Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, September 23, 2017

அப்பா!



என்னை விதைத்து


நல் உரமிட்டு வளர்த்து


அவையத்துள்


முன்னம் நிறுத்தி


தந்தை மகற்காற்றும் உதவியினை


நன்று செய்தனை!


இன்னும் ஒரு பிறவியிலும்


உன் மகனாய்


நான் பிறக்க


என்ன தவம்


செய்வேன்


அப்பா!






Friday, September 15, 2017

எந்தை..

தற்போது 
உடல் நலம் குன்றி
மருத்துவ மனையில்
உங்களின்
பிரார்த்தனைகளுடன்....

Saturday, September 9, 2017

இறப்பிற்கு பின் உடல் அழியும் முறை - பிருகத் ஜாதகா – 194


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

இறப்பு நிலை          .தொடர்கிறது

13. ஒருவர் பிறக்கும் நேரத்தில், உதய திரேக்காணத்திலிருந்து 22வது திரேக்காணம் நெருப்பு திரேக்கானமாக இருந்தால்(1), இறப்பிற்குப் பிறகு அவரது உடல் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். 22வது திரேக்கானம் நீர் திரேக்கானமாக இருந்தால்(2) அவரது உடல் தண்ணீரில் எறியப்படும். அத்தகைய திரேக்கானம் இதர வகையாக [‘மிஸ்ர’](3) இருந்தால், அவரது உடல் எரிக்கவும்படாது நீரிலும் எறியப்படாது, ஆனால் அது காய்ந்து போகும் வகையில் எறியப்படும்.  8வது வீடு சர்ப்ப திரேக்கானமாக(4) இருந்தால், அந்த உடல் நாய், நரிகள், காகங்கள் போன்றவற்றிற்கு இரையாக்கப்படும். இறப்பிற்கு பிறகு உடல் அடையும் மாற்றங்கள் இவ்வாறாகும் என குறிப்பிடப்படுகிறது. ஒருவரின் முந்தைய மற்றும் எதிர்கால நிலையியனை அறிந்துகொள்ள சாதகக் கல்வியின் உயர்நிலையைக் கற்று, தேர்தல் வேண்டும்.


குறிப்புகள்:

(1)  நெருப்பு திரேக்கானம் என்பது அசுபக்கோள்களின் திரேக்கானமாகும்.

(2)  நீர் திரேக்கானம் என்பது சுபக் கோள்களின் திரேக்கானமாகும்

(3)  மிஸ்ர திரேக்கானம் என்பது ஒரு சுபக் கோளிற்கு உரிய திரேக்கானத்தில் அசுபக் கோள்கள் இருப்பது அல்லது அசுபக்கோளிற்கு உரிய திரேக்கானத்தில் சுபக்கோள்கள் இருப்பது.

(4)  சர்ப்ப திரேக்கானம் என்பது – கடகத்தின் 1வது 2வது திரேக்கானங்கள், விருச்சிகத்தின் 1வது 2வது திரேக்கானங்கள், மீனத்தின் 3வது திரேக்கானங்கள். சுபோதினியின் கூற்றுப்படி, “வியல வர்கா” என்பது வியல (சர்ப்பம்), கிரித்ர (கழுகு), கோல(காட்டுபன்றி) திரேக்கானங்கள் போன்றவையாகும்.

………. இறப்பு நிலை தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Tuesday, September 5, 2017

இறப்பு நிகழும் இடம் - பிருகத் ஜாதகா – 193


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

இறப்பு நிலை          .தொடர்கிறது

12.        ஒருவரின் இறப்பு நிகழும் இடம் என்பது, உதய நவாம்சம் இருக்கும் அதிபதிக்கு உரிய இடம்(1); அல்லது உதய நவாம்ச அதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி அதே வீட்டில் இருந்தால் அந்த கோளிற்கு உரிய இடம்; அல்லது உதய நவாம்ச அதிபதியைப் பார்க்கும் கோளிற்கு உரிய இடம்; அல்லது உதய நவாம்ச அதிபதி இருக்கும்  வீட்டின் நவாம்ச அதிபதியின் இடம்(2) ஆகியவற்றில் நிகழும். இறப்பு நிகழும் இடத்தினை தீர்மானிப்பதில் பல்வேறு குறிப்புகளை கவனமாக ஆராய வேண்டும். ஒருவர் இறப்பதற்கு முன்னால் நினைவு தவறிய காலம் என்பது உதய இராசி கடந்த பொழுதினைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும். உதய இராசியானது அதன் அதிபதியால் பார்க்கப்பட்டால், அந்த கால அளவானது இரண்டு மடங்காகவும், அது சுபக்கோள்களால் பார்க்கப்பட்டால், மூன்று மடங்காகவும் கடந்த பொழுதினைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(3).

குறிப்புகள்:

(1) மேசம் – ஆடுகள் வசிக்கும் இடம்; ரிசபம் – எருதுகள் வசிக்கும் இடம்; மிதுனம் – வீடு; கடகம் – கிணறு; சிம்மம் – காடு; கன்னி – ஆற்றங்கரை; துலாம் – கடைத்தெரு அல்லது பண்டகச் சாலை; விருச்சிகம் – பொந்து; தனசு – குதிரைகள் வசிக்கும் இடம்; மகரம் – நீர்வழிகள்; கும்பம் – வீடு; மீனம் – நீர் நிலைகள். இவை பொதுவானவையே. இறப்பு தொடர்புடைய யோகங்களில் என்ன இடம் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அங்குதான் இறப்பு நிகழும்.

(2) இறப்பு நிகழும் இடங்கள் என பல்வேறு கோள்களின்படி பல்வேறு இடங்கள் இருக்கும் நிலை வந்தால், எந்த வீட்டின் அதிபதி வலிமை மிக்கதாக இருக்கிறதோ அந்த இடத்தில்தான் இறப்பு நிகழும். வேறு சிலரின் கருத்துப்படி, இறப்பு நிகழும் இடமானது ஒரு வீட்டின் பகுதியில், வலிமை மிக்ககோளிற்கு உரிய இடத்தில் நிகழும் – அதாவது வழிபடும் இடம், குளியலறை, சமையலறை போன்றவை (பத்தி 12 பகுதி 2).

(3) உதய இராசியானது அதன் அதிபதியாலும் ஒரு சுபக்கோளாலும்  பார்க்கப்பட்டால் நினைவு தவறிய பொழுதென்பது, ஆறு மடங்காகும்.


………. இறப்பு நிலை தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17





Monday, September 4, 2017

பறவைகளால் இறப்பு ஏற்படும் நிலை - பிருகத் ஜாதகா – 192

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

இறப்பு நிலை          .தொடர்கிறது


9.         தேய்பிறைச் சந்திரன் வலிமை மிக்க செவ்வாயால் பார்க்கப்பட, சனியானது 8வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் ஆசனவாய் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோவார்(1) – அந்த பாகமானது புழுக்கலால் தாக்கப்பட்டு அல்லது அறுவை சிகிச்சைக் கத்தியால் வெட்டுப்பட்டு அல்லது தீய்ந்துபோய் அல்லது கொப்பளங்களால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பார்.

குறிப்பு: (1) அதாவது பிறப்புறுப்பிற்கு அருகில் மூலம் மற்றும் குதம் போன்றவற்றால்.


10.        ஒருவர் பிறக்கும்போது, சூரியனும் செவ்வாயும் 7வது வீட்டிலும், சனி 8வது வீட்டிலும் தேய்பிறைச் சந்திரன் 4வது வீட்டிலும் இருந்தால், அந்த மனிதரின் இறப்பானது பறவைகளால் ஏற்படும். 1வது, 5வது, 8வது, 9வது வீடுகளில் முறையே சூரியன், செவ்வாய், சனி மற்றும் சந்திரன் இருந்தால் அந்த மனிதரின் இறப்பு என்பது மலை உச்சியிலிருந்து விழுந்து அல்லது மின்னல் தாக்கி அல்லது சுவற்றிலிருந்து விழுந்து ஏற்படும்.


11.        ஒருவரின் இறப்பும் நிகழக்கூடிய மேலே கூறிய யோகங்கள் இல்லாத சாதகம் கொண்டவரின் இறப்பின, பிறக்கும்போது உள்ள உதய திரேக்காணத்திலிருந்து எண்ணி வரும் 22வது திரேக்காணத்தின் பலனைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும், அத்தகைய இறப்பானது அந்த 22வது திரேக்காண அதிபதியால் அல்லது அந்த திரேக்காண வீட்டிற்கு உரிய அதிபதியால், இவர்களில் பலமிக்கவரால், தண்ணீர், நெருப்பு அல்லது அந்த அதிபதிக்கு உடைய இதர வகையில் நிகழும்(1).

குறிப்பு:1 இந்த பகுதியின் பத்தி-1ல் கூறியவாறு.


………. இறப்பு நிலை தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17