Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, February 15, 2016

இளவயது மரணம் இல்லாத குழந்தை - பிருகத் ஜாதகா – 69


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  ஆறு

பால அரிஷ்டம் அல்லது குழந்தைப் பருவ மரணம்


12.          சந்திரனானது, மரணத்தை விளைவிக்கக் கூடிய பலமிகுந்த கோள்கள் இருக்கும் இராசிக்கு வரும்போதோ அல்லது பிறக்கும் நேரத்தில் இராசியில் அத்தகைய கோள்கள் இருக்கும்போதோ அல்லது அந்த நேரத்தில் உதய இராசியில் இருக்கும்போதோ, மரணம் நிகழும், இருப்பினும் சந்திரன், வலிமையுடனும் பார்வையுடனும் இருந்து பாவக்கோள்களால் பார்க்கப்பட்டல் அத்தகைய இறப்பானது ஒரு வருட காலத்தில் நிகழும் என முனிவர் சொல்கிறார்.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):


(1)   சந்திரனானது ஒரு வருடத்தில் 13 முறை சுற்றி வருகிறது. எப்போதெல்லாம் சந்திரன் சுற்றி வருகிறதோ அப்போது அது வலிமையுடனும், மற்றும் மேலேக் குறிப்பிட்ட மூன்று  வலிமை மிக்க அசுபக் கோள்களுடனும், இணையும்போது, மரணம் நிகழும்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்):

                உரையாசிரியர் பல்வேறு யோகங்களை, அதாவது பால அரிஷ்டத்தை உருவாக்கும் யோகங்களை குறிப்பிடுகிறார். அவை முறையே:

(1)   வலிமை மிகுந்த வியாழன் உதய இராசியில் இருந்தால், இளவயது மரணம் கிடையாது.

(2)   உதய இராசியின் அதிபதி வலிமை மிகுந்து இருக்க, அது அசுபக் கோள்களினால் பார்க்கப்படாமல் இருந்தால், ஆனால் கேந்திரங்களிலிருக்கும் சுபக் கோள்களினால் பார்க்கப்பட்டால், அந்தக் குழந்தை நீண்ட ஆயுளுடன் வாழும்.

(3)   சந்திரன் 8வது வீட்டில் இருந்தாலும், அதே நேரத்தில், வியாழன், புதன் அல்லது சுக்கிரனின் திரேக்கானத்தில் இருந்தால், அந்தக் குழந்தை நீண்ட ஆயுளுடன் வாழும்.

(4)   சந்திரன் முழு நிலவாக இருந்து, சுப இராசியில் இருக்க, சுபக் கோள்களுக்கிடையில் இருக்க, அது சுக்கிரனால் பார்க்கப்பட்டால், இளவயது மரணம் நிகழாது.

(5)   புதன் அல்லது சுக்கிரன் அல்லது வியாழன் வலிமை மிகுந்து இருப்பதுடன் ஒரு கேந்திரத்திலும் இருக்க, அது பாவக் கோள்களுடன் இருந்தாலும், இளவயது மரணம் நிகழாது.

(6)   சந்திரன் ஆறாம் வீட்டில் இருந்தாலும், அது வியாழன், வெள்ளி அல்லது புதனின் திரேக்கானத்தில் இருந்தால், இளவயது மரணம் நிகழாது.

(7)   சந்திரன் முழு நிலவாக இருந்து, அது சுபக் கோள்களுக்கிடையே இருந்தாலும், இளவயது மரணம் நிகழாது.

(8)   சந்திரன் முழு நிலவாக இருந்தாலோ அல்லது பிறப்பானது வளர்பிறை பகலில் நிகழ்ந்தாலோ அல்லது தேய்பிறை இரவாக இருந்தாலோ, சந்திரன் 6வது அல்லது 8வது வீட்டில் இருந்தாலும் இளவயது மரணம் நிகழாது.

(9)   சந்திரன் முழு நிலவாக இருந்து, கேந்திரத்தில் உள்ள வியாழனல் பார்க்கப்பட்டால், இளவயது மரணம் நிகழாது.

(10)வியாழன், சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகியவை, சுபக்கோள்களின் வீடு, நவாம்சம் அல்லது திரேக்கானத்தில் இருந்தால், இளவயது மரணம் நிகழாது.

(11)சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபதி அல்லது ஒரு சுபக் கோள் கேந்திரத்தில் இருந்தால், இளவயது மரணம் நிகழாது.

(12)அசுபக் கோள்கள், சுபக் கோள்களின் வர்கத்தில்(பிரிவுகளில்) இருந்தால், அது சுபக் கோள்களினால் பார்க்கப்பட்டால், சுப வர்க்கத்தில் இருந்தால், இளவயது மரணம் நிகழாது.

(13)இராகுவானது, 3வது, 6வது அல்லது 11 அது வீட்டில் இருக்க, அது சுபக் கோள்களினால் பார்க்கப்பட்டால் இளவயது மரணம் நிகழாது.

(14)அனைத்து கோள்களும் சிரோதய இராசியில் இருந்தால், இளவயது மரணம் நிகழாது.

(15)பிறக்கும் நேரத்தில், கோள்களின் யுத்தத்தில் (இணைவில்) சுபக்கோள் வெற்றி பெற, அது மற்றொரு சுபக் கோளினால் பார்க்கப்பட்டால், இளவயது மரணம் நிகழாது.

(16)முழு நிலவானது அனைத்துக் கோள்களினாலும் பார்க்கப்பட்டால், இளவயது மரணம் நிகழாது.


குறிப்பு (நிமித்திகன்):

யோகங்கள் என்பது கோள்களின் நிலை, இருக்கும் இடம், பார்வைகள், இணைவுகள் ஆகியவையே. அவை இருக்கும் தன்மைக்கேற்ப நன்மைதீமை பலன்களைத் தரும் என சோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. நவீன வராக மிகிரர் என அழைக்கப்பட்ட திரு பி.வி. இராமன் அவர்கள் 300 யோகங்கள் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். அவை பற்றி பின்னர் பார்ப்போம்.


அடுத்து….
ஆயுர்தயா அல்லது ஆயுட்காலம்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-2016


No comments: