Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, January 11, 2016

சோதிடத்தில் வரையறைகளும் தேற்றங்களும் (Definitions & Theorems)



12  வீடுகளைப் பற்றி எழுதுவதற்கு முன்னால், சோதிடத்தின் வரையறைகளையும் தேற்றங்களையும் பற்றி நாம் ஒரு வரையறை செய்துகொள்ள வேண்டியுள்ளது.

சாதகத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் சில தனித்த இயல்புகளை சோதிட நூல்கள் கொடுத்துள்ளன. அவையே வழிவழியாக சோதிடர்களால் பின்பற்றப்பட்டப் படுகிறது. அந்த இயல்புகளை, சோதிட விதிகளோடு பொருத்தி, பலன் உரைக்கப் பயன்படுத்துகின்றனர். அத்தகைய தனித்த இயல்புகளுக்கு உரிய காரணங்கள் பெரும்பாலும்அது அப்படித்தான்எனும் வகையிலேயே இருக்கிறது. அல்லது அதற்குகடவுள் தன்மைகளைக்கொடுத்து வரையறை செய்துள்ளனர். வானியல் தத்துவத்தோடு அல்லது வானியல் வரைமுறையோடு இயல்புகளை வகுத்துள்ளனர் என்பது மிக அரிதாகவே உள்ளது. அப்படி எனில் அதன் நம்பகத்தன்மை முழுமை அடையாது அல்லவா?

அதே நேரத்தில் அந்த இயல்புகளைச் சோதிட விதிகளோடு பொருத்தி பலன் சொல்லும்போது 70% - 80% மெய்ப்பிக்கப்படும் வகையிலேயே உள்ளது. ஆனால் முழுமையாக 100% மெய்ப்பிக்கபடாமல் போவது, விடை தெரியாத கணிதம் போலவே உள்ளது.

புள்ளியியல் கணிதம் என்பது தகவல்கள் மற்றும் தரவுகள் (information and data) அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும். எடுத்துக்காட்டாக தேர்தல் கணிப்புகள். பெரும்பாலும் அவை மெய்பிக்கப்படுகின்றன. எப்போவதாவது கவிழ்த்து விடுகின்றன. அதாவது நான் மேலே கூறியபடி 70% - 80% மெய்ப்பிக்கப்படும் வகையிலேயே தேர்தல் கணிப்புகள் உள்ளன.

இங்கு தகவல்கள் மற்றும் தரவுகள் என்பன, தொன்று தொட்டு நிகழ்ந்தவை, அன்மையில் நடந்தவை, தற்போது நடப்பவை, ஊகங்கள் ஆகியவற்றை ஒரு ஒழுங்கான கணித அடிப்படையில் தொகுத்து, எடுத்தாளப்படுவதாகும். இந்த விதிமுறை புள்ளியியலுக்கும் பொருந்தும், சோதிடத்திற்கும் பொருந்தும்.

இந்த விதிகள்தான் பெரும்பாலும், சோதிட விதிமுறைகளில் பின்பற்றப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சூழலில் - தொன்று தொட்டு நிகழ்ந்தவை, அன்மையில் நடந்தவை, தற்போது நடப்பவை, ஊகங்கள்எனக் கிடைத்த தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், நிறைய வரைமுறைகளை சோதிடத்தில் வகுத்துள்ளனர்.

அந்த முறையில்தான் – சோதிடத்தில் வகுத்துரைக்கப்பட்ட இயல்புகளை நாம் பட்டியல் இடப்போகிறோம். எங்கெல்லாம் விளக்கங்களும், நிரூபணங்களும் கிடைக்கின்றனவோ அங்கெல்லாம் அவற்றை பதிவிட முயற்சிக்கிறேன். கற்பனையாகப் புனையப்பட்ட கதைகளைத் தவிர்க்க முயல்கிறேன். அவை எளிதில் வரையறைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள புனையப்பட்டவை, காலப்போக்கில் அவையே அடிப்படை ஆதாரம் என ஆகிப்போனதுதான் சோதிடம் பொய்யாய் போனதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று. எடுத்துக்காட்டாக - குரு-சந்திரன்-புதன் கதை.

            எனவே சோதிட வரையறைகள் மற்றும் தேற்றங்கள் என்பன தொன்று நிகழ்ந்தவை, இன்றும் நிகழ்பவை மற்றும் சோதிட நூல்களில் பதியப்பட்டவை, அவை பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டவை.


அந்த அடிப்படையி இனி வரும் பதிவுகளில், இலக்கினம் முதல் 12 வரை உள்ள வீடுகளின் இயல்புகளைத் தொகுத்து ஆராய்வோம்.

                                                                                                                  அடுத்து - இலக்கினம்

No comments: