Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, November 26, 2016

அஷ்டவர்க்க குறிப்புகள் - பிருகத் ஜாதகா – 85


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்பது

அஷ்டவர்க்கம்

அஷ்டவர்க்க குறிப்புகள்

பின் குறிப்புகள் – (திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)

அஷ்டவர்க்க அட்டவணையானது பொதுவாக சுப புள்ளிகளை மட்டுமே குறிப்பிட்டு தயாரிக்கப்படுகிறது – அசுபக் கோடுகளால் குறிக்கப்படும் எண்களானது, 8-லிருந்து சுப புள்ளிகளைக் குறித்தால் வருவதாக இருக்கும். அதன்படி மேற்படி அட்டவணையானது, கீழ்வருமாறு இருக்கும்.
3
3
3
3
3
செவ்வாயின் அஷ்டவர்க்கம்
4
5
5
2
1
5
2
 மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து எண்களும் சுப புள்ளிகளாகும்.

வாழ்க்கையின் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளைக் கணிக்க அஷ்டவர்க்க அட்டவணை பயன்படுகிறது. சாதகத்தின் இந்த பிரிவில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன், இதன் முழு தகவல்கள் கணிப்பில் கொள்ளப்பட வேண்டும். அஷ்டவர்க்க அட்டவணையின் சில பயன்பாடுகளை இங்கே காண்போம்.

      மேலே குறிப்பிட்டவாறு, சுப புள்ளிகளைக் கணக்கில் கொண்டு அட்டவணைத் தயாரிக்கும்போது அவை திரிகோண மற்றும் ஏகாதிபத்ய கழிவுகள்  எனும் இரண்டு கழிவுகள் அல்லது நீக்கங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் – அதாவது திரிகோண இராசியில் உள்ள எண்கள் மற்றும் செவ்வாய் முதல் சனி வரை உள்ள கோள்களின் அவைகளுக்கு உரிய இரண்டு வீடுகளில் உள்ள எண்கள்.

I.         திரிகோணம் அல்லது முக்கோணம் குறைப்பு:

பகுதி-1, பத்தி-6க்கு கொடுக்கப்பட்ட குறிப்புகளில் திரிகோண வீடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது, குறைப்பு விதிகளாவது:-

1.   முக்கோண வீடுகளில் கிடைக்கும் எண்ணிக்கையில், அவை சமமாக இல்லையெனில், எது குறைவானதோ, அதனை மற்ற வீடுகளில் இருக்கும் எண்ணிக்கையில் இருந்து கழிக்க, அதில் கிடைக்கும் மீதி.

2.   மூன்று வீடுகளில் ஏதேனும் ஒரு வீட்டில் எண்ணிக்கையே இல்லையெனில், எவ்வித குறைப்பும் செய்யக் கூடாது.

3.   மூன்று வீடுகளில் இரு வீடுகளில் எண்ணிக்கை இல்லையெனில், மூன்றாவது வீட்டின் எண்ணிக்கையை நீக்கிவிட வேண்டும்.

4.   மூன்று வீடுகளிலும் உள்ள எண்ணிக்கை சமமாக இருந்தால், அனைத்தையும் நீக்கிவிட வேண்டும்.


II.  ஏகாதிபத்திய குறைப்பு:

ஏகாதிபத்திய வீடுகள் பற்றியும் பகுதி-1, பத்தி-6-ல் குறிப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. குறைப்பு விதிகளாவது:-

1.   ஒரு கோளுக்குரிய இரண்டு வீடுகளிலும் கோள்கள் இருந்தால், குறைப்பு தேவையில்லை.

2.   ஒரு கோளுக்குரிய இரண்டு வீடுகளில், ஒரு வீட்டில் கோளும், மற்றொரு வீடு கோள் ஏதுமின்றியும் இருந்தால், (1) கோள் இருக்கும் வீட்டின் எண்ணிக்கை குறைவாகவும், கோள் இல்லாத வீட்டின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தால், எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு ஏற்ப அதிகமாக உள்ளதை சமமாக்க வேண்டும்; (2) கோள் இருக்கும் வீட்டின் எண்ணிக்கை அதிகமாகவும், கோள் இல்லாத வீட்டின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்தால், குறைவாக இருப்பதை நீக்கிவிடவேண்டும்; (3) இரண்டிலும் சமமாக இருந்தாலும், கோள் இல்லாத வீட்டின் எண்ணிக்கையை நீக்கிவிட வேண்டும்.

3.   ஒரு கோளுக்குரிய இரண்டு வீடுகளில், இரண்டிலும் கோள்கள் இல்லாமல் இருந்தால், (1) இரண்டிலும் சம எண்ணிக்கை இருந்தால், இரண்டிலும் நீக்கிவிட வேண்டும்; (2) எண்ணிக்கை சமமின்றி இருந்தால், அதிக எண்ணிக்கை உள்ளதை, குறைவாக உள்ளதிற்கு சமம் செய்யவும்.

4.   இரண்டிலும் எண்ணிக்கை ஏதுமின்றி இருந்தால், எவ்வித குறைப்பும் தேவையில்லை.

5.   கடக இராசியிலும், சிம்ம இராசியிலும், அவை முறையே சந்திரன், சூரியனுக்கு உரியவை என்பதால், ஏகாதிபத்திய குறைப்பு தேவையில்லை.



அடுத்து.. எடுத்துக்காட்டுகளுடன் அஷ்டவர்க்கம்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16


No comments: