Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, May 16, 2015

இராசிகளில் – எண்ணும் - திசையும்




ஒற்றையும் இரட்டையும்

      இராசிகளை மேலும் சில முறைகளில் வகைப்படுத்தியுள்ளனர். அதில் ஒற்றைஇரட்டை முறையும் ஒன்று. இதன்படி இராசிகளில் முதல் இராசியான மேசம் ஒற்றைப்படை இராசி எனவும் அடுத்துவரும் ரிசபம் இரட்டைப்படை இராசி எனவும் பிரித்து அதன்படியே, பன்னிரெண்டு இராசிகளையும் ஒரு வரிசை அடிப்படையில் பிரித்துள்ளனர். இதற்கான அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒன்றுஇரண்டுஒன்றுஇரண்டு என வரிசை மாறாமல் வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படிமேசம்ஒற்றை எனத் தொடங்கி, மீனம்இரட்டை என முடிவடைகிறது.

மீனம்
இரட்டை
மேசம்
ஒற்றை
ரிசபம்
இரட்டை
மிதுனம்
ஒற்றை
கும்பம்
ஒற்றை
ஒற்றைஇரட்டை இராசிகள்
கடகம்
இரட்டை
மகரம்
இரட்டை
சிம்மம்
ஒற்றை
தனுசு
ஒற்றை
விருச்சிகம்
இரட்டை
துலாம்
ஒற்றை
கன்னி
இரட்டை

      இவ்வாறு பிரிக்கப்பட்டதன் அடிப்படைக் காரணம் தெரியவில்லை என்றாலும், சாதகப் பலன்களை கணிக்கும்போது இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு பலன் உரைக்கப் பயன்படுத்துகின்றனர்.


திசைகள்

      அடுத்த வகைஇராசிகளில் திசைகள். இதுவும் ஒரு அடிப்படை வரிசையில் இராசிகளை ஒரு குறிப்பிட்ட திசைகளுக்கு அதிபதி எனும் வகையில் பிரித்துள்ளனர். கிழக்கில் ஆரம்பித்து, கடிகாரச் சுற்று முறையில், தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு என தொடர் வரிசையில் வகைப்படுத்தியுள்ளனர்.


மீனம்
வடக்கு
மேசம்
கிழக்கு
ரிசபம்
தெற்கு
மிதுனம்
மேற்கு
கும்பம்
மேற்கு
திசைகள்
கடகம்
வடக்கு
மகரம்
தெற்கு
சிம்மம்
கிழக்கு
தனுசு
கிழக்கு
விருச்சிகம்
வடக்கு
துலாம்
மேற்கு
கன்னி
தெற்கு

      இதற்கும் அடிப்படைக் காரணங்கள் தெரியவில்லை என்றாலும், திசை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்க, இந்த வகைப்பிரிவு பயன்படுகிறது.


.. பிற வகைகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

No comments: