Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, June 8, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-44 – பறவைகளின் பிறப்பு


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  மூன்று (தொடர்ச்சி)

விலங்குகள் மற்றும் தாவரங்களின் சாதகம்


4.         உதய இலக்கினத்தில் ஏதேனும் கோள்கள் இருப்பின், அந்தக் கோளின் நிறமே உயிரினத்தின் நிறமாக இருக்கும்; இல்லையெனில், இலக்கினத்திற்கு தொடர்புடைய கோளின் நிறமாக இருக்கும்; மேலும், உதய இலக்கினத்திற்கு எந்த கோளும் தொடர்பில்லாமல் இருந்தால், நவாம்சத்தின் உதய இலக்கினத்தின் நிறமாக இருக்கும். வண்ணங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள் என்பது உதய இலக்கினத்தில் உள்ள அல்லது தொடர்புடைய கோள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும் (). உயிரினத்தின் பின்புறம் உள்ள கோடுகள் எண்ணிக்கை, ஏழாம் இடத்தில் உள்ள கோள்களைப் பொறுத்து அமையும்.


குறிப்பு: திரு சிதம்பரம் அய்யர் அவர்கள்

() வலிமை மிகுந்த கோளின் நிறமே அதிகம் இருக்கும்.


5.         ஒரு பக்ஷிதிரேக்கானம்() அல்லது சர நவம்சம்() அல்லது புதனின் ஒரு நவாம்சம்() உதயமாகி அவை பலமிகுந்த கோள்களால் ஆளப்படும்போது, உதய திரேக்கானம் அல்லது நவாம்சம் சனியால் ஆளப்பெற்றாலோ அல்லது தொடர்புடன் இருந்தாலோ உயிரினத்தின் பிறப்பானது நிலப் பறவையாக இருக்கும்; அது சந்திரனால் ஆளப்பெற்றாலோ அல்லது தொடர்புடன் இருந்தாலோ நீர் பறவையாக இருக்கும்.


குறிப்பு: திரு சிதம்பரம் அய்யர் அவர்கள்


 () அவை இரண்டாவது திரேக்கானம் அல்லது மிதுனத்தின் 11-20 பாகைகள், முதல் திரேக்கானம் அல்லது சிம்மத்தின் 1-10 பாகைகள், துலாத்தின் இரண்டாவது திரேக்கானம் மற்றும் கும்பத்தின் முதல் திரேக்கானம்.
() சரம் அல்லது நகரும் நவாம்சம் அவற்றின் அதே பெயரில் குறிக்கப்படும் சரம் அல்லது நகரும் இராசிகள்.
() புதனின் நவாம்சம் என்பவை மிதுனம் மற்றும் கன்னி யாகும்.

பகுதி மூன்றுதொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: