Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, May 20, 2015

இராசிகளில் - பகலும் இரவும்




      அடுத்து, சில இராசிகளை பகல் இராசி எனவும் சில இராசிகளை இரவு இராசி எனவும் வகைப்படுத்தியுள்ளனர். பகல் இராசி வகையைச் சார்ந்தவை பகலில் பலமுடனும், இரவு வகையைச் சார்ந்தவை இரவில் பலமுடனும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பகல் – இரவு இராசிகளைக் காண்போம்.

இராசிகள்
பொழுது
இராசிகள்
பொழுது
மேசம்
இரவு
துலாம்
பகல்
ரிசபம்
இரவு
விருச்சிகம்
பகல்
மிதுனம்
இரவு
தனுசு
இரவு
கடகம்
இரவு
மகரம்
இரவு
சிம்மம்
பகல்
கும்பம்
பகல்
கன்னி
பகல்
மீனம்
பகல்


      இதில், ஆறு இராசிகள் பகல் இராசிகள் – ஆறு இராசிகள் இரவு இராசிகள். சூரியனின் வீடான சிம்மம் பகல் எனவும், சந்திரனின் வீடான கடகம் இரவு எனவும் இருப்பது சரியானது என்றாலும், சூரியன் உச்சம் பெறும் மேசம் (செவ்வாயின் வீடு) எப்படி பகல் கணக்கில் வந்தது என்று தெரியவில்லை. அதேபோல், சனி உச்சம் பெறும் துலாம் (சூரியன் நீச்சம்) எப்படி பகல் இராசியானது என்பதும் தெரியவில்லை. அதே நேரத்தில், நான் முன்பே கூறியதுபோல், இராசிகளை கடகத்திலிருந்து சந்திரனை அடிப்படையாகவும், சிம்மத்திலிருந்து சூரியனை அடிப்படையாகவும் பிரித்துள்ளதை கவனத்தில் கொண்டால், கடகம், மிதுனம், ரிசபம், மேசம் – இரவு என்பதற்கும், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் – பகல் என்பதற்கும் கணக்கீடு பொருந்துகிறது. ஆனால், மீனம், கும்பம் – பகல் என்பதற்கும், தனுசு, மகரம் – இரவு என்பதற்கும் இக்கணக்கீடு பொருந்தவில்லை. இதற்கு ஏதேனும் கணித முறைகள் இருப்பின், அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்.


No comments: