Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, May 23, 2015

இராசிகளின் விழிப்பு:




      இராசிகள் விழிக்கும் நிலையினைப் பொருத்தும், வகைப்படுத்தியுள்ளனர். அவை தலையால் விழிப்பது, காலால் விழிப்பது என்பனவாகும். சிர்ஷோதயம், பிருஷ்டோதயம் என வட மொழிச்சொற்களால் அவை பிரிக்கப்பட்டாலும், சிர்ஷோதயம் என்பது தலையால் எழுவது என்பதும், பிருஷ்டோதயம் என்பது காலால் எழுவது என்பதும் ஆகும்.

இராசிகள்
விழித்தல்
இராசிகள்
விழித்தல்
மேசம்
கால்
துலாம்
தலை
ரிசபம்
கால்
விருச்சிகம்
தலை
மிதுனம்
தலை
தனுசு
கால்
கடகம்
கால்
மகரம்
கால்
சிம்மம்
தலை
கும்பம்
தலை
கன்னி
தலை
மீனம்
இரண்டும்

       இங்கு, தலையால் எழுபவை, மனித உடலோடு தொடர்புடைய இராசிகள் (சிம்மம் – விருச்சிகம் தவிர). மற்றவை விலங்குகளோடு தொடர்புடையவை என்பதால் காலால் எழுபவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. விதிவிலக்காக, மீனம் இரண்டிற்கும் பொதுவானதாக (உபயோதயம்) குறிக்கப் பட்டுள்ளது.

      இராசிகளை, மேற்சொன்ன வகைகள் மட்டுமின்றி இன்னும் பலவகைகளில் பிரித்து வைத்துள்ளனர். இருப்பினும் மிக முக்கியமானதும், பலன் உரைப்பதில் பயன்பாட்டில் மிகவும் பயன்படுவதுமான வகைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

    இதுவரையில், இராசிகளைப் பற்றி ஓரளவு ஆராய்ந்துள்ளோம். இவற்றின் பயன்பாட்டினை ‘பலன் உரைத்தல்’ எனும் தலைப்பில் விவாதிக்கும்போது விரிவாக ஆராய்வோம்.

      அடுத்து, கோள்களின் தன்மைகள் பற்றி பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பு பிருகத் ஜாதகாவின் மூன்றாம் பகுதியைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடருவோம். 

No comments: