Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, February 4, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-27


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


6.         செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, சனி, வியாழன் ஆகியவை முறையே இராசி, நவாம்சம், துவதசாம்சம் மற்றும்  நவாம்சத்திலிருந்து இதர இராசிகள்( மேசத்திலிருந்து தொடங்கும் இராசி சக்கரத்தில்) முறையே மேசம், மகரம், துலாம், கடகம் ஆகியவற்றின் அதிபதிகள் ஆவர்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

            சுற்றுவட்டப்பாதையானது (3600) இராசி சக்கரத்திற்காக ஆறு பகுதிகள் எனும் முறையில் பிரிக்கப்படுவது சட்வர்க்கம் ஆகும் (பத்தி-9). அவை முறையேஒவ்வொன்றும் 30 பாகைகள் எனும் விகிதத்தில் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இராசி (பத்தி-4); ஒவ்வொரு இராசியும் 15 பாகைகள் என சரிபாதி விகிதத்தில் பிரிக்கப்பட்ட ஹோரை (பத்தி 9 மற்றும் 11); ஒவ்வொரு இராசியும் 10 பாகைகள் என மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்ட திரேக்கானம் (பத்தி 11 மற்றும் 12); ஒவ்வொரு இராசியும் 3020’ என ஒன்பது சரி பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நவாம்சம்; ஒவ்வொரு இராசியும் 2030’ என பன்னிரெண்டு சரி பாகங்களாகப் பிரிக்கப்பட்ட துவதசாம்சம்; ஒவ்வொரு இராசியும் ஒருபாகை என முப்பது சரி பாகங்களாகப் பிரிக்கப்பட்ட திரிம்சாம்சம் (பத்தி-7) ஆகும்.

            நவாம்சம்: ஒவ்வொரு இராசியும் 9 பாகங்கள் என 12 இராசிகளும் பிரிக்கப்படுகின்றன; அவை 12 x 9 அல்லது 108 பாகங்கள் என சுற்றுவட்டப்பாதையைப் பிரிக்கின்றன. நாம் ஏற்கனவே (பத்தி-4ல்) பார்த்தவாறு, 27 x 4 அல்லது 108 கால்-விண்மீன் பாகங்கள் அல்லது நட்சத்திர பாதங்கள் என பார்த்தோம்; எனவே இவை, நவாம்சத்தை நட்சத்திர பாதம் எனும் முறையில் தொடர்கிறது; அதாவது நான்கில் ஒரு பாகம் எனும் சந்திர மண்டலமாகும்இந்த 108 நவாம்சங்களும், மேசத்தை ஆரம்ப புள்ளியாகக் கொண்டு, இராசி மண்டலத்தை அந்தந்த இராசிகளின் மீது மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயணித்து முடிவடைகின்றன; மேசத்தின் முதல் நவாம்சம் மேசத்திலேயே; ரிசபமானது மகரத்தில்; மிதுனமானது துலாத்தில், கடகமானது கடகத்திலேயே. இதே வரிசையே, நான்கு இராசிகளான சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலும், அடுத்த நான்கு இராசிகளான தனுசு முதல் மீனம் வரையிலும் உள்ளது. மறுமொழியில் சொல்வதென்றால், திரேக்கானத்தின் நான்கு தொகுப்புகள் அல்லது முக்கோண இராசிகள் அதே நவாம்சத்தில் தொடங்குகின்றன; அதாவது, திரேக்கான இராசிகளான-            
            மேசம், சிம்மம், தனுசு ஆகியவை மேச நவாம்சத்தில் தொடங்குகின்றன.
            ரிசபம், கன்னி, மகரம் ஆகியவை மகர நவாம்சத்தில் தொடங்குகின்றன.
            கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை கடக நவாம்சத்தில் தொடங்குகின்றன.

            துவதசாம்சம்: ஒவ்வொரு இராசியும் பன்னிரெண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, இராசி சக்கரத்தில் உள்ள அனைத்து இராசிகளுக்கும் வழங்கப்படுகிறது. துவதாசம்சத்தின் முதல் பிரிவு அந்த இராசியின் பெயரையே பெற்றிருக்கும். அதன்படி, மேசத்தின் துவதசாம்சமானது, மேசம், ரிசபம், மிதுனம் எனத் தொடர்ந்து மீனத்தில் முடிவடையும். அதேபோல், ரிசபத்தின் துவதசாம்சமானது, ரிசபம், மிதுனம், கடகம் எனத் தொடர்ந்து, மேசத்தில் முடிவடையும். மிதுனத்தின் பிரிவானது, மிதுனம், கடகம், சிம்மம் எனத் தொடர்ந்து, ரிசபத்தில் முடிவடையும், அதுபோலவே மற்றவையும் தொடரும்.

            நவாம்சம் மற்றும் துவதசாம்சத்தின் அதிபதிகள், இராசியின் அதிபதிகளாகவே இருப்பர். அவை வீடுகளின் வரிசைப்படியே அமைந்திருக்கும். அதன்படி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒரு வீடும், மற்ற கோள்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டும் வீடுகள் இருக்கும். இந்த வீடுகளுக்கு சுவஷேத்திரம் என்று பெயர். அவை:
            செவ்வாய்மேசம் மற்றும் விருச்சகத்தின் அதிபதி
            வெள்ளிரிசபம் மற்றும் துலாத்தின் அதிபதி
            புதன்மிதுனம் மற்றும் கன்னியின் அதிபதி
            வியாழன்மீனம் மற்றும் தனுசுவின் அதிபதி
            சனிகும்பம் மற்றும் மகரத்தின் அதிபதி
            சந்திரன்கடகத்தின் அதிபதி, சூரியன்சிம்மத்தின் அதிபதியாகும்.

            இராசியின் வீடுகளை அமைப்பதில் பல்வேறு முறைகள் வழக்கில் உள்ளன. இதில் சோதிடக் கொள்கைகளை வகுத்த ஆசிரியர் ஜெய்மினி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட முறையானது தென்னிந்திய முறையாகும். அது வாசகர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுடன், மேலே சொன்ன பல்வேறு வகைகளில் பிரிக்கப்படுவதற்குறிய மேலும் வரைபடங்களை, இணைப்பில் காணலாம்.

மீனம்வியாழன்
மேசம்செவ்வாய்
ரிசபம்வெள்ளி
மிதுனம்புதன்
கும்பம் - சனி
இராசிச் சக்கரம்
கடகம்சந்திரன்
மகரம்சனி
சிம்மம்சூரியன்
தனுசுவியாழன்
விருச்சிகம் - செவ்வாய்
துலாம் - வெள்ளி
கன்னி - புதன்


குறிப்புகள் (நிமித்திகன்)

            இராசி மண்டலத்தை, மிக முக்கிய ஆறு பிரிவுகளாகக் கணக்கீடு செய்வது பற்றி ஆசிரியர் கூறுகிறார்.
1.       இராசிகோள்களின் இயல்பாக இருக்கும் நிலை
2.       ஹோரைஒவ்வொரு இராசியையும் இரண்டாகப் பிரிப்பது
3.       திரேக்காணம்ஒவ்வொரு இராசியையும் மூன்றாகப் பிரிப்பது
4.       நவாம்சம்ஒவ்வொரு இராசியையும் ஒன்பதாகப் பிரிப்பது
5.       துவதசாம்சம்ஒவ்வொரு இராசியையும் பன்னிரெண்டாகப் பிரிப்பது
6.       திரிம்சாம்சம்ஒவ்வொரு இராசியையும் முப்பதாகப் பிரிப்பது

            இந்த அடிப்படை முறைக்கு சட் வர்க்கம் (ஆறு பிரிவுகள்) என்று பெயர். இது மட்டுமின்றி இன்னும் பல பிரிவுகளிலும் இராசியானது பிரிக்கப்படுகிறது. சட்வர்க்கம் என்பது வேறு, சட்பலம் என்பது வேறு.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15




No comments: