Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

குறிப்பு:

நண்பர்களுக்கு, பிருகத் ஜாதகா மொழிபெயர்ப்பு முழுமையாக முடியும்வரை, சோதிட ஆய்விற்கு கொஞ்சம் ஓய்வு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, November 18, 2017

சாதகம் இல்லாதவர்கள் – இலக்கின கணக்கு - பிருகத் ஜாதகா – 202வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது9. கேள்வி கேட்கும் நேரத்தில் உதய இராசியானது ரிசபம் அல்லது சிம்மாக இருந்தால், லக்கின ஸ்புடத்தினை (இலக்கினத்தின் தீர்க்க ரேகையால்) 10-ஆல் பெருக்க வேண்டும்; அது மிதுனம் அல்லது விருச்சிகமாக இருந்தால், ஸ்புடத்தினை 8-ஆல் பெருக்க வேண்டும்; மேசம் அல்லது துலாமாக இருந்தால், 7-ஆல் பெருக்க வேண்டும்; கன்னி அல்லது மகரமாக இருந்தால், 5-ஆல் பெருக்க வேண்டும், மீதி உள்ள கோள்கள் என்றால், அந்த கோள்கள் மேசத்திலிருந்து உள்ள எண்ணிக்கையால் பெருக்க வேண்டும் (1). மேலும், உதய இராசியில் இருக்கும் கோள் வியாழன் என்றால், இலக்கின ஸ்புடத்தினை 10-ஆல் பெருக்க வேண்டும்; அது செவ்வாயாக இருந்தால் 8-ஆல், சுக்கிரனாக இருந்தால் 7-ஆல், பிற கோள்களாக இருந்தால் 5-ஆலும் பெருக்க வேண்டும். உதய இராசியில் நிறைய கோள்கள் இருந்தால், இலக்கின ஸ்புடத்தினை அத்தகைய கோள்களின் காரணியால் பெருக்க வேண்டும். அவ்வாறாக பெருக்கிவரும் அனைத்து மதிப்பினையும் கூட்டி, அதன் விடையினைக் கணக்கிடவும்(2).குறிப்புகள்:

ஆசிரியர் இந்த பத்தியிலும் இதற்கு அடுத்த பத்தியிலும் கேள்வி கேட்பவர், அவரின் மனைவி, சகோதரர், மகன், எதிரி ஆகியோரின் நட்சத்திரத்தினைக் கண்டுபிடிக்கும் முறையினை (சந்திரன் இருக்கும் நட்சத்திரம்) விளக்குகிறார். இந்த உரையில் தெரிவிக்கப்படும் எண்களானது இராசி குணகரம் கிரக குணகரம் – அதாவது இராசி மண்டலம் மற்றும் கோள்களின் காரணிகள் என அஷ்டவர்க்க பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் குறிக்கிறது.

(1)  எடுத்துக்காட்டாக, கடக இராசியாக இருந்தால், மேசத்திலிருந்து 4வது வீடு, கடகத்தின் காரணி 4. தனுசுவின் காரணி 9, கும்பத்தின் காரணி 11, மீனத்தின் காரணி 12.

(2)  இலக்கின ஸ்புடம் 5” 100 20’ எனவும், மேலும் வியாழனும் சுக்கிரனும் உதயத்தில் இருப்பதாகக் கொள்வோம். இதன்படி, இலக்கின ஸ்புடத்திலிருந்து, கிடைக்கப்பெறும் உதய இராசி கன்னியாகும். கன்னியின் காரணி 5. இதனை  5” 100 20’ –ஆல் பெருக்க, நமக்குக் கிடைப்பது 26” 210 40’. இதனை 12-ஆல் வகுக்க, நமக்குக் கிடைக்கும் மீதியானது 2” 210 20’(R.). மேலும், வியாழனின் காரணி 10, சுக்கிரனின் காரணி 7. இங்கு 5” 100 20’ என்பதை 10-ஆல் பெருக்க, நமக்குக் கிடைப்பது 53” 130 20’. இதனை 12-ஆல் வகுக்க, நமக்குக் கிடைக்கும் மீதி 5” 130 20’. மேலும், 5” 100 20’ என்பதை 7-ஆல் பெருக்க, நமக்குக் கிடைப்பது, நமக்குக் கிடைப்பது 37” 120 20’. இதனை 12-ஆல் வகுக்க நமக்குக் கிடைப்பது 1” 120 20’. இதனை 5” 130 20’- உடன் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 6” 250 40’ (G). இங்கு (R.) –உடன்  (G)-ஐக் கூட்ட நமக்குக் கிடைப்பது  9” 170 20’.நிமித்திகன்:

இந்தக் கணித முறை தலை சுற்றுகிறது அல்லவா? 1600 ஆண்டுகளுக்கு முன்பு, வராகமிகிரர் இக்கணித முறையினை கைவரப்பெற்றிருக்கிறார் என்றால், அதற்கும் முன்பே, வான் காணிதத்தில் நாம் (இந்தியர்கள்) விற்பன்னர்களாக இருந்திருக்கிறோம். ஆனால் முறையான பதிவுகளும், பதிவுகளைத் தொடர்தலும், புரிதலும் இல்லாத நிலையால் நம் மதிப்பினை நாம் இழந்து விட்டோம். பிதாகரஸை கொண்டாடும் நாம், நம் பாட்டன்களின் திறமையை மண்ணுக்கள் புதைத்துவிட்டோம். சோதிடத்தில் ஆன்மீகத்தைத் தவிர்த்து, அறிவியல் கணிப்புகளை மட்டும் தொன்றுதொட்டு செய்து வந்திருந்தால், இன்று சோதிடம் என்பது அறிவியல் கணிதம் என்பதனை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கும். வழி வகைகள் தெரிந்திருந்தும், வழக்கொழிந்து போய்விட்டோம்.


சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Friday, November 17, 2017

சாதகம் இல்லாதவர்கள் – இலக்கினம்- தொடர்கிறது - பிருகத் ஜாதகா – 201


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


8.  அல்லது, கோளின் ஸ்புடத்தினால் (தீர்க்க ரேகை) பெருக்கவும் அல்லது  உதய இராசியில் இருக்கும் வலிமை மிக்க கோளின் கிடைமட்டத்தில் நிறுத்தப்பட்ட 12 அங்குலம் உள்ள நேரான சங்கின்( நேரான குச்சி) மீது சூரியனால் ஏற்படும்  நிழலின் அங்குலம் அளவினைக் கொண்டு பெருக்கவும்; அவ்வாறு பெருக்கிக் கிடைத்தை 12-ஆல் வகுக்கவும். மீதியாக வருவது பிறக்கும்போது உள்ள உதய இராசியாகும்(1). வேறு சிலரின் கருத்துப்படி, கேள்வி கேட்பவர் உட்கார்ந்திருந்தால், அந்த நேரத்தில் உள்ள உதய இராசியிலிருந்து 7வது இராசி பிறக்கும்போது உள்ள இலக்கினமாகும். கேள்வி கேட்பவர் அந்த நேரத்தில் படுத்துக் கிடந்தால், அப்போதுள்ள உதய இராசியிலிருந்து 4வது வீடானது பிறக்கும்போது உள்ள இலக்கினமாகும். கேள்வி கேட்பவர் அந்த நேரத்தில் நின்று கொண்டு கேட்டால், 10வது வீடு இலக்கினமாகும். அவர் உட்கார்ந்த இடத்திலிருந்து எழும் நிலையில் கேட்டால், அந்த நேரத்தில் உள்ள உதய இராசியே, பிறக்கும்போது உள்ள இலக்கினமாகும்.(2).


குறிப்புகள்:

(1)  ஒருவேளை உதயத்தில் உள்ள கோளின் தீர்க்க ரேகை, அல்லது (நிறைய கோள்கள் இருந்தால்) அதில் உள்ள அதிக வலிமையுள்ள கோளின் தீர்க்க ரேகையானது 4 இராசி 10 பாகை 20 கலை என இருந்தால், அந்த நிழலின் நீளம் 4 ½ அங்குலம் என இருக்கும்; இரண்டு எண்களின் பெருக்கல் என்பது 19 வீடுகள் 16 பாகைகள் 30 கலைகள். இதனை 12-ஆல் வகுக்க நமக்குக் கிடைப்பது 7 வீடுகள், 16 பாகைகள் 30 கலைகள். இதன்படி பிறக்கும்போது உள்ள இலக்கினமானது மேசத்திலிருந்து 8வது வீடான, விருச்சிகம் ஆகும்.

(2)  சுபோதினி அவர்களின் கருத்துப்படி, 7வது, 4வது, 10வது, 1வது வீடுகளை, பட்ட-உத்பலாவின் விளக்கத்தின்படி பிரசன்ன இலக்கினத்திலிருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆனால் மேலே கூறப்பட்ட பத்தியின் முதல் பாதியில் விளக்கியவாறு இலக்கினத்தினை கண்டறிய வேண்டும், அதாவது குறிப்பு(1)-ல் கூறியபடி, விருச்சிகத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Thursday, November 16, 2017

சாதகம் இல்லாதவர்கள் – இலக்கினம் இருக்கும் இராசி - பிருகத் ஜாதகா – 200


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


6. ஒருவர் பிறக்கும்போது சந்திரன் இருக்கும் வீடானது, கேள்வி கேட்கும்போது சந்திரன் இருக்கும் இராசியினால் நீக்கப்படும் இராசிகளாக இருக்கலாம், அதாவது கேள்வி கேட்கும்போது சந்திரனானது உதய இராசியால் விலக்கப்படும்(1). ஆனால் உதய இராசியானது மீனமாக இருந்தால், மீன இராசியே, அவர் பிறக்கும்போது சந்திரன் உள்ள இராசியாக இருக்கும். (சந்தேகம் எழும் எனில்) இராசியினை, அவர் கொண்டுவந்துள்ள ஏதேனும் உணவு பொருட்கள், வேறேதேனும் வடிவங்களின் தோற்றம் அல்லது அந்த நேரத்தில் உணரப்படும் ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(2).


குறிப்புகள்:

(1)  எடுத்துக்காட்டாக, கேள்வி கேட்கும் நேரத்தில் விருச்சிகம் உதயமாகவும் மீனம் சந்திரன் இருக்கும் இராசியாகவும் இருப்பதாகக் கொள்வோம். விருச்சிகத்திலிருந்து மீனமானது 5வது வீடு; மீனத்திலிருந்து 5வது வீடு கடகம். எனவே, கடகமானது அந்த மனிதர் பிறந்தபோது சந்திரன் இருந்த இராசியாகும்.

(2)  பொருட்களின் வடிவம் அல்லது இராசியோடு தொடர்புடைய உயிரினங்கள் மற்றும் உயிரினங்கள் எழுப்பும் ஒலி இவற்றைக் கொண்டு சந்திரன் இருக்கும் இராசியினைத் தீர்மானிக்க வேண்டும். இத்தகைய எல்ல நிலைகளிலும், சோதிடரின் பரந்த அறிவானது பல்வேறு குறியீடுகளின் மூலம் அறிந்துகொள்ள பயன்படவேண்டும்.


7.     கேள்வி கேட்கும் நேரத்தில் உதய நவாம்சத்தின் அதிபதி இருக்கும் வீடே பிறந்தபோது  உள்ள உதய இராசியாகும்.(1). அல்லது பிறக்கும்போது உள்ள உதய இராசி என்பது பிரசன்ன இலக்கினத்திலிருந்து விலக்கப்படும் இராசிகள், அதாவது கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள உதய திரேக்கானத்திலிருந்து விலக்கப்பட்ட சூரியன் இருக்கும் திரேக்கானமாகும்(2).


குறிப்புகள்:
(1)  கேள்வி கேட்கும் நேரத்தில் உதய திரேக்கானமானது தனுசுவாக இருந்தால், பிறக்கும்போது உள்ள உதய இராசியானது தனுசுவாகும்.

(2)  அதாவது, கேள்வி கேட்கும் நேரத்தில் உதய திரேக்கானமானது, மிதுனத்தின் இரண்டாவது திரேக்கானமாக இருந்து, அதே நேரத்தில் சூரியன் தனுசுவின் 3வது திரேக்கானத்தில் இருப்பது. ஒன்றிலிருந்து மற்றதற்கு இடையே உள்ள திரேக்கானம் மொத்தம் 20. எனவே, பிறக்கும்போது உள்ள உதய இராசி என்பது மிதுனத்திலிருந்து 20வது வீடாகும்.; 20-லிருந்து 12-ஐக் கழிக்க, மிதுனத்திலிருந்து 8வது வீடு, அதாவது மகரத்தின் வீடு.

சாதகம் இல்லாத நிலை … தொடரும்முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17

Tuesday, November 14, 2017

சாதகம் இல்லாதவர்கள் – சந்திரன் இருக்கும் இராசி - பிருகத் ஜாதகா – 199


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


5. வேறு சிலரின் கருத்துப்படி, பிறந்த பொழுதின் சந்திர மாதத்தினை, கேள்வி கேட்கும்போது சந்திரன் நவாம்சத்தில் இருப்பதைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(1). மேலும், பிறக்கும்போது சந்திரன் இருக்கும் இராசியானது, பிரசன்ன இலக்கினம் அல்லது அதிலிருந்து 5வது வீடு அல்லது 9வது வீடு இவற்றில் அதிக வலிமை மிக்கதாகும். மூன்று வீடுகளில் பலமிக்கதை அறிவது கடினமாக இருப்பின், காலபுருசர் தத்துவத்தின்படி, கேள்வி கேட்பவர் தொட்டுக்கொண்டிருக்கும் உடலின் பாகத்திற்கு உரிய வீடு சந்திரன் இருக்கும் வீடாகும் அல்லது கேள்வி கேட்கும்போது அதுபோன்ற குறிப்பினை உணர்த்துவதைக் கருத்தில் கொண்டு வீட்டினைத் தீர்மானிக்க வேண்டும்(2).

குறிப்பு:

(1)  இதில் உள்ள விதியானது அவ்வளவாக தெளிவில்லாமல் இருக்கிறது. இது பற்றி ஆசிரியர் கூறுவதை உரையாசிரியர் விளக்கமாகக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு நவாம்சத்தினையும் 9 பாகங்களாகப் பிரித்து அதன்படி தீர்மானிக்கும் முறையினை விளக்கியிருக்கிறார்.


நவாம்ச பாகத்திற்கு பிறகு
நவாம்சம் பாகம்வரை
சந்திர மாதம்
1
மேசத்தின் – 8
துலாத்தின் -7
கார்த்திகை
2
துலாத்தின் – 7
மிதுனத்தின் – 6
மிருகசீரிசம்
3
மிதுனத்தின்-6
கடகத்தின்-5
பூசம்
4
கடகத்தின் – 5
சிம்மத்தின் – 4
மகம்
5
சிம்மத்தின் – 5
கன்னியின் – 7
பூரம்
6
கன்னியின் – 7
துலாத்தின் -6
சித்திரை
7
துலாத்தின் – 6
விருச்சிகத்தின் – 5
விசாகம்
8
விருச்சிகத்தின் -5
தனுசுவின் – 4
கேட்டை
9
தனுசுவின் – 4
மகரத்தின் – 3
பூராடம்
10
மகரத்தின் – 3
கும்பத்தின் -2
திருவோணம்
11
கும்பத்தின் -2
மீனத்தின் – 5
பூரட்டாதி
12
மீனத்தின் -5
மேசத்தின் – 8
அசுவணி

(2)  எடுத்துக்காட்டாக, அந்த நேரத்தில் உயிரினங்கள் உணர்த்தும் அல்லது கேட்கக் கூடிய ஒலி இவற்றைக் கொண்டு இராசியினைத் தீர்மானிக்க வேண்டும்.


சாதகம் இல்லாத நிலை … தொடரும்