Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, September 5, 2017

இறப்பு நிகழும் இடம் - பிருகத் ஜாதகா – 193


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

இறப்பு நிலை          .தொடர்கிறது

12.        ஒருவரின் இறப்பு நிகழும் இடம் என்பது, உதய நவாம்சம் இருக்கும் அதிபதிக்கு உரிய இடம்(1); அல்லது உதய நவாம்ச அதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி அதே வீட்டில் இருந்தால் அந்த கோளிற்கு உரிய இடம்; அல்லது உதய நவாம்ச அதிபதியைப் பார்க்கும் கோளிற்கு உரிய இடம்; அல்லது உதய நவாம்ச அதிபதி இருக்கும்  வீட்டின் நவாம்ச அதிபதியின் இடம்(2) ஆகியவற்றில் நிகழும். இறப்பு நிகழும் இடத்தினை தீர்மானிப்பதில் பல்வேறு குறிப்புகளை கவனமாக ஆராய வேண்டும். ஒருவர் இறப்பதற்கு முன்னால் நினைவு தவறிய காலம் என்பது உதய இராசி கடந்த பொழுதினைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும். உதய இராசியானது அதன் அதிபதியால் பார்க்கப்பட்டால், அந்த கால அளவானது இரண்டு மடங்காகவும், அது சுபக்கோள்களால் பார்க்கப்பட்டால், மூன்று மடங்காகவும் கடந்த பொழுதினைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(3).

குறிப்புகள்:

(1) மேசம் – ஆடுகள் வசிக்கும் இடம்; ரிசபம் – எருதுகள் வசிக்கும் இடம்; மிதுனம் – வீடு; கடகம் – கிணறு; சிம்மம் – காடு; கன்னி – ஆற்றங்கரை; துலாம் – கடைத்தெரு அல்லது பண்டகச் சாலை; விருச்சிகம் – பொந்து; தனசு – குதிரைகள் வசிக்கும் இடம்; மகரம் – நீர்வழிகள்; கும்பம் – வீடு; மீனம் – நீர் நிலைகள். இவை பொதுவானவையே. இறப்பு தொடர்புடைய யோகங்களில் என்ன இடம் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அங்குதான் இறப்பு நிகழும்.

(2) இறப்பு நிகழும் இடங்கள் என பல்வேறு கோள்களின்படி பல்வேறு இடங்கள் இருக்கும் நிலை வந்தால், எந்த வீட்டின் அதிபதி வலிமை மிக்கதாக இருக்கிறதோ அந்த இடத்தில்தான் இறப்பு நிகழும். வேறு சிலரின் கருத்துப்படி, இறப்பு நிகழும் இடமானது ஒரு வீட்டின் பகுதியில், வலிமை மிக்ககோளிற்கு உரிய இடத்தில் நிகழும் – அதாவது வழிபடும் இடம், குளியலறை, சமையலறை போன்றவை (பத்தி 12 பகுதி 2).

(3) உதய இராசியானது அதன் அதிபதியாலும் ஒரு சுபக்கோளாலும்  பார்க்கப்பட்டால் நினைவு தவறிய பொழுதென்பது, ஆறு மடங்காகும்.


………. இறப்பு நிலை தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17





No comments: