Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, August 19, 2017

சிறை தண்டனை - பிருகத் ஜாதகா – 178


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி


16.    ஒருவர் பிறக்கும் நேரத்தில் அசுபக் கோள்கள் 12, 5, 2, 9வது வீடுகளில் எப்படி இருப்பினும், அந்த மனிதர் சிறைக்கு செல்வதுடன், உதய இராசியின்(1) தன்மைக்கேற்ப தண்டனையும் அடைவார். மேலும், பிறக்கும் நேரத்தில் உதய திரேக்காணமானது பாம்பின் திரேக்காணமாகவோ(2) அல்லது கயிறு திரேக்காணமாகவோ(3) இருப்பதுடன், அந்த இராசியின்(4) அதிபதி வலிமை மிக்கதாக இருப்பதுடன், அதனை ஒரு பாவக் கோள் பார்த்தால், அந்த மனிதரும் அந்த இராசியின் தன்மைக்கேற்ப சிறை தண்டனை அடைவார்.

குறிப்பு:
(1)  உதய இராசியானது மேசம், ரிசபம் அல்லது தனுசுவாக இருந்தால் கயிற்றால் கட்டப்படுவார். உதய இராசி மிதுனம், கன்னி அல்லது கும்பமாக இருந்தால் சங்கிலியால் கட்டப்படுவார். உதய இராசி கடகம், மகரம் அல்லது மீனமாக இருந்தால் கடுஞ்சிறைக்குள் அடைக்கப்படுவதுடன் பலத்த காவலுடன் இருப்பார். உதய இராசி விருச்சிகமாக இருந்தால் அந்த மனிதர் பாதாள சிறையில் அடைக்கப்படுவார்.

(2)  புஜக திரேக்காணங்கள்: அவை கடகத்தின் முதல் திரேக்காணம், விருச்சிகத்தின் முதல், இரண்டாவது திரேக்காணங்கள், மீனத்தின் மூன்றாவது திரேக்காணம்.

(3)  நிகில திரேக்காணம்: மகரத்தின் முதல் திரேக்காணம்.

(4)  அதாவது, உதய திரேக்காணமானது கடகத்தின் முதல் திரேக்காணமாக இருப்பது. எடுத்துக்காட்டாக அந்த திரேக்காணத்தின் அதிபதி சந்திரன், அதாவது கடக இராசி. உதய இராசியின் திரேக்கானமானது கடகத்தின் இரண்டாவது திரேக்காணமாக இருப்பது, இதன் அதிபதி செவ்வாய் அதாவது விருச்சிக இராசி; கடகத்தின் மூன்றாவது திரேக்காணமானது இருக்க அதன் திரேக்காண அதிபது வியாழன் அதாவது மீன இராசி.


தீமை தரும் யோகங்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17




No comments: