Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 21, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-24


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா


பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)


வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


2.         மேன்மை மிகு (#)ஞானிகள் பலர் எழுதிய சோதிட நூல்கள், அறிவார்ந்த மாணாக்கர்களுக்கு (சோதிடம் கற்பதற்கான)  விளக்காக இருக்கின்ற போதிலும், நான் (இந்த) சிறு பத்திகள் கொண்ட படகினைக் கட்ட முயல்கிறேன், இது சாதகம் எனும் கடலைக் கடக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, பல்வேறு அளவு கோளினையும் பல அரும் பதங்களையும் வழங்கிக் கடக்க உதவும்.

3.         ஹோரா எனும் வார்த்தை, அஹோராத்ரி எனும் சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்துகள் (ஒலிகள்) நீக்கியபின் திரிந்ததாகும். இந்த (சாதக) அறிவியலானது மனிதனின் முந்தைய பிறவிகளின் நல்ல மற்றும் தீய விதிப்பயனின் (கர்மா) விளைவுகளைப் பறைசாற்றுவதாகும்.



குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

(#) பராசரர், கார்கர், பத்ராயனா, சத்யாச்சார்யா மற்றும் பலர் படைத்த நூல்கள்



குறிப்புகள் (நிமித்திகன்)

() வராகமிகிரர் தமக்கு முன்பு சோதிட நூல்கள் படைத்த முன்னோர்களை நினைவு கூர்வதுடன், அக்கருத்துக்களை ஒட்டியே தாம் இந்த நூலை படைப்பதாகக் கூறுகிறார்.

() ஹோரா என்பது, அஹோராத்ரி எனும் சொல்லில் இருந்து பிரிந்து வந்த சொல். அஹோராத்ரியில்எனும் முதல் ஒலியும், ‘த்ரிஎனும் கடைசி ஒலியும் நீங்கியபின் கிடைப்பதுஹோராஎனும் சொல். அஹோராத்ரி எனும் பதத்திற்கு இரவு-பகல் என தமது முன்னுரையில் திரு சிதம்பரம் அய்யர் அவர்கள் கூறியுள்ளார். ஹோரா எனும் சொல்லே ஆங்கிலத்தில் ‘horos’ என வழக்கில் வந்து அது தொடர்புடைய செயல் எனும் கருத்தில் ‘horoscopy’ என மாற்றம் அடைந்துள்ளது. உலகம் முழுமைக்கும் சாதகம் எனும் சொல்லிற்கு ‘horoscopy’ எனும் பதமே பயன்பாட்டில் இருப்பதால், இந்த சாதக் கலை (அறிவியல்), இந்தியாவிலிருந்துதான் மேலை நாடுகளுக்கு சென்றிருக்க வேண்டும்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


                                                                                                                                             

No comments: