Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, May 19, 2017

சந்திரனைப் பார்க்கும் கோள்களின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 144


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள்


1. பிறக்கும் நேரத்தில், சந்திரன் மேசத்தில் இருந்து அது செவ்வாயால் பார்க்கப்படுமானால் அந்த மனிதர் அரசன் ஆவார்; அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் கற்றறிந்த அறிஞர் ஆவார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், அரசனுக்கு நிகரானவராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், நல்ல நன்னடத்தை உள்ள மனிதராக இருப்பார்; அல்லது பிறரின் கருத்துப்படி வியாபாரியாக இருப்பார்; சனியால் பார்க்கப்படுமானால் அவர் திருடனாக இருப்பார்; சூரியனால் பார்க்கப்படுமானால், அவர் ஏழையாக இருப்பார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரன் ரிசபத்தில் இருந்து அது செவ்வாயால் பார்க்கப்படுமானால் அந்த மனிதர் ஏழையாக இருப்பார்; அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் திருடனாக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், மற்றவர்களால் மதிக்கப்படுபவராக இருப்பார்; அல்லது பிறரின் கருத்துப்படி பேரரசராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அரசராக இருப்பார்; சனியால் பார்க்கப்படுமானால் செல்வந்தராக இருப்பார்; சூரியனால் பார்க்கப்படுமானால், அவர் வேலையாளாக இருப்பார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரன் மிதுனத்தில் இருந்து அது செவ்வாயால் பார்க்கப்படுமானால் அந்த மனிதர் ஆயுத வணிகராக இருப்பார்; அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் அரசராக ஆவார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், கற்றறிந்தவராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், பயமற்றவராக இருப்பார்; சனியால் பார்க்கப்படுமானால் அவர் நெசவாளியாக இருப்பார்; சூரியனால் பார்க்கப்படுமானால், அவர் ஏழையாக இருப்பார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரன் கடகத்தில் இருந்து அது செவ்வாயால் பார்க்கப்படுமானால் அந்த மனிதர் வீரமிக்க படைவீரராக இருப்பார்; அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் கற்றறிந்த எழுத்தாளராக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், கற்றறிந்தவராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் அரசனாக ஆவார்; சனியால் பார்க்கப்படுமானால் அவர் ஆயுதங்களைக் கொண்டு வாழ்க்கையை நடுத்துவார்; சூரியனால் பார்க்கப்படுமானால், கண் நோயால் பாதிக்கப்பட்டவராக இருப்பார்.


கோள்களின் பார்வை பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: