Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, August 29, 2017

8வது வீடும், பிணியால் இறப்பும் - பிருகத் ஜாதகா – 188

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

இறப்பு நிலை

1. ஒருவர் பிறக்கும் நேரத்தில், உதய இராசியிலிருந்து 8வது வீடு எவ்வித கோளும் இல்லாமல் ஆனால் வலிமை மிக்க கோளால் பார்க்கப்பட்டால், அத்தகைய கோளிற்கு தக்க அதிகப்படியான பிணியால்(உடல்நீர்மத்தால்) இறப்பினைச் சந்திப்பார்(1). காலபுருச தத்துவப்படி(2) 8வது வீடு எந்த பாகத்தினைக் குறிக்கிறதோ, அந்த பாகத்தில் பாதிப்பு ஏற்படும். 8வது வீட்டினைப் பல கோள்கள் பார்த்தால், 8வது வீடு குறிப்பிடும் உடல் பாகத்தில், அந்த கோள்களிற்கு உரிய அதிகப்படியான உடல்நீர்மத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார். ஆனால் 8வது வீட்டில் சூரியன் இருந்தால் அந்த மனிதருக்கு நெருப்பால் இறப்பு நேரிடும், அதில் சந்திரன் இருந்தால் தண்ணீரால் ஏற்படும், செவ்வாயாக இருந்தால் ஆயுதத்தால் ஏற்படும், புதனாக இருந்தால், இறப்பானது காய்ச்சலால் ஏற்படும்; வியாழனாக இருந்தால், தெரியாத வியாதியால் இறப்பு நேரிடும்; சுக்கிரனாக இருந்தால் தாகத்தால் ஏற்படும்; சனியாக இருந்தால் இறப்பானது பட்டினியால் ஏற்படும்(3). மேலும், 8வது வீடானது நகர்வு வீடாக(சரம்) இருந்தால் அவர் வெளிநாட்டில் இறப்பார்; நிலை வீடாக (ஸ்திரம்) இருந்தால் அவரது சொந்த நாட்டில் இறப்பார்; பொது வீடாக (உபய) இருந்தால், அவர் செல்லும் வழியில் இறப்பார்.

குறிப்பு:
(1)   கோள்கள்                             உடல் நீர்மம்(பிணி)
சூரியன்                                 பித்தம்
சந்திரன்                                வாயு, கபம்
செவ்வாய்                            பித்தம்
புதன்                                      பித்தம், வாயு, கபம்
வியாழன்                             கபம்
சுக்கிரன்                                வாயு, கபம்
சனி                                        வாயு

(2)   பகுதி-1, பத்தி-4ன் படி

(3)   வலிமை மிக்க கோளாக இருந்தால், அந்த மனிதரின் இறப்பானது அவர் நல்ல பணியில் இருக்கும்போது ஏற்படும்; அந்த கோள் வலிமை இழந்து இருக்குமானால், அவர் மோசமான பணியில் இருக்கும்போது ஏற்படும்; அந்தக் கோள் இரண்டு நிலையிலும் இல்லாதிருந்தால் பணியில் அலட்சியமாக இருக்கும்போது ஏற்படும்.


………. இறப்பு நிலை தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: