Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, December 29, 2015

குழந்தை பிறக்கும்போது உடன் இருக்கும் செவிலியர்களின் எண்ணிக்கை - பிருகத் ஜாதகா – 62



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்


22. தாதிகளின் (செவிலியர்) எண்ணிக்கையானது, உதய இராசிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள கோள்களின் எண்ணிக்கைக்கு இருக்கும். இத்தகைய கோள்களில், அரைவட்ட கோளத்தின் பார்வையில் இருக்கும் கோள்களின் எண்ணிக்கை அளவில் தாதிகளானவர்கள், அறைக்கு வெளியேயும், அரைவட்ட கோளத்தின் பார்வைக்கு தெரியாமல் இருக்கும் கோள்களின் எண்ணிக்கை அளவில், தாதிகள் அறைக்கு உள்ளேயும் இருப்பர். வேறு சிலரின் கருத்துபடி, இந்த வரிசையானது தலைகீழாக(1) இருக்கும்.

குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)  அதாவது, இலக்கினத்திற்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள கோள்கள் அரைவட்ட கோளத்தில் பார்வையில் உள்ள கோள்கள் எனப்படும், அதற்கேற்ப, அறையில் உள்ள தாதிகளின் எண்ணிக்கை இருக்கும், அரைவட்ட கோளத்தில் பார்வைக்கு உட்படாத கோள்களின் எண்ணிக்கையில் தாதிகள் அறைக்கு வெளியே இருப்பர். வராக மிகிரர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவருடைய ஸ்வல்ப ஜாதகாவிற்கு எதிராக உள்ளது.

இலக்கினத்திற்கும் சந்திரனுக்கும் இடையில் சுபக் கோள்கள் இருந்தால், தாதிகள் நல்ல உடையணிந்து அழகாக இருப்பார்கள்; அந்த இராசிகளில் அசுபக் கோள்கள் இருந்தால், அப்பெண்கள் அழுக்கான உடையணிந்து, ஆபரணங்கள் ஏதுமின்றி இருப்பர்.

இலக்கினத்திற்கும் சந்திரனுக்கும் இடையில் ஏதேனும் கோள்கள் உச்ச நிலையிலோ அல்லது வக்கிர நிலையிலோ இருந்தால், எண்ணிக்கையானது மும்மடங்காக இருக்கும். ஆனால், அவைகளின் சொந்த வீட்டில், நவாம்சத்தில் அல்லது திரேக்கானம் முதலியவற்றில் இருந்தால், அந்த கோள்களின் எண்ணிக்கைக்கேற்ப இருமடங்காகும்.


23.  உடலின் உருவ அமைப்பு மற்றும் சிறப்புத் தன்மைகள்(1) என்பன உதய நவாம்சத்தின் அதிபதி அல்லது வலிமை மிகுந்த கோள்களைக் கொண்டு தீர்மானிக்கப்படும்; உடலின் நிறம்(2) என்பது நவாம்ச(அதிபதி)த்தில் உள்ள சந்திரனால் தீர்மானிக்கப்படும்; தலையானது3) உதய இராசியில் தொடங்கி, உடலின் உறுப்புகளின் அளவானது இராசிகள் குறிப்பிடும் பாகங்களைக் கொண்டு, தீர்மானிக்கப்படும்.

குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)  இவை பகுதி-2, பத்தி 8 முதல் 11 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
உரையாசிரியரின் கூற்றுப்படி, உதய நவாம்சத்தைக் குறிக்கும் இராசியானது வலிமையாக இருந்தால், அப்போது உடலின் சிறப்புத் தன்மையானது அத்தகைய நவாம்ச அதிபதியைக் கொண்டு தீர்மானிக்கப்படும்; அவ்வாறு இல்லையெனில், அவை வலிமை மிகுந்த கோளைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.

(2)  இது பகுதி-2, பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேறு சிலரின் கருத்துப்படி, நிறமானது சந்திரன் இருக்கும் இராசியைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும், அதாவது பகுதி-1, பத்தி 20-ன்படி. இதை உரையாசிரியர் மறுக்கிறார். எந்த மனிதனும் பச்சைக் கிளியின் நிறத்தில் இருப்பதில்லை எனக் குறிப்பிடுகிறார். நிறத்தினைத் தீர்மானிக்கும்போது, நாடு, தட்பவெப்பம், தொழில் அது போன்றவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

(3)  இங்கு உடல் பாகங்களின் பிரிவு என்பது, பகுதி-1, பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டதேயாகும், இதில் வித்தியாசம் என்பது, முந்தையது மேசத்தினைக் கொண்டு தொடங்குகிறது, தற்போதையது உதய இராசியைக் கொண்டு தொடங்குகிறது. இந்த பிரிவுகள் என்பன:

உதய இராசியானது தலையைக் குறிக்கின்றது; 2வது வீடு முகத்தைக் குறிக்கின்றது; 3வது மார்பு, 4வது இதயம், 5வது வயிறு, 6வது இடுப்பு, 7வது அடிவயிறு, 8வது பிறப்பு உறுப்புகள், 9வது இரண்டு தொடைகள், 10வது இரண்டு முழங்கால்கள், 11வது கணுக்கால்கள், 12வது இரண்டு பாதங்கள். இராசி சக்கரத்தில் உள்ள பல்வேறு இராசிகளின் தொடர்புடைய அளவீடு என்பது குறித்து பகுதி-1, பத்தி-19ல் குறிப்பிடப்பட்டதானது:




இவற்றில், 4 இராசிகள் பிரிவு அ என்பது குறுகிய இராசிகள். பிரிவு ஆ என்பது மத்திம இராசிகள், பிரிவு இ என்பதில் உள்ளவை நீண்ட இராசிகளாகும். அதன்படி, உடலின் உறுப்புகளானது, நீண்ட அல்லது குறுகியவை என இராசிகளின் நீளம் மற்றும் குறுகலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். குறுகிய அளவுள்ள இராசி அதிபதியானவர், நீண்ட இராசியில் இருந்தால், அல்லது நீண்ட அளவுள்ள இராசியின் அதிபதியானவர் குறுகிய இராசியில் இருந்தால், உடலின் உறுப்பின் அளவானது மத்திம அளவு என குறிப்பிடப்படும். ஒரு இராசியில் பல்வேறு கோள்கள் இருந்தால், அதில் வலிமையானது கணக்கில் கொள்ளப்பட வேண்டும், ஒரு இராசியில் கோளே இல்லை எனில், உடலின் உறுப்பின் அளவானது அந்த இராசியைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: