Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, March 8, 2017

துறவறம் (சன்னியாசி) யோகங்கள் - பிருகத் ஜாதகா – 120

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  பதினைந்து

துறவறம் (சன்னியாசி) யோகங்கள்


1.  ஒருவரின் பிறப்பின் போது இராசி சக்கரத்தில் ஒரு இராசியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட(1) கோள்கள் வலிமையுடன்(2) இருக்குமானால் அது சாக்ய, அஜிவிக, பிக்ஷூக, விரிதஸ்ரவக, சக்ர, நிர்கிரந்த அல்லது வன்யாசன எனும் பிரிவுகளைக் கொண்ட துறவற நிலைகளை, முறையே அத்தொகுப்பில் உள்ள வலிமை வாய்ந்த கோள்களான செவ்வாய், புதன், வியாழன், சந்திரன், வெள்ளி, சனி அல்லது சூரியன் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கும். (3) அத்தகைய வலிமை மிக்க ஒரு கோள், பிறப்பின் போது கோள்களின் யுத்தத்தில் தோற்றுபோயிருந்தால், சாதகர் சிறிது காலம் கழித்து அத்தகைய துறவற நிலையில் இருந்து விலகி மீண்டும் பழைய வாழ்க்கைக்கு வருவார்.


குறிப்புகள்:

(1)  அதாவது 5, 6, அல்லது 7 கோள்கள்

(2)  எந்தக் கோளும் வலிமையற்று இருந்தால், சன்னியாசி யோகம் இருக்காது.

(3)  சன்னியாசி வாழ்க்கையை வலிமை மிக்க கோள் முதலில் தீர்மானிக்கும், அதற்கு அடுத்து வலிமை மிக்க கோள், அதன்பின் அடுத்தது என தீர்மானிக்கும். முதல் மாற்றம் என்பது வலிமை மிக்க கோளின் தசை அல்லது அந்திரத்தில் நிகழும்; அதற்கு அடுத்தடுத்த மாற்றம் என்பது அதற்குரிய கோள்களின் அந்திரத்தில் நிகழும். யோகக் கோளானது தனித்து வலிமைமிக்க கோளாக இருந்து, கோள்களின் யுத்தத்திக் தோல்வி அடையாமல் இருந்தால், அக் குறிப்பிட்ட சன்னியாசமானது அவரது இறப்பு வரை தொடரும்.  நாம் பல்வேறு வகையான சன்னியாச முறைகளை இப்போது காண்போம்:

(அ) சக்ய – சிவப்பு அங்கி அணிந்த புத்த சன்னியாசி

(ஆ) அஜிவிக – சமனத் துறவி; இது வைஷ்னவ துறவிக்கும் பொருந்தும்

(இ) பிக்ஷுக – ஒரு பிராமணத் துறவி – அவரது வீட்டையும் குடும்பத்தினையும் விட்டுவிலகி பிச்சை எடுத்து வாழ்பவர்

(ஈ) விரிதஸ்ரவக – காபாலிகர் என அழைக்கப்படுபவர் – சிவனை வழிபடுபவர்

(உ) சக்ர – சக்ரதாரர் என அழைக்கப்படுபவர் – சக்கரப்படை அணிந்தவர்

(ஊ) நிர்கிரந்த – நிர்வாண சன்னியாசி

(எ) வன்யாசன – தியானத்தில் ஈடுபடுவதுடன், காடுகளில் கிடைக்கும் கிழங்குகள் பழங்களை உண்டு வாழ்பவர்.

துறவறம் (சன்னியாசி) யோகம்.. தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: