Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, March 10, 2017

அரச - சன்னியாசி யோகம் - பிருகத் ஜாதகா – 122


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  பதினைந்து

துறவறம் (சன்னியாசி) யோகங்கள்தொடர்ச்சி….

4. வியாழன், சந்திரன், உதய இராசி ஆகியவை, சனியால் பார்க்கப்பட, இலக்கினத்திலிருந்து வியாழன் 9வது வீட்டில் இருக்கும் நிலையிலும், ஒரு இராஜ யோகத்திலும், ஒருவர் பிறந்திருந்தால் அவர் ஒரு அறிவியல் ஆசானாக இருப்பார்(1). மேலும், இலக்கினத்திலிருந்து சனி 9வது வீட்டில் இருக்க அது மற்ற கோள்களால் பார்க்கப்படாமலும், இராஜ யோகத்திலும் ஒருவர் பிறந்திருந்தால் அவர் ஒரு பேரரசனாகவும் சன்னியாசியாகவும்(2) இருப்பார்.


குறிப்புகள்:

(1)    சாதகத்தில் இராஜ யோகமும் சன்னியாசி யோகமும் இருந்தால், முந்தையது நிகழாமல், பிந்தையதே நிகழும்எடுத்துக்காட்டாக, வராக மிகிரர், கனடபுத்தர், பஞ்சஷிகர், பிரம்ம-குபதர் மற்றும் பலர் போன்றவர்கள். சாதகத்தில் இரண்டு இராஜ யோகங்களும் ஒரு சன்னியாசி யோகமும் இருந்தால், அவர் ஒரு அரசராகவும், அறிவியல் ஆசானாகவும் இருப்பார்எடுத்துக்காட்டாக, ஜனகர், காசிராஜர், சுசிதவஜர் மற்றும் பலர் போன்றவர்கள்.

(2)    சாதகத்தில் இராஜ யோகம் எதுவும் இல்லாமல், சன்னியாசி யோகம் மட்டும், இங்கு குறிப்பிட்டவாறு இருந்தால், அவர் சன்னியாசி ஆவார்.


சன்னியாசி யோகம் முற்றும்



பூர்வ பாகம் எனும் முதல் பாகம் முற்றும்


அடுத்து பிருகத் ஜாதகத்தின் இரண்டாம் பாகம்


குறிப்பு (நிமித்திகன்):

பிருகத் ஜாதகத்தின் முதல் பாகம் முடிவுற்றது. அதன் இரண்டாம் பாகம் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடரும். இம்முறை, நீண்ட காலதாமதம் ஆகாமல், இந்த ஆண்டின் இறுதிக்குள் பிருகத் ஜாதகத்தின் தமிழாக்கம் முழுமையும் முடித்துவிட இருக்கின்றேன். அதனைத் தொடர்ந்து மந்திரேஸ்வரரின் பலதீபிகா அல்லது மகரிஷி பராசரா ஹோரா இவற்றில் ஒன்றினைத் தமிழில் தர இருக்கின்றேன். இந்த வலைப்பூவின் மிக முக்கிய நோக்கமான சோதிட ஆய்வுத் தலைப்புகளிலும் தொடர்ந்து எழுத வேண்டியுள்ளது. உடல் நலமும் ஒத்துழைக்கும் என்று எண்ணுகிறேன்.  உங்களின் ஆதரவும் தொடரும் என்று நினைக்கிறேன்.



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: