Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, August 2, 2017

குருடாகும் நிலை - பிருகத் ஜாதகா – 174



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி


9.         ஒருவர் பிறக்கும் நேரத்தில், சந்திரன், சனிக்கும் செவ்வாய்க்கும் இடையில் இருக்க, சூரியன் மகரத்தில் இருந்தால், அந்த மனிதர் ஆஸ்த்துமா, நுகர்வு நோய், மண்ணீரல் நோய், அல்லது உள் கட்டி ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்; மேலும் பிறக்கும் நேரத்தில் சூரியனும் சந்திரனும் ஒவ்வொரு இராசியில் இருக்க அல்லது அவை ஒன்றுக்கு மற்றொன்றின் நவாம்சத்தில் நவாம்சத்தில் இருந்தால், அந்த மனிதர் நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்படுவார், மேலும் சூரியனும் சந்திரனும் ஒன்றாக, கடகம் அல்லது சிம்மத்தில் இருந்தால் அந்த மனிதர் எலும்பும் தோலுமாக மாறுவார்.


10.        ஒருவர் பிறக்கும் நேரத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய், சனி ஆகியவை 8வது, 6வது, 2வது, 12வது ஆகிய வீடுகளில் எப்படி  இருந்தாலும், அதில் மிக அதிக வலிமை வாய்ந்த கோளின்(1) தன்மைக்கு ஏற்ப அந்த மனிதர் பார்வை இழக்கக் கூடும்.

குறிப்பு:
(1)    சந்திரன் வலிமை வாய்ந்ததாக இருந்தால், குருடானது குளுமையால் ஏற்படும்; செவ்வாய் வலிமையானதாக இருந்தால், குருடானது பித்தத்தினால் ஏற்படும்; சூரியன் வலிமையானதாக இருந்தால் குருடானது வெப்பத்தாலோ அல்லது மரக் குச்சியானாலோ ஏற்படும்; சனியாக இருந்தால் அது காற்றினால், அதாவது கற்கள் தூசுகள் போன்றவை காற்றினால் அடித்துவர, குருடானது ஏற்படும்.

தீமை தரும் யோகங்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: