Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, January 23, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-25




வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


4.         இராசி சக்கரத்தின் (பன்னிரெண்டு) வீடுகளானது, மேசத்தின் முதற்புள்ளியிலும், அசுவனியிலும்(விண்மீன்) தொடங்கி, ஒவ்வொன்றும் ஒன்பது நட்சத்திர கால்பாகங்கள் எனும் வகையில், ஒரு முழு வட்டத்தில், காலபுருசனின் தலை, முகம், நெஞ்சு, இதயம், வயிறு, தொப்பூழ், அடிவயிறு, பிறப்புறுப்புகள், இரண்டு தொடைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு கணுக்கால்கள், இரண்டு பாதங்கள் எனக் கொண்டுள்ளது. இராசி, ஷேத்திரம், கிரகா, ரிக்ஷ, பாவம், பாவனா (எனும் பதங்கள்) அனைத்தும் ஒரே பொருளைத் தருகின்றன.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

கீழே வரும் அட்டவணை உடனடி பார்வைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இராசி
குறியீடு
உடல் உறுப்பு
மேசம்
ஆடு
தலை
ரிசபம்
எருது
முகம்
மிதுனம்
இருவர்
நெஞ்சு
கடகம்
நண்டு
இதயம்
சிம்மம்
சிங்கம்
வயிறு
கன்னி
படகுப்பெண்
தொப்பூழ்
துலாம்
தராசு
அடிவயிறு
விருச்சிகம்
தேள்
பிறப்புறுப்புகள்
தனுசு
குதிரை- மனிதன்
இரண்டு தொடைகள்
மகரம்
முதலை-மான்
இரண்டு முழங்கால்கள்
கும்பம்
குடம்
இரண்டு கணுக்கால்கள்
மீனம்
மீன்கள்
இரண்டு பாதங்கள்


இருபத்தேழு விண்மீன்கள் முறையே:-

அசுவனி
Arietis

சுவாதி
Bootis, Arturus
பரணி
Arities and Muscat

விசாகம்
Librae
கார்த்திகை
Tauri, Alcyone

அனுசம்
Scorpionis
ரோகிணி
Tauri, Aldebaran

கேட்டை
Scorpionis, Aritares
மிருகசீரிசம்
Orionis

மூலம்
Scorpionis
திருவாதிரை
Orionis

பூராடம்
Sagittarii
புனர்பூசம்
Gemini Pollux

உத்திராடம்
Sagittarri
பூசம்
Cancri

திருவோணம்
Aquilae, Altair
ஆயில்யம்
Hydrae

அவிட்டம்
Delphini
மகம்
Leonis, Regulas

சதயம்
Aquarii
பூரம்
Leonis

பூரட்டாதி
Pegasi
உத்திரம்
Leonis

உத்திரட்டாதி
Pegasi & Andremedae
அஸ்த்தம்
Corvi

ரேவதி
Piscium
சித்திரை
Virginis Spica




      இந்த விண்மீன்கள் அல்லது சந்திர வீடுகள் என்பன ஒவ்வொன்றும் நான்கு சமமான பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவை நட்சத்திர பாதங்கள் என அழைக்கப்படுகின்றன. எனவே அவை, 108 பகுதிகளாக வான்சுற்றில் இருப்பதுடன், ஒவ்வொரு வீடும் ஒன்பது பாதங்கள் அல்லது 2¼ விண்மீன்களைக் கொண்டுள்ளன. முதல் விண்மீனான அசுவனியின் அதாவது மேசத்தின் முதற்புள்ளியில், அதாவது ரேவதியின் 200,  வான் அயனத்திற்கு கிழக்கே (முன்னுரையில் குறித்தபடி) தொடங்குகிறது, அதன்படி, கிருத்திகையின் இரண்டாவது பாதம், ரிசபத்தின் முதற்புள்ளியில் தொடங்குகிறது. மிருகசீரிசத்தின் மூன்றாவது பாதம், மிதுனத்தின் முதற்புள்ளியில் தொடங்குகிறது, புனர்பூசத்தின் நான்காவது பாதம், கடகத்தின் முதற்புள்ளியில் தொடங்குகிறது, அது போலவே மற்றவையும் தொடர்கிறது.

      இராசி, ஷேத்திரம், கிரகா முதலிய பதங்கள் அனைத்தும் இராசிமண்டலத்தின் வீடுகள் என்பதுடன், அம்மண்டலத்தின் பன்னிரெண்டு பகுதிகள் அல்லது நீள்வட்ட சுற்றுப்பாதையின் 300 பாகைகள் கொண்ட பகுதிகள்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: