Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, July 25, 2017

நோய்கள் ஏற்படும் நிலை - பிருகத் ஜாதகா – 172


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி

6.     ஒருவர் பிறக்கும் நேரத்தில், சந்திரன் 10வது வீட்டிலும், சுக்கிரன் 7வது வீட்டிலும், அசுபக் கோள்கள்(1) 4வது வீட்டிலும் இருந்தால், அந்த மனிதன் தன் குடும்பத்தினை அழித்துவிடுவார்(2). பிறக்கும் நேரத்தில், சனி ஒரு கேந்திர வீட்டில் இருக்க, அது திரேக்காணத்தின் அதிபதியாக புதன் இருக்கும் வீட்டினைப் பார்த்தால், அந்த மனிதர் ஓவியராக இருப்பார். பிறக்கும் நேரத்தில், சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 12வது வீட்டில் இருப்பதுடன் சனியின் நவாம்சத்தில் இருந்தால், அந்த மனிதர் ஒரு வேலைக்காரியின் மகனாக இருப்பார்; மேலும் பிறக்கும் நேரத்தில், சூரியனும் சந்திரனும் 7வது வீட்டில் இருக்க, அவை சனியால் பார்க்கப்பட்டால், அவர் தமது தகுதிக்கு குறைவான தொழிலினைச் செய்வார்.


குறிப்பு:
(1)  அவை, சூரியன், செவ்வாய், சனி ஆகும்.

(2)  அந்தக் குடும்பம் அவரால் அழிந்து போகும். உரையாசிரியர், இதற்கு எடுத்துக்காட்டாக துரியோதனின் வாழ்வைக் குறிப்பிடுகிறார்.


7.     ஒருவர் பிறக்கும் நேரத்தில், சுக்கிரனும் செவ்வாயும் இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில் இருக்க, அவை அசுபக் கோள்களினால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் வீக்கம் தொடர்பான நோயால் பாதிக்கப்படுவார்(1). ஒருவர் பிறக்கும் நேரத்தில், சந்திரனானது கடகம் அல்லது விருச்சிகத்தின் நவாம்சத்தில் இருப்பதுடன், உடன் அசுபக் கோள்களும் இருந்தால், அந்த மனிதர் பிறப்புறுப்பு தொடர்பான நோயால் பாதிக்கப்படுவார். பிறக்கும் நேரத்தில், சந்திரன் இலக்கினத்தில் இருக்க, சனியும் செவ்வாயும் முறையே 12வது, 2வது வீடுகளிலும், சூரியன் 7வது வீட்டிலும் இருந்தால், அந்த மனிதர் வெண்குட்ட நோயால் பாதிக்கப்படுவார். ஒருவர் பிறக்கும் நேரத்தில், இலக்கினத்தில் இருந்து 10வது வீட்டில் சந்திரன் இருக்க, செவ்வாய் 7வது வீட்டிலும், சனியானது சூரியனிலிருந்து 2வது வீட்டிலும் இருந்தால், அத்தகைய மனிதர் உடல் குறைபாட்டுடன் இருப்பார்.

குறிப்பு: (1) அதாவது யானைக்கால் போன்ற நோய்கள்.

தீமை தரும் யோகங்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: