Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, February 9, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-30


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


13.        மேசம், ரிசபம், மகரம், கன்னி, கடகம், மீனம், துலாம் இராசிகள் முறையே, சூரியன் மற்றும் இதர கோள்களின் உச்ச (உயர்) இராசிகள் ஆகும். 10வது, 3வது, 28வது, 15வது, 5வது, 27வது மற்றும் 20வது பாகைகள் முறையே பல்வேறு கோள்களின் மிக உச்ச நிலையாகும். 7வது அல்லது எதிர் இராசிகள் நீச்ச (கீழ்) இராசிகள் ஆகும்; அவைகளின் மிக நீச்ச பாகைகள் மேலே சொன்னவையே ஆகும்.



குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

            ஒரு கோள் தனது உச்ச இராசியில் மிகவும் பலம் பொருந்தியதாகவும், அதேபோல் தனது நீச்ச இராசியில் மிகவும் பலம் குறைந்ததாகவும் இருக்கும். சூரியனும் சந்திரனும் கோள்களாகக் கருதப்படுகின்றன. இந்திய சோதிடப்படி, கோள்களின் வரிசையானது, ஒருவாரத்தின் கிழமைகளின் வரிசையே ஆகும். கீழே உள்ள அட்டவணை பார்வைக்கு பயன்படும்.

கோள்கள்
உச்சம் அல்லது உயர் நிலை இராசிகள்
நீச்சம் அல்லது கீழ் நிலை இராசிகள்
மிக உச்சம் அல்லது மிக நீச்சம் அடையும் பாகைகள்
சூரியன்
மேசம்
துலாம்
10
சந்திரன்
ரிசபம்
விருச்சிகம்
3
செவ்வாய்
மகரம்
கடகம்
28
புதன்
கன்னி
மீனம்
15
வியாழன்
கடகம்
மகரம்
5
வெள்ளி
மீனம்
கன்னி
27
சனி
துலாம்
மீனம்
20



14.        நகரும் மற்றும் இதர இராசிகளில்1, முதல், மத்தி மற்றும் கடைசி நவாம்சங்கள் வர்க்கோத்தம நிலைகளில் இருக்கும்இந்த நிலையில் இருக்கும் கோள்கள் நல்ல பலன்களை அளிக்கும். சிம்மம், ரிசபம், மேசம், கன்னி, தனுசு, துலாம், கும்பம் முதலியன முறையே கோள்களின் மூலத்திரிகோணங்கள் ஆகும்2.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)


1. வர்க்கோத்தம நிலைகள் என்பன
நான்கு நகரும் (சரம்) இராசிகளான மேசம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றின் முதல் நவாம்சம்.
நான்கு நிலை (ஸ்திரம்) இராசிகளான ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவற்றின் 5வது நவாம்சம் ஆகும்.
நான்கு நகரும் மற்றும் நிலை(இருநிலைஉபயம்) இராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றின் 9வது நவாம்சம் ஆகும்.

நவாம்சங்கள் தாங்கள் இருக்கும் இராசிகளின் பெயர்களையேக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, மேசத்தின் முதல் நவாம்சம் மேசம், கடகத்தின் முதல் நவாம்சம் கடகம், என்று தொடர்வது போல்.
ரிசபத்தின் ஐந்தாவது நவாம்சம் துலாம், சிம்மத்திற்கு சிம்மம் என்று தொடர்வது போல்.
மிதுனத்தின் ஒன்பதாவது நவாம்சம் மிதுனம், கன்னிக்கு கன்னி என்று தொடர்வது போல்.

2. கீழே வரும் பட்டியல் கோள்களின் மூலத்திரிகோண இராசிகளைக் குறிக்கும்.


கோள்கள்
மூலத்திரிகோண இராசிகள்
சூரியன்
சிம்மம்
சந்திரன்
ரிசபம்
செவ்வாய்
மேசம்
புதன்
கன்னி
வியாழன்
தனுசு
வெள்ளி
துலாம்
சனி
கும்பம்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15



No comments: