Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, February 12, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-32


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]

17.        1வது, 4வது, 7வது 10வது வீடுகள் கந்தகம் அல்லது கேந்திரம் அல்லது சதுஸ்த்தயா வீடுகள் (நாற்கோணங்கள் அல்லது கோணங்கள்) எனப்படும். இந்த நான்கு வீடுகள், இருகால், நீர்வாழ், பலகால், நாற்கால் என்பனவாக இருந்தால், அவை வலிமை மிக்கவையாக இருக்கும்.


                                  குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

இருகால் இராசிகள்: மிதுனம், துலாம், கன்னி, தனுசுவின் முதல் பாதி, கும்பம்.
நீர்வாழ் இராசிகள்: கடகம், மகரத்தின் இரண்டாவது பாதி, மீனம்.
விருச்சிகம் மட்டுமே பலகால் இராசியாகும்.
நாற்கால் இராசிகள்: மேசம், ரிசபம், சிம்மம், தனுசுவின் இரண்டாவது பாதி, மகரத்தின் முதல் பாதி.


18.   கோண வீடுகளுக்கு அடுத்த வீடுகள் பணபரம் வீடுகள் எனவும், அவற்றிற்கு அடுத்த வீடுகள் ஆபோக்லிமம் வீடுகள் எனவும் வழங்கப்படும்.  4வது வீடு, ஹிபுகா(Hibuka), அம்பு(Ambu), சுக்ஹா(Sukha), வெஸ்மா(Vesma) எனப்படும். 7வது வீடு ஜமித்ரா (Jamitra) எனப்படும். 5வது வீடு திரிகோணம் எனப்படும். 10வது வீடு மெஷூரனம் (Meshoorana)  மற்றும் கர்மா எனப்படும்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

பணபரம் மற்றும் ஆபோக்லிமம் என்பவை கிரேக்க வார்த்தைகள்.
பணபர வீடுகள் முறையே 2வது, 5வது, 8வது மற்றும் 11வது வீடுகள் ஆகும்.
ஆபோக்லிம வீடுகள் முறையே 3வது, 6வது, 9வது மற்றும் 12வது வீடுகள் ஆகும்.



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: