Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, January 13, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-22


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)



            நான், இந்த மொழிபெயர்ப்பில்  நம்நாட்டின் இயல்பான சொற்பதங்களை, அதாவது ஈடான சொற்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், சமஸ்கிருத சொற்பதங்களை, அவை பொதுவில் அனைவருக்கும் தெரிந்த சொற்கள் என்பதால், அப்படியே பயன்படுத்தியுள்ளேன். இந்தப் பணியில் இதன் பல்வேறு பொருட்களையும் மொழிபெயர்த்துள்ளேன். இந்தப் புத்தகம் 28 பகுதிகளைக் கொண்டது. முதல் இரண்டு பகுதிகள் சோதிடப் பதங்களின் வரையறை, அடிப்படைக் கொள்கைகள் ஆகியவற்றையும், மூன்றாவது விலங்குகள் மற்றும் தாவரங்களின் சாதகங்கள் ஆகியவற்றையும் கூறுகின்றன. நான்காவதானது, இயற்கைப் பொதுத் தன்மைகளானபிறப்பின்போதுள்ள கோள்களின் நிலையைப் பொருத்து இயல்தன்மைகள், எதிர்காலம் முதலியவற்றைக் கூறுகின்றது. சரியான இலக்கினத்தைத் தீர்மானிக்கும் பொருட்டு, பிறந்த இடம் மற்றும் அதன் தொடர்பான பிறந்த நேரம் ஆகியவற்றின் போது கோள்களின் நிலை ஆகியவைக் குறித்து ஒரு பகுதி கூறுகிறது. அடுத்த பகுதியானது, இளமைக்கால மரணமான பாலாரிஷ்டம் குறித்தும், அடுத்தது ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் கால அளவு ஆகியவைக் குறித்தும் கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் ஒருவரின் நிலையும் அவரின் சொத்து தொடர்பான நிலையையும் ஒரு பகுதி குறிக்கின்றது. அதன் பின் பல்வேறு பகுதிகள் இராஜ மற்றும் இதர யோகங்களைக் கூறுகிறது. பிராவ்ரிஜ்ய யோகம் பற்றி சொல்லும் பகுதி ஒரு சாதகன் எப்போது துறவி ஆவான் என்பது பற்றிக் குறிப்பிடுகிறது.  ஒரு மனிதனின் வாழ்வில் தீங்கு ஏற்படக்கூடிய நிலை, அதாவது எந்தக் கோள்களின் அமைப்பில் அவ்வாறு தீங்கு ஏற்படும் என்பதனை அனிஷ்டத்யாயா எனும் பகுதி சொல்கிறது. ஒரு பகுதி பெண்களுக்கானது.  இதைத் தொடர்ந்து வரும் பகுதி, ஒரு மனிதனுக்கு எப்படி மரணம் ஏற்படும் என்பதுடன் அவனது எதிர்கால வாழ்க்கையினைக் கூறுகிறது. இதற்கு அடுத்தப் பகுதியில், பிறந்த நேரம் தெரியாதவர்களுக்கு எப்படி சாதகம் கணிக்க வேண்டும் எனும் விதிமுறைகளைக் காணலாம். மேலே சொன்னவை முழுமையான பட்டியல் அல்ல, ஒவ்வொரு பகுதியினையும் சுருக்கமாகச் சொல்லிச் சென்றால் அது தவறான தீர்மானத்தை உருவாக்கி, இதன் மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைத்துவிடும்.

            இந்த மொழிப்பெயர்ப்பின் இணைப்பில், சாதக்கட்டம் அமைப்பதற்கான பல்வேறு அட்டவணைகளும் வரைபடங்களும், மற்றும் உள்ளூர் நேரத்தை உறுதி செய்வதற்காக, சூரிய நேரம், நிழல் கணிதம், இரவில் வான்வீதியில் உள்ள விண்மீன்கள் கணிதம் ஆகியவைக் கொடுக்கப்பட்டுள்ளனநாங்கள் வான்வீதியினைச் சரியான முறையில் உற்று நோக்கிக் கணிப்பதற்கான விதிமுறைகளையும் அளித்துள்ளோம். இணைப்பில் உள்ள சில அட்டவணைகள், தசாக்கள் மற்றும் புத்திகளின் கால அளவினைத் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த முன்னுரையினை முடிக்க முற்படும்போது, சாட்கில் (Zadkiel) அவர்களின் வார்த்தைகளின் படி அவர்களுக்கு கூறுங்கள், கற்றறிந்த அல்லது கற்காதக் கூட்டத்துடன் இணைந்து, ஒரு தவறானக் கூற்றினை அதாவது சோதிடம் என்பது ஆதாரமற்ற அறிவியல் என அவர்கள் கூற முற்படுவதற்கு முன், அவர்கள் உண்மையின் மதிப்பினை உணர்ந்திருப்பார்களேயானால், இங்கு சில நாட்களைச் செலவழித்து, இந்தப் பணியில் வகுத்துரைக்கப்பட்டக் கோட்பாடுகளை ஆராய்ந்து அதனைத் தங்களின் தனிப்பட்ட நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கச் சொல்லுங்கள்.”

N. சிதம்பரம்
மதுரை, 2 ஜூன் 1885.

முன்னுரை நிறைவுற்றது

 [*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]


இனி வரும் பதிவுகளில் பிருகத் ஜாதகா - மூல நூலின் மொழிபெயர்ப்பு - திரு சிதம்பரம் அய்யர் அவர்களின் குறிப்புகளோடு


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: