Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, January 30, 2017

இராசிகளில் கோள்களின் (நகர்வு) வக்கிரம் (4)

டுத்து,

      சுக்கிரனும் உள்வட்டக் கோள் என்பதாலும் அதன் சுற்று முறை ஓர் ஆண்டிற்கும் குறைவு என்பதாலும், இதே கணித முறைதான் பின்பற்றப்படுகிறது.

      அதே நேரத்தில், வெளிவட்டக் கோள்களான, செவ்வாய், வியாழன், சனி முதலானவை, பூமியின் கணக்கைவிட சுற்றுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்பவை என்பதால், கணக்கீடு சற்று மாறுபட்டாலும், அடிப்படை விதியில் மாற்றம் ஏதுமில்லை.

      இந்த வக்கிரமும் வக்கிர நிவர்த்தியும் நமக்கு தோன்றுவதற்கு இராசி மண்டலத்தின் கோண அளவு மிக முக்கியப் பங்கு வகிப்பதால், இவை ஒரு குறிப்பிட்ட பாகை அளவில்தான் நடைபெறும். வக்கிரத்திற்கும் வக்கிர நிவர்த்திற்கும் இடையில், ஓய்வு நிலை அதாவது பின்னோக்கி சென்ற கோள் மீண்டு முன்னோக்கி நகர்தல் ஒரு குறிப்பிட்ட பாகையில் நடைபெறும் நிலையில் அது தன் சுழற்சியில் நின்று பின்னர் நகர்வதுபோல் தோன்றும், அந்த நிலைக்கு ஸ்தம்பிதம் அல்லது ஓய்வு என்று பெயர்.

      ஆக, புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் இயல்பான நகர்வுடன், பின்னோக்கி நகர்தல் (வக்கிரம்), ஓய்வு (ஸ்தம்பிதம்), மீண்டும் முன்னோக்கி நகர்தல் (வக்கிர நிவர்த்தி) ஆகிய நகர்வுகளையும் மேற்கொள்வதாக நமக்குத் தோன்றுகிறது.

      இது பற்றிய ஒரு அட்டவணையினைக் காண்போம்.


கோள்கள்
வக்கிர கதி நாட்கள்
(வக்கிரம் & வக்கிர நிவர்த்தி)
ஓய்வு
(ஸ்தம்பிதம்)
நாட்கள்
இராசியில் சூரியன் இருக்கும் பாகையிலிருந்து
வக்கிர ஆரம்பம்
(பாகை)
வக்கிர நிவர்த்தி
(பாகை)
புதன்
24
1
140 – 200
170 - 200
சுக்கிரன்
42
2
290
290
செவ்வாய்
80
3
2280
1320
வியாழன்
140
5
2450
1150
சனி
140
5
2510
1090
[நன்றி: முதுகலை சோதிடவியல்அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்]


      மேலே உள்ள அட்டவணைப்படி, வக்கிரம், வக்கிர நிவர்த்தி, ஸ்தம்பிதம் என அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பாகையின் அளவில், அதாவது சூரியன் இராசியில் இருக்கும் பாகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட கோண அளவில்தான் நடைபெறுகிறது.

      இந்தக் கணக்கீடுகளைக் கொண்டு கணக்கிடும்போது, இராசி மண்டலத்தில் கோள்களின் இயல்பான சூரியச் சுற்றின் கணக்கீடும், இராசி சக்கரத்தில் கோள்களின் நகர்வின் கணக்கீடும் சற்று வித்தியாசம் ஏற்பட்டாலும், அது காட்சிப்பிழை அடிப்படையில் ஏற்படும் கோண அளவினைச் சரிசெய்து, கணக்கிடப்பட்டுள்ளது. எனவே  இரண்டு கணக்கீடுகளும் சரியானதே.

      வக்கிரம் பற்றிய பதிவிற்கு இது போதும் என்று நினைக்கிறேன். தேவை ஏற்படும்போது மேலும் விளக்கங்கள் பதிவிடுவோம்.



No comments: