Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, July 10, 2017

நவாம்சத்தின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 163


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2

பகுதி   -  இருபத்தொன்று

வர்க்கங்களில் கோள்களின் பலன்கள் தொடர்ச்சி

7.     ஒருவர் பிறக்கும்போது உதய நவாம்சம்(1) மேசமாக இருந்தால், அவர் திருடனாக இருப்பார்; ரிசபமாக இருந்தால் அவர் தமது வருவாயினை மகிழ்வுடன் செலவு செய்வார்; அது மிதுனமாக இருந்தால், கற்றறிந்தவராக இருப்பார்; அது கடகமாக இருந்தால் சொத்துக்கள் கொண்டிருப்பார்; சிம்மமாக இருந்தால் அரசராக இருப்பார்; கன்னியாக இருந்தால் அலியாக இருப்பார்; துலாமாக இருந்தால் சண்டையிடுவதில் வல்லவராக இருப்பார்; அது விருச்சிகமாக இருந்தால், சுமை தூக்குவதின் மூலம் வாழ்வார்; அது தனுசுவாக இருந்தால் அவர் அடிமையாக இருப்பார்; மகரமாக இருந்தால் அவர் பாவியாக இருப்பார்; கும்பமாக இருந்தால், தீய தொழில்கள் செய்வார்; மீனமாக இருந்தால் பயமற்றவராக இருப்பார்.

ஆனால், உதய நவாம்சமானது அதே நேரத்தில் வர்க்கோத்தமம் ஆகி இருந்தால்(2) அந்த மனிதர் அக்குறிப்பிட்ட நவாம்சத்திற்கு உரிய குணமுள்ள மனிதருக்கு தலைவராக இருப்பார்(3).

உதய துவதசாமசங்களும் அவை உதய இராசியாக இருந்தால், அதே பலன்களையே கொடுக்கும்(4).


குறிப்புகள்:

(1)  அந்த நவாம்சங்களான மேசம், ரிசபம், மிதுனம் போன்றவை, அவைத் தவிர மற்ற நவாம்சங்களில் இருப்பது. அதாவது வர்க்கோத்தமம் நீங்களாக.

(2)  அதாவது குறிப்பு (1)-ல் நீக்கப்பட்டவை.

(3)  எடுத்துக்காட்டாக, அந்த மனிதர் திருடர்களின் தலைவர் போன்றவை.

(4)  பத்தி-20, பகுதி-18 மற்றும் பகுதி 17.


வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: