Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, May 30, 2015

பிருகத் ஜாதகா – தமிழில் - 42 விலங்குகள் - தாவரங்களின் பிறப்பு


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  மூன்று (தொடர்ச்சி)


விலங்குகள் மற்றும் தாவரங்களின் சாதகம்


1.     பிறக்கும் நேரத்தில்(1), அசுபக் கோள்கள்(2) பலம் மிகுந்தும்(3), சுபக் கோள்கள்(4) பலமிழந்தும், இருபாலின(அலி) கோள்களில்(5) ஒன்று ஏதேனும் ஒரு கேந்திரத்திலும் (கோணம்)(6) அல்லது இலக்கினத் தொடர்புடனும் இருக்குமானல்; அந்த உயிரினத்தின் பிறப்பானது அச்சமயத்தில் சந்திரன் இருக்கும்(8), குறிப்பிட்ட துவாதசாம்சத்தால்(7) குறிக்கப்படும்.


குறிப்பு – திரு சிதம்பரம் அவர்கள்.


(1)  அல்லது கேள்வி எழும் நேரத்தில், உரையாசிரியரின் இணைப்பு
(2)  அசுபக் கோள்கள் – II. 5. குறிப்பிடப்பட்டவாறு
(3)  கோள்களின் வலிமை - II. 19, 20 & 21. குறிப்பிடப்பட்டவாறு
(4)  சுபக் கோள்கள் - II. 5. குறிப்பிடப்பட்டவாறு
(5)  இருபாலினக் (அலி) கோள்கள் - II. 6. குறிப்பிடப்பட்டவாறு
(6)  கேந்திரம் அல்லது கோணம் - I. 17. குறிப்பிடப்பட்டவாறு
(7)  துவாதசாம்சம் - I. 6. குறிப்பிடப்பட்டவாறு
(8)  எடுத்துக்காட்டாக, ஒருவேளை பிறந்த நேரத்தில், சந்திரனானது சிம்மத்தின் 210-இல், இருப்பதாகக் கொள்வோம். ஒரு துவதசாம்சம் 2½ பாகைக் கொண்டது என்பதால், சிம்மத்தின் 210 என்பது சிம்மத்தின் ஒன்பதாவது துவாதசாம்சமாக இருக்கும். சிம்மத்தின் துவாதசாம்சம் சிம்மத்திலிருந்தே தொடங்கும் என்பதால், ஒன்பதாவது துவாதசாம்சம் மீனம் ஆக இருக்கும். அதன் படி அந்த உயிரினமானது மீனாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, தளிர்களின் எண்ணிக்கையானது, சந்திரனால் ஆளப்படும் துவாதசாம்சங்களின் எண்ணிக்கையைச் சார்ந்திருக்கும்.. இதன்படி, ஒற்றைப்படை எண்ணிக்கையிலான துவாதசாம்சங்கள் ஆண் பிறப்பையும், இரட்டைப்படை எண்ணிக்கையிலான துவாதசாம்சங்கள் பிண் பிறப்பையும் குறிக்கும்; பிறப்பிற்குப் பிறகு உடனடியாக அழியக்கூடிய எண்கள் என்பன, அசுபக் கோள்கள் அல்லது வலிமையற்ற கோள்கள் ஆகியவற்றினால் கொள்ளப்பட்டிருக்கும் துவாதசாம்ச எண்ணிக்கைகள் ஆகும்.

@வாசிப்பவர்கள், இனிவரும் காலங்களில், முன்னுரையைத் தொடர்ந்து தொகுக்கப்பட்டுள்ள பார்வைக்குறிய அட்டவணையினைப் பார்த்து வார்த்தைகளுக்குப் பொருள் அறிந்துகொள்ளவும்.


குறிப்பு - நிமித்திகன்

      சோதிடம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், சோதிடத்தின்படி, உயிரினங்கள் உருவாகும், பிறக்கும், அழியும் கால நேரங்களையும் அறிய முடியும் என்பதை வராக மிகிரர், பிருகத் ஜாதகாவில் இதற்கெனத் தனிப்பிரிவு ஒன்றை எழுதி இருப்பது வியப்பிற்குரியதாக இருக்கிறது.

    @திரு சிதம்பரம் அவர்கள் தமது மொழியாக்கத்தில், சோதிடப் பதங்களுக்கு பொருள் அல்லது விளக்கம் அறிந்து கொள்ள, ஒரு அட்டவணையினை அளித்துள்ளார். அதில் எந்த பகுதி – எந்த பத்தி என தொகுத்துள்ளார். அதனை நான் பின்னர் அளிக்கிறேன்.




பகுதி மூன்றுதொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


Saturday, May 23, 2015

இராசிகளின் விழிப்பு:




      இராசிகள் விழிக்கும் நிலையினைப் பொருத்தும், வகைப்படுத்தியுள்ளனர். அவை தலையால் விழிப்பது, காலால் விழிப்பது என்பனவாகும். சிர்ஷோதயம், பிருஷ்டோதயம் என வட மொழிச்சொற்களால் அவை பிரிக்கப்பட்டாலும், சிர்ஷோதயம் என்பது தலையால் எழுவது என்பதும், பிருஷ்டோதயம் என்பது காலால் எழுவது என்பதும் ஆகும்.

இராசிகள்
விழித்தல்
இராசிகள்
விழித்தல்
மேசம்
கால்
துலாம்
தலை
ரிசபம்
கால்
விருச்சிகம்
தலை
மிதுனம்
தலை
தனுசு
கால்
கடகம்
கால்
மகரம்
கால்
சிம்மம்
தலை
கும்பம்
தலை
கன்னி
தலை
மீனம்
இரண்டும்

       இங்கு, தலையால் எழுபவை, மனித உடலோடு தொடர்புடைய இராசிகள் (சிம்மம் – விருச்சிகம் தவிர). மற்றவை விலங்குகளோடு தொடர்புடையவை என்பதால் காலால் எழுபவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. விதிவிலக்காக, மீனம் இரண்டிற்கும் பொதுவானதாக (உபயோதயம்) குறிக்கப் பட்டுள்ளது.

      இராசிகளை, மேற்சொன்ன வகைகள் மட்டுமின்றி இன்னும் பலவகைகளில் பிரித்து வைத்துள்ளனர். இருப்பினும் மிக முக்கியமானதும், பலன் உரைப்பதில் பயன்பாட்டில் மிகவும் பயன்படுவதுமான வகைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

    இதுவரையில், இராசிகளைப் பற்றி ஓரளவு ஆராய்ந்துள்ளோம். இவற்றின் பயன்பாட்டினை ‘பலன் உரைத்தல்’ எனும் தலைப்பில் விவாதிக்கும்போது விரிவாக ஆராய்வோம்.

      அடுத்து, கோள்களின் தன்மைகள் பற்றி பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பு பிருகத் ஜாதகாவின் மூன்றாம் பகுதியைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடருவோம். 

Thursday, May 21, 2015

இராசிகளின் கால்கள்




      அடுத்து, இராசிகளை அவைக் கொண்டிருக்கும் கால்களின் எண்ணிக்கையில் வகைப்படுத்தியுள்ளதைக் காண்போம். இதில் பன்னிரெண்டு இராசிகளையும், அவற்றின் உருவ அமைப்பின் தன்மையினைக் கொண்டு, கால்களின் எண்ணிக்கையினை வகைப்படுத்தியுள்ளனர்.

இராசிகள்
உருவம்
கால்கள்
இராசிகள்
உருவம்
கால்கள்
மேசம்
ஆடு
நான்கு
துலாம்
மனிதன்
இரண்டு
ரிசபம்
எருது
நான்கு
விருச்சிகம்
தேள்
பல
மிதுனம்
இருவர்
இரண்டு
தனுசு
மனிதன்-குதிரை
ஆறு
கடகம்
நண்டு
பல
மகரம்
மீன்
ஆறு
சிம்மம்
சிங்கம்
நான்கு
கும்பம்
ஆண்
இரண்டு
கன்னி
பெண்
இரண்டு
மீனம்
இரு மீன்கள்
பல

      இங்கு, துலாம் என்பது தராசு ஏந்திய மனிதன் என்பதும், கும்பம் என்பது குடம் ஏந்திய மனிதன் என்பதும், நினைவில் கொள்க. அதன் படி அந்தந்த உருவ அமைப்பிற்கேற்ப, அவற்றின் கால்கள் தீர்மானிக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில் மிதுனம் என்பது இரட்டையர் என்பதால், நான்கு கால்கள் என இருக்க வேண்டும். ஆனால் இரு கால் இராசி என வகைப்படுத்தியுள்ளனர். மகரமும் மீனமும் மீன் வகையைச் சார்ந்தவை என்றாலும், முன்னது ஆறு எனவும், பின்னது பல எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

      இராசிகளின் உருவம் என்பது, அந்தந்த இராசிகளில் அமைந்துள்ள நட்சத்திரக் கூட்டங்களின் ஒரு வடிவ அமைப்பே ஆகும். அதாவது, எளிதில் புரிந்துகொள்ளும் பொருட்டும், அடையாளம் காணவும் எற்படுத்தப்பட்ட அமைப்பே ஆகும். ஆனால், பிற்காலத்தில், அந்த வடிவத்தின் குணாதிசயமே அந்த இராசிக்கும் இருக்கும் என பலன் சொல்ல பயன் படுத்தப்பட்டது சரியல்ல என்பதே என் முடிவு. அதுவே தான், இந்த இராசிகளின் கால்களிலும் உள்ள நிலைமை. எவரேனும் விரிவான ஏற்புடைய விளக்கம் அளித்தால் நல்லது.


Wednesday, May 20, 2015

இராசிகளில் - பகலும் இரவும்




      அடுத்து, சில இராசிகளை பகல் இராசி எனவும் சில இராசிகளை இரவு இராசி எனவும் வகைப்படுத்தியுள்ளனர். பகல் இராசி வகையைச் சார்ந்தவை பகலில் பலமுடனும், இரவு வகையைச் சார்ந்தவை இரவில் பலமுடனும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பகல் – இரவு இராசிகளைக் காண்போம்.

இராசிகள்
பொழுது
இராசிகள்
பொழுது
மேசம்
இரவு
துலாம்
பகல்
ரிசபம்
இரவு
விருச்சிகம்
பகல்
மிதுனம்
இரவு
தனுசு
இரவு
கடகம்
இரவு
மகரம்
இரவு
சிம்மம்
பகல்
கும்பம்
பகல்
கன்னி
பகல்
மீனம்
பகல்


      இதில், ஆறு இராசிகள் பகல் இராசிகள் – ஆறு இராசிகள் இரவு இராசிகள். சூரியனின் வீடான சிம்மம் பகல் எனவும், சந்திரனின் வீடான கடகம் இரவு எனவும் இருப்பது சரியானது என்றாலும், சூரியன் உச்சம் பெறும் மேசம் (செவ்வாயின் வீடு) எப்படி பகல் கணக்கில் வந்தது என்று தெரியவில்லை. அதேபோல், சனி உச்சம் பெறும் துலாம் (சூரியன் நீச்சம்) எப்படி பகல் இராசியானது என்பதும் தெரியவில்லை. அதே நேரத்தில், நான் முன்பே கூறியதுபோல், இராசிகளை கடகத்திலிருந்து சந்திரனை அடிப்படையாகவும், சிம்மத்திலிருந்து சூரியனை அடிப்படையாகவும் பிரித்துள்ளதை கவனத்தில் கொண்டால், கடகம், மிதுனம், ரிசபம், மேசம் – இரவு என்பதற்கும், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் – பகல் என்பதற்கும் கணக்கீடு பொருந்துகிறது. ஆனால், மீனம், கும்பம் – பகல் என்பதற்கும், தனுசு, மகரம் – இரவு என்பதற்கும் இக்கணக்கீடு பொருந்தவில்லை. இதற்கு ஏதேனும் கணித முறைகள் இருப்பின், அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்.