Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, August 25, 2017

தவறிழைக்கும் பெண்கள் - பிருகத் ஜாதகா – 184


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

பெண்களின் சாதகம்

9.     ஒரு பெண் பிறக்கும் நேரத்தில் உதய இராசியிலிருந்து 7வது அல்லது சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து 7வது வீட்டில் பல அசுபக் கோள்கள் இருந்தால் அப்பெண் விதவையாவார்; அத்தகைய 7வது வீட்டில் அசுபக்கோள்களும் சுபக் கோள்களும் நிறைந்து இருந்தால், அவர் தனது கணவரை விட்டு பிரிந்து வேறொருவரை மணந்து வாழ்வார்; அத்தகைய 7வது வீட்டில் அசுபக் கோள்கள்(1) பலமற்று இருந்து அவை சுபக் கோள்களால் பார்க்கப்பட்டால்(2) அவர் தனது கணவனால் ஒதுக்கப்படுவார்.

சுக்கிரனும் செவ்வாயும் ஒன்று மற்றொன்றில் நவாம்சத்தில் இருந்தால், அந்த பெண் முறைதவறி செல்வார்; உதய இராசியிலிருன்து 7வது வீட்டில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அவள் தனது கணவனின் ஒப்புதலோடு முறையற்று நடப்பாள்.

குறிப்பு:
(1)  சூரியன் அல்லது சனி
(2)  புதன் அல்லது வியாழன் அல்லது சுக்கிரன்.

10.    ஒரு பெண் பிறக்கும் நேரத்தில் உதய வீடானது சனி(1) அல்லது செவ்வாய்(2) ஆக இருந்து அதில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருக்க, அவை அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால், அந்த பெண்ணும் அவரது தாயாரும் முறைதவறி நடப்பவர்களாக இருப்பர்; நிறைவு(7வது வீடு) நவாம்சமானது செவ்வாயினுடையதாக இருப்பதுடன் நிறைவு(7வது) வீடானது சனியால் பார்க்கப்பட்டால், அந்த பெண் கருவுறும் உறுப்பில் நோய்தாக்கப்படுபவராக இருப்பார்; நிறைவு(7வது வீடு) சுபக் கோளினுடையதாக இருந்தால் அவரது கருவுறும் உறுப்பு நல்ல நலனுடன் இருப்பதுடன், நல்ல மனைவியாகவும் இருப்பார்.

குறிப்பு:
(1)  மகரம் அல்லது கும்பம்
(2)  மீனம் அல்லது விருச்சிகம்


குறிப்பு (நிமித்திகன்):

இங்கு, திரு சிதம்பரம் அவர்கள், setting sign எனும் வார்த்தையினை பயன்படுத்தியுள்ளார். அதாவது raising sign எனப்படும் உதய வீட்டிற்கு (இலக்கினத்திற்கு) நேர் எதிர் வீடானது  setting sign எனப்படும் நிறைவு வீடு ஆகும், அதாவது அது 7வது வீடாக இருக்கும். எடுத்துக்காட்டாக, காலையில் 6.00 மணிக்கு தோன்றும் சூரியன் மாலை 6.00 மணிக்கு மறைவது என்பதைக் கணக்கில் கொள்வதுபோல் காலையில் 6.00 மணிக்கு உள்ள இலக்கினமானது மாலை 6.00 மணிக்கு (தோராயமாக) 7வது வீட்டில் இருக்கும், பின்னர் மீண்டும் தொடங்கிய இடத்தினை நோக்கி நகரும். எனவே நிறைவு வீடு என்பது 7வது வீடான களத்திர வீடாகும்). [நண்பர் திரு ஓம் பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி]


….பெண்களின் சாதகம்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: