Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, January 11, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-21


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)


            இதன் பொருட்டு, சோதிடப் பணியாக மொழிபெயர்ப்பிற்கு முதன் முதலில் எடுத்துக் கொண்டது இந்த அறிவியலின் மிகச் சிறந்த நூலாகக் கருதப்படும், அதாவது, வராக மிகரரின் பிருகத் ஜாதகா எனும் நூலாகும். இதன் ஆசிரியரே கூறுவது போல்:-



           சாதகம் எனும் கடலைத் தடைகளுடன் கடக்க முயன்று கொண்டிருப்பவர்களின் நன்மைக்காக, பல்வேறு அலகுகளுடனும் பொருள் மடங்குடனும், இந்த சிறு படகினைக் கட்டியுள்ளேன்.” பல பத்திகள் திட்டமிட்டே பல்வேறு பொருளுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு உரைநூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் மிகச் சிறந்த ஒன்று, பட்ட உத்பலா(Bhatta Utpala); மற்றொன்று சுபோதினி ஆகும்; இரண்டும் தற்போது என்னிடம் உள்ளன; மூன்றாவது உரை நூல் முத்ராக்ஷரி, இதன் பெரும்பாலன பத்திகள் கணக்கீடுகளுடனும்அதன் எழுத்துக்கள் பல்வேறு எண்களுடனும், அந்த எண்கள் 27 விண்மீன்கள், 12 இராசிகள், 9 கோள்கள் இன்னும் பல என்றவாறு நீள்கிறது. நான்காவது உரை நூல் ஸ்ரீபட்டேயம்.

            இந்த ஆசிரியர் (வராகமிகிரர்) சோதிடம் தொடர்பாக லகு ஜாதகா எனும் சிறு நூலையும் எழுதியுள்ளார். எனவே இப்போதைய நூல் பிருகத் ஜாதகா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜாதகா அல்லது சாதகம் என்பது சோதிட சாஸ்திரத்தின் மூன்று பிரிவுகளில் ஒன்று; ஆசிரியர் மூன்று பிரிவினையும் செய்துள்ளார். மற்ற இரண்டு பிரிவுகள் முறையே, சம்ஹிதா மற்றும் வானியல் ஆகும். வராகமிகரரின் முந்தைய நூல் பிருகத் சம்ஹிதா ஆகும், அதனை நான் மொழிபெயர்த்து வருகிறேன், அவரது வானியல் நூல் பஞ்ச சித்தாந்திகா ஆகும். இது வெகு காலத்திற்கு முன்பே தொலைந்து விட்டது எனக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இதன் இரண்டு நூல்கள் கிடைக்கப்பெற்று, அவை பம்பாய் அரசால் வாங்கப்பட்டுள்ளது. முனைவர் எம். தைபாட் (M. Thibaut, Phil.Dr) அவர்கள் அதனை பதிப்பு செய்யத் தொடங்கியுள்ளதுடன், பண்டிட் சுதாகரா அவர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பினையும் செய்து வருகிறார்வராக மிகிரர் மற்றொரு நூலான யோகதாரா என்பதனையும் செய்துள்ளார். அதன் எழுத்துச் சுவடியின் நகல் முனைவர் கெர்னே (Dr. Kerne), லேய்டன், ஹாலந்து அவர்களிடம் உள்ளது.


 [*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15




No comments: