Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, December 24, 2015

எந்த குழந்தை எங்கு பிறக்கும் - பிருகத் ஜாதகா – 57

     
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்

8. சந்திரன் முழு நிலவாக கடகத்தில் இருக்க, புதனானது உதய இராசியிலும், வியாழன் 4வது வீட்டிலும் இருந்தால், அந்த பிறப்பு ஒரு படகில் நிகழும். மேலும் நீர் இராசி(1) உதயமாக இருக்க, சந்திரன் 7வது வீட்டில் இருந்தால், அந்த பிறப்பும் படகில் நிகழும்.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)     அவை, கடகம், மகரத்தின் பின்பாதி மற்றும் மீனம்.


9. நீர் இராசிகள் உதயமாக இருக்க, அதாவது () சந்திரனும் நீர் இராசியில் இருக்க அல்லது () முழு நிலவாக இருந்து அது உதய இராசியோடு தொடர்பில் இருந்தால், அல்லது () சந்திரனானது 10வது, 4வது அல்லது இலக்கினத்தில் இருந்தால், அந்த பிறப்பானது நிச்சயம் நீர்வழித்தடத்தின் கரையோரம் இருக்கும்.


10. சந்திரன் உதய இராசியில் இருக்க, சனியானது 12வது வீட்டில் இருக்க, அது அசுபக் கோளுடன் தொடர்புகொண்டால், பிறப்பானது சிறையில் நிகழும். விருச்சிகம் அல்லது கடகமானது உதய இராசியாக இருக்க அங்கு சனி இருந்து, அது சந்திரனால் பார்க்கப்படுமானால், அந்த பிறப்பானது பள்ளமான பகுதியில் நிகழும்.



11.  நீர் இராசியானது உதயமாகத் தொடங்கி, அதில் சனி இருக்க, அது புதன், சூரியன் அல்லது சந்திரனோடு தொடர்பில் இருந்தால், அந்த பிறப்பானது, முறையே ஒரு வசதியான வீடு, ஒரு கோவில் அல்லது வறண்ட பூமியில் பிறக்கும்.


12. கால்களைக் கொண்ட ஒரு இராசியானது உதயமாக இருக்க, அதில் சனி இருக்க, அது செவ்வாயுடன் தொடர்பில் இருந்தால், அந்த பிறப்பானது மயான பூமியில் நிகழும்; அது சுக்கிரன் அல்லது சந்திரனோடு தொடர்பில் இருந்தால், அந்த பிறப்பானது சில அழகிய பசுமையான இடத்தில் நிகழும்; அது குருவோடு தொடர்பில் இருந்தால், அது அக்னிகோத்ர சாலையாக இருக்கும்(1); அது சூரியனோடு தொடர்பில் இருந்தால் அது அரச மாளிகை அல்லது ஒரு கோவில் அல்லது ஒரு மாட்டுக் கொட்டகையாக இருக்கும்; மேலும் அது புதனோடு தொடர்பில் இருக்குமானால், அந்த பிறப்பு ஒரு கலைஞனின் கலைக்கூடமாக இருக்கும்.

குறிப்பு(சிதம்பரம் அய்யர்):

(1)     அது ஒரு வழிபடக்கூடிய யாகசாலை.



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15

No comments: