் ஒரு கட்ட நகர்வு) புதன் நகர்ந்து வருகிறது. அதன்படி புதனும் ஏறக்குறைய இராசி மண்டலத்தைக் கடக்க ஓர் ஆண்டுகாலமே எடுத்துக் கொள்வதுபோல் உள்ளது.


கோள்களின் வக்கிரம் தொடரும்….

Monday, January 26, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-26



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


5.         மீனத்தின் குறியீடு இரண்டு மீன்களின்# வடிவம்; கும்பத்தின் வடிவம் (தண்ணீர்) பானையுடன் உள்ள மனிதன்; மிதுனத்தின் குறியீடு ஒரு ஆணும் பெண்ணும்; (முன்னவர்) ஒரு குச்சியுடனும் (பின்னவர்) ஒரு யாழுடனும், ஒரே இருக்கையில்  இருவரும் அமர்ந்திருப்பர்; தனுசுவின் குறியீடு கீழ்பாகம் குதிரையின் உடலுடன் கூடிய ஒரு மனிதன்; மகரத்தின் குறியீடு ஒரு முதலையானது மானின் தலையுடன்; துலாத்தின் குறியீடு (கையில்) தராசுடன் உள்ள மனிதன்; கன்னியின் குறியீடு படகில் ஒரு இளம்பெண் (ஒரு கையில்) தானியக்கதிருடன் (மற்றொரு கையில்) ஒரு விளக்குடன். இதரக் குறியீடுகள் உயிரினங்களின் பெயரின் வடிவிற்கு@ உரிய வகையில் அழைக்கப்படும் வடிவில். இராசிகள் வசிக்கும் இடங்கள் என்பன, அத்தகைய உயிரினங்கள் இயல்பில் வசிக்கும் இடங்களாகும்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

      # மீனத்தின் வடிவம் என்பது இரண்டு மீன்கள் அருகருகே, ஒன்றின் வால் அருகே ஒன்றின் தலை எனும் வகையில்.

      @ அதன்படி, மேசத்தின் வடிவம் செம்மறி ஆடு; ரிசபத்தின் வடிவம் காளை; கடகத்தின் வடிவம் நண்டு; சிம்மத்தின் வடிவம் சிங்கம்; விருச்சிகத்தின் வடிவம் தேள்.

      இந்த பத்தி மற்றும் பத்தி 4, ஆகியவை ஹோரை சோதிடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக முக்கியாமாகப் பயன்படுகிறது – அதாவது தொலைந்துபோன பொருட்கள் போன்றவற்றை அறிவதற்கு.


குறிப்புகள் (நிமித்திகன்)


      இன்றையக் காலத்தில் இராசிகளின் வடிவம் என்பது பட விளக்கத்துடன் எளிதில் காணக் கிடைக்கிறது. ஆனால், (1600 ஆண்டுகளுக்கு முந்தைய) வராக மிகிரர் காலத்திலும், (130 ஆண்டுகளுக்கு முந்தைய) சிதம்பரம் அவர்களின் காலத்திலும் பட விளக்கத்தினை வார்த்தைகள் மூலமே விளக்க வேண்டியிருந்தது. அதன் பொருட்டே, குறியீடுகளை (இராசியின் வடிவங்களை) இருவரும் விளக்கியுள்ளனர்.

      சிதம்பரம் அவர்கள் குறிப்பிடும் ஹோரை சோதிடம் என்பது தற்போது மிகவும் பரவலாக உள்ள ‘பிரசன்ன’ சோதிடம் அல்லது ‘குறி சொல்லுதல்’ என்பதாகும். இது பற்றி தமது முன்னுரையில் அவர் கூறியிருக்கிறார்.




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15



Friday, January 23, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-25




வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


4.         இராசி சக்கரத்தின் (பன்னிரெண்டு) வீடுகளானது, மேசத்தின் முதற்புள்ளியிலும், அசுவனியிலும்(விண்மீன்) தொடங்கி, ஒவ்வொன்றும் ஒன்பது நட்சத்திர கால்பாகங்கள் எனும் வகையில், ஒரு முழு வட்டத்தில், காலபுருசனின் தலை, முகம், நெஞ்சு, இதயம், வயிறு, தொப்பூழ், அடிவயிறு, பிறப்புறுப்புகள், இரண்டு தொடைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு கணுக்கால்கள், இரண்டு பாதங்கள் எனக் கொண்டுள்ளது. இராசி, ஷேத்திரம், கிரகா, ரிக்ஷ, பாவம், பாவனா (எனும் பதங்கள்) அனைத்தும் ஒரே பொருளைத் தருகின்றன.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

கீழே வரும் அட்டவணை உடனடி பார்வைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இராசி
குறியீடு
உடல் உறுப்பு
மேசம்
ஆடு
தலை
ரிசபம்
எருது
முகம்
மிதுனம்
இருவர்
நெஞ்சு
கடகம்
நண்டு
இதயம்
சிம்மம்
சிங்கம்
வயிறு
கன்னி
படகுப்பெண்
தொப்பூழ்
துலாம்
தராசு
அடிவயிறு
விருச்சிகம்
தேள்
பிறப்புறுப்புகள்
தனுசு
குதிரை- மனிதன்
இரண்டு தொடைகள்
மகரம்
முதலை-மான்
இரண்டு முழங்கால்கள்
கும்பம்
குடம்
இரண்டு கணுக்கால்கள்
மீனம்
மீன்கள்
இரண்டு பாதங்கள்


இருபத்தேழு விண்மீன்கள் முறையே:-

அசுவனி
Arietis

சுவாதி
Bootis, Arturus
பரணி
Arities and Muscat

விசாகம்
Librae
கார்த்திகை
Tauri, Alcyone

அனுசம்
Scorpionis
ரோகிணி
Tauri, Aldebaran

கேட்டை
Scorpionis, Aritares
மிருகசீரிசம்
Orionis

மூலம்
Scorpionis
திருவாதிரை
Orionis

பூராடம்
Sagittarii
புனர்பூசம்
Gemini Pollux

உத்திராடம்
Sagittarri
பூசம்
Cancri

திருவோணம்
Aquilae, Altair
ஆயில்யம்
Hydrae

அவிட்டம்
Delphini
மகம்
Leonis, Regulas

சதயம்
Aquarii
பூரம்
Leonis

பூரட்டாதி
Pegasi
உத்திரம்
Leonis

உத்திரட்டாதி
Pegasi & Andremedae
அஸ்த்தம்
Corvi

ரேவதி
Piscium
சித்திரை
Virginis Spica




      இந்த விண்மீன்கள் அல்லது சந்திர வீடுகள் என்பன ஒவ்வொன்றும் நான்கு சமமான பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவை நட்சத்திர பாதங்கள் என அழைக்கப்படுகின்றன. எனவே அவை, 108 பகுதிகளாக வான்சுற்றில் இருப்பதுடன், ஒவ்வொரு வீடும் ஒன்பது பாதங்கள் அல்லது 2¼ விண்மீன்களைக் கொண்டுள்ளன. முதல் விண்மீனான அசுவனியின் அதாவது மேசத்தின் முதற்புள்ளியில், அதாவது ரேவதியின் 200,  வான் அயனத்திற்கு கிழக்கே (முன்னுரையில் குறித்தபடி) தொடங்குகிறது, அதன்படி, கிருத்திகையின் இரண்டாவது பாதம், ரிசபத்தின் முதற்புள்ளியில் தொடங்குகிறது. மிருகசீரிசத்தின் மூன்றாவது பாதம், மிதுனத்தின் முதற்புள்ளியில் தொடங்குகிறது, புனர்பூசத்தின் நான்காவது பாதம், கடகத்தின் முதற்புள்ளியில் தொடங்குகிறது, அது போலவே மற்றவையும் தொடர்கிறது.

      இராசி, ஷேத்திரம், கிரகா முதலிய பதங்கள் அனைத்தும் இராசிமண்டலத்தின் வீடுகள் என்பதுடன், அம்மண்டலத்தின் பன்னிரெண்டு பகுதிகள் அல்லது நீள்வட்ட சுற்றுப்பாதையின் 300 பாகைகள் கொண்ட பகுதிகள்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15