Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, December 3, 2016

முழு (சர்வ) அஷ்டவர்க்க பலன்கள் - பிருகத் ஜாதகா – 90


  
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்பது

அஷ்டவர்க்கம்..தொடர்ச்சி

முழு (சர்வ) அஷ்டவர்க்க பலன்கள்
 (திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)


சூரியன் மற்றும் மற்ற கோள்களின் அஷ்டவர்க்கங்கள் தனித்தனியே இருப்பது பின்னாஷ்டவர்க்கம் (தனிவர்க்கம்) எனப்படும், அவைகளை ஒன்றாகக் கூட்டி வருவது சர்வாஷ்டகவர்க்கம் (முழுவர்க்கம்) எனப்படும். முழுவர்க்கத்தில் மேசத்தில் உள்ள எண்ணிக்கையானது, அனைத்து பின்னாஷ்டவர்க்கத்திலும் மேசத்தில் உள்ள எண்ணிக்கைகளின் கூடுதல் ஆகும்; அதுபோலவே, முழுவர்க்கத்தில் துலாத்தில் உள்ள எண்ணிக்கை என்பது, அனைத்து பின்னாஷ்டவர்க்கத்திலும், துலாத்தில் உள்ள எண்ணிக்கைகளின் கூடுதல் ஆகும், அதுபோலவே பிற வீடுகளின் எண்ணிக்கையும் அவை பின்னாஷ்டங்களில் இருப்பதின் கூடுதல் ஆகும். முழுவர்க்கத்தின் கூடுதல் என்பது எப்போதும் 337 ஆகவே இருக்கும்இவை ஏழு பின்னாஷ்டவர்க்கங்களின் கூடுதல் ஆகும். பின்னாஷ்டவர்க்கங்களின் எண்ணிக்கை என்பது, 48, 49, 39, 54, 56, 52, 39 என சூரியன் முதல் சனி வரையில் இருக்கும்.


சர்வாஷ்டவர்க்கத்தின் (முழு அஷ்டவர்க்கம்) மூலமாக வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளை கணிக்கமுடியும்.


1. ஒரு குறிப்பிட்ட இராசியில் எண்ணிக்கையானது 30-க்கும் மேற்பட்டு இருக்குமானால், அந்த இராசியில் கோள்கள் கடக்கும்போது, அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்; அது 25-30 என இருந்தால், அந்த விளைவானது நன்மை தீமையின்றி இருக்கும்; எண்ணிக்கையானது 25-க்கு குறைவாக இருக்குமானால், விளைவானது, தீமையானதாக இருக்கும்.


சர்வாஷ்டவர்க்கத்தில் அதிகபட்ச எண்ணிக்கை இருக்கும் இராசியில், இலக்கினமாக வரும்போது நல்ல வேளைகளை ஆரம்பிக்க வேண்டும்; திருமணம் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள், அத்தகைய இராசிக்கு உரிய நட்சத்திரத்திரங்களில் அமைவதுடன் அது அவருக்கு உரிய நட்சத்திரமாகவும் இருக்கும்.


2. 10-வது வீடு தொழிலயும், 11-வது வீடு இலாபத்தையும், 12வது நட்டத்தையும் குறிப்பதால், 10-வது வீட்டின் எண்ணிக்கையைக் காட்டிலும் 11-வது வீடு அதிகமாகவும், 12-வது வீட்டின் எண்ணிக்கை 11-வது வீட்டின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவாகவும், இலக்கினத்தின் எண்ணிக்கை, 12-வது வீட்டினைக் காட்டிலும் அதிகமாகவும் இருந்தால், அந்த மனிதரின் வாழ்க்கையானது மகிழ்ச்சியும் வளமும் பெற்று இருக்கும்இதன் விளக்கமானது, வேலைக் குறைவாகவும், இலாபம் அதிகமாகவும், ஒப்பீட்டு அளவில் நட்டம் குறைவாகவும் இருக்கும். இதற்கு நேர்மாறாக எண்ணிக்கை இருந்தால், அந்த மனிதர் மகிழ்ச்சியற்று இருப்பார்.


3. 6-வது, 8-வது, 12-வது வீடுகளைத் தவிர, மற்ற 9 வீடுகளில் உள்ள எண்ணிக்கையானது அதிகமாக இருந்தால், அந்த நிலையில் அவர் மகிழ்வுடன் இருப்பார் [பகுதி-I பத்தி-5 குறிப்பு ()].


4. மீனத்திலிருந்து, மீனம், மேசம், ரிசபம், மிதுனம் ஆகிய நான்கு இராசிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும். அதுபோலவே, கடகத்திலிருந்து நான்கு இராசிகளின் எண்ணிக்கையையும், விருச்சிகத்திலிருந்து நான்கு இராசிகளின் எண்ணிக்கையையும் கூட்டவும். இவ்வாறு கூட்டிய மூன்று பகுதிகளின் எண்ணிக்கையானது, ஒரு மனிதனின் வாழ்வில் மூன்று பகுதிகளைக் குறிக்கும். மூன்று கூடுதல்களில் எது அதிகமாக இருக்கிறதோ, அந்த பகுதியின் வாழ்க்கை மகிழ்ச்சியும் வளமுமாக இருக்கும். மூன்று அல்லது நான்கு அசுபக் கோள்கள் மீனத்திலிருந்து உள்ள நான்கு வீடுகளில் இருந்தால், அந்த மனிதர் அவர் வாழ்வின் முதல் பகுதியில் கவலைகளுடன் வாழ்வார்; கடகத்திலிருந்து நான்கு வீடுகளில் இருந்தால், வாழ்வின் இரண்டாம் பகுதியிலும், விருச்சிகத்திலிருந்து நான்கு வீடுகளில் இருந்தால், வாழ்வின் மூன்றாம் பகுதியிலும் அவ்வாறு கவலைகளுடன் வாழ்வார். மேற்படி பிரிவுகளில் சுபக் கோள்கள் இருந்தால், அப்பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பார்; சுபம் மற்றும் அசுபக் கோள்கள் இருந்தால், நன்மையும் தீமையும் கலந்து இருக்கும்.

……சர்வ அஷ்டவர்க்க பலன்கள் தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16


No comments: