Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, August 3, 2015

பிருகத் ஜாதகா – 47 – மாதவிலக்கு


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  நான்கு

கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்


1.  மாதவிலக்கு என்பது மாதந்தோரும் ஏற்படுகிறது, ஏனெனில் செவ்வாயும் சந்திரனும்(1), அதாவது சந்திரன் ஏதேனும் ஒரு அனுபசயா(2) வீட்டில் இருக்கும்போது கருவை உண்டாக்குகின்றன. சந்திரன் சுபக் கோள்களுடனோ(4) அல்லது அதன் தொடர்புடனோ(3) இருக்குமானால், ஒரு பெண் தன் கணவனுடன் உறவு கொள்ளும் சூழல் ஏற்படும்.


குறிப்புகள் (திரு சிதம்பரம்)

(1)  பெண்களுக்கு மாதவிலக்கு என்பது சந்திரனானது செவ்வாயுடன் தொடர்பில் இருக்கும்போது, சிறப்பாக சொல்லவேண்டுமெனில் சந்திரனானது செவ்வாயிலிருந்து, 4வது, 7வது அல்லது 8வது வீட்டில் இருக்கும்போது, ஏற்படும். இது தொடர்பாக சாரவளி ஆசிரியர் சொல்வது:

 “சந்திரன் என்பது நீர்; செவ்வாய் என்பது நெருப்பு; நீரும் நெருப்பும் சேர்ந்த கலவையானது பித்தம்; பித்தமானது குருதியுடன் கலக்கும்போது, மாதவிடாய் ஏற்படுகிறது”

(2)  செவ்வாயால் தொடர்பு ஏற்படுமானால், மாதவிடாய் ஏற்படும் காலத்தில் சாதகத்தில் சந்திரன் ஏதேனும் ஒரு அனுபசய வீட்டில் இருக்கும் அல்லது பெண்ணின் சொந்தவீட்டில் இருக்குமானால், கரு தரிக்கும் வாய்ப்பு உண்டாகும். உபசய வீடுகள் என்பன, இலக்கினத்திலிருந்து 3வது, 6வது, 10வது, 11வது வீடுகள் ஆகும், இதர வீடுகள் அனுபசய வீடுகள் எனப்படும்.

(3)  அதாவது பெண் தலைகுளித்ததிலிருந்து 4வது நாளில் சந்திரனானது கணவனின் சாதகத்தில் ஏதேனும் ஒரு உபசய வீட்டிலோ அல்லது அவரது சொந்த வீட்டிலோ இருப்பது.

(4)  சந்திரனானது குருவுடன் பலமிக்க தொடர்பில் இருந்தால், கணவன் மனைவி இருவருக்கும் இடையில் உறவு ஏற்படும். உரையாசிரியர் மேலும் சொல்வதாவது:

“சந்திரனானது சூரியனுடன் தொடர்பில் இருந்தால், பெண்ணானவள், அரசரைச்சார்ந்த அதிகாரியுடன் உறவு கொள்வாள்; செவ்வாயுடன் தொடர்பில் இருந்தால், சிற்றின்பம் மிக்கவருடன் உறவு கொள்வாள்; புதனுடன் தொடர்பில் இருந்தால், ஆர்வமில்லாதவருடன் உறவு கொள்வாள்; சுக்கிரனுடன் தொடர்பில் இருந்தால், அழகானவருடன் உறவு கொள்வாள்; சனியுடன் தொடர்பில் இருந்தால், வேலையாளுடன் உறவு கொள்வாள்; பல அசுபக் கோள்களுடன் தொடர்பில் இருந்தால் அவள் வேசியாக இருப்பாள்”.


குறிப்புகள் (நிமித்திகன்)

      பிருகத் ஜாதகாவின் பகுதி நான்கு, கரு உண்டாகும் காலம், வளர்ச்சி அடையும் காலம், பிறக்கும் காலம் ஆகியவை சாதகத்தில் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.

      பெண்களுக்கான மாதவிடாய் என்பது கருமுட்டையுடன் தொடர்புடையது என்பதால், ஆசிரியர் அதிலிருந்து தொடங்குகிறார். சந்திரனும் செவ்வாயும் தொடர்பில் இருக்கும்போது மாதவிடாய் ஏற்படுவதிலிருந்து, கரு உண்டாகும் சூழல் குறித்தும் விளக்கியுள்ளார். ஆண் பெண் உறவு பற்றி குறிப்பாக விளக்கம்(4)-ல் குறிப்பிடப்பட்டவற்றில், சூரியன் என்பதால் அரசு தொடர்பு என்றும், செவ்வாய் என்பதால் காம இச்சை என்றும், புதன் என்பதால் அலி நிலை என்றும், சனி என்பதால் வேலைக்காரன் என்றும், அசுபக் கோள்கள் என்பதால் வேசி என்றும் விளக்கம் (உரையாசிரியரின் விளக்கத்தினை) அளித்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படி வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். சூரியனுடன் தொடர்பில் இருந்தால், நல்ல மன நிலையில் ஒரு வீரனைத் தழுவுவது போலவும், செவ்வாயுடன் தொடர்பில் இருந்தால், இயல்பான சேர்க்கை இச்சையுடனும், புதனுடன் தொடர்பில் இருந்தால் வேண்டா வெறுப்புடனும், சுக்கிரனுடன் தொடர்பில் இருந்தால் மனம் உவந்தும், சனியுடன் தொடர்பில் இருந்தால் உடல் அசதியுடனும், பல்வேறு அசுபக் கோள்களுடன் தொடர்பில் இருந்தால், காம இச்சை மிகுந்தும், தன் கணவனுடன் உறவு கொள்வாள் என்பதே சரியாக இருக்கலாம்.



பகுதி நான்குதொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: