Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, June 12, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-45 – மரங்கள் பிறக்கும் நேரம்


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  மூன்று (தொடர்ச்சி)

விலங்குகள் மற்றும் தாவரங்களின் சாதகம்

6.         உதய ராசி, சந்திரன், குரு, சூரியன் ஆகியவை பலமிழந்து இருந்தால், அவை ஒரு மரத்தின் பிறப்பைக் குறிக்கும்; உதய நவாம்சம் நிலமாகவோ அல்லது நீராகவோ இருந்தால், அத்தகைய மரம் நிலத்தின் ஒரு மரமாகவோ அல்லது நீரில் வாழும் மரமாகவோ இருக்கும் (). மரங்களின் எண்ணிக்கையானது, நவாம்சத்தின் இலக்கினாதிபதி, உதயத்திலிருந்து எத்தனை இராசிகள் விலகி இருக்கிறதோ அத்தனை எண்ணிக்கையில் இருக்கும் ().


குறிப்பு: திரு சிதம்பரம் அய்யர் அவர்கள்


 () தண்ணீர் நவாம்சம் என்பவை, கடகம், மகர நவாம்சத்தின் இரண்டாம் பகுதி, மற்றும் மீன நவாம்சம் ஆகும்.

() எடுத்துக்காட்டாக: சிம்மத்தின் 100 உதயமாக இருந்தால், உதய நவாம்சம் மிதுனமாக இருக்கும்; இது நில நவாம்சம் ஆகும். அதன்படி மரமானது வறண்ட நிலத்தில் வளரும் ஒன்றாக இருக்கும். ஒருவேளை அந்த நேரத்தில் புதன் தனுசில் இருந்தால், சிம்மத்திலிருந்து தனுசு 5 இராசிகள். எனவே மரங்களின் எண்ணிக்கை 5 ஆக இருக்கும்.

மறுபடியும், நவாம்சத்தின் இலக்கினாதிபதி உச்ச இராசியில் இருந்தாலோ அல்லது வக்கிர நிலையில் இருந்தாலோ, முதலில் கணக்கிட்ட எண்ணிக்கையானது மும்மடங்காகும்; ஆனால், அது தனது வர்க்கோத்தமத்தில் இருந்தால் அல்லது சொந்த நவாம்சம் அல்லது இராசி அல்லது திரேக்கானம் இருந்தால், அந்த எண்ணிக்கை இருமடங்காகும்: தற்போதைய எடுத்துக்காட்டின்படி, புதனானது வக்கிரத்திலோ அல்லது உச்ச இராசியிலோ, அதாவது கன்னியிலோ இருந்தால், எண்ணிக்கையானது, முறையே, சிம்மதில் இருந்து இரண்டு என்பது மும்மடங்காகும். இதன்படி நமக்கு கிடைப்பது ஆறு. ஆனால், புதனானது துலாத்தின் கடைசி நவாம்சத்தில் (அதன் ஒரு நவாம்சத்தில்) இருந்தால், எண்ணிக்கையானது 3x2=6. அது மிதுனத்தில் இருந்தால், எண்ணிக்கையானது 11x2=22; ஒருவேளை ரிசபத்தின் இரண்டாவது திரேக்கானத்தில் இருந்தால், எண்ணிக்கையானது 2x10=20 ஆகும்.


பகுதி மூன்றுதொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: