Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, November 17, 2017

சாதகம் இல்லாதவர்கள் – இலக்கினம்- தொடர்கிறது - பிருகத் ஜாதகா – 201


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


8.  அல்லது, கோளின் ஸ்புடத்தினால் (தீர்க்க ரேகை) பெருக்கவும் அல்லது  உதய இராசியில் இருக்கும் வலிமை மிக்க கோளின் கிடைமட்டத்தில் நிறுத்தப்பட்ட 12 அங்குலம் உள்ள நேரான சங்கின்( நேரான குச்சி) மீது சூரியனால் ஏற்படும்  நிழலின் அங்குலம் அளவினைக் கொண்டு பெருக்கவும்; அவ்வாறு பெருக்கிக் கிடைத்தை 12-ஆல் வகுக்கவும். மீதியாக வருவது பிறக்கும்போது உள்ள உதய இராசியாகும்(1). வேறு சிலரின் கருத்துப்படி, கேள்வி கேட்பவர் உட்கார்ந்திருந்தால், அந்த நேரத்தில் உள்ள உதய இராசியிலிருந்து 7வது இராசி பிறக்கும்போது உள்ள இலக்கினமாகும். கேள்வி கேட்பவர் அந்த நேரத்தில் படுத்துக் கிடந்தால், அப்போதுள்ள உதய இராசியிலிருந்து 4வது வீடானது பிறக்கும்போது உள்ள இலக்கினமாகும். கேள்வி கேட்பவர் அந்த நேரத்தில் நின்று கொண்டு கேட்டால், 10வது வீடு இலக்கினமாகும். அவர் உட்கார்ந்த இடத்திலிருந்து எழும் நிலையில் கேட்டால், அந்த நேரத்தில் உள்ள உதய இராசியே, பிறக்கும்போது உள்ள இலக்கினமாகும்.(2).


குறிப்புகள்:

(1)  ஒருவேளை உதயத்தில் உள்ள கோளின் தீர்க்க ரேகை, அல்லது (நிறைய கோள்கள் இருந்தால்) அதில் உள்ள அதிக வலிமையுள்ள கோளின் தீர்க்க ரேகையானது 4 இராசி 10 பாகை 20 கலை என இருந்தால், அந்த நிழலின் நீளம் 4 ½ அங்குலம் என இருக்கும்; இரண்டு எண்களின் பெருக்கல் என்பது 19 வீடுகள் 16 பாகைகள் 30 கலைகள். இதனை 12-ஆல் வகுக்க நமக்குக் கிடைப்பது 7 வீடுகள், 16 பாகைகள் 30 கலைகள். இதன்படி பிறக்கும்போது உள்ள இலக்கினமானது மேசத்திலிருந்து 8வது வீடான, விருச்சிகம் ஆகும்.

(2)  சுபோதினி அவர்களின் கருத்துப்படி, 7வது, 4வது, 10வது, 1வது வீடுகளை, பட்ட-உத்பலாவின் விளக்கத்தின்படி பிரசன்ன இலக்கினத்திலிருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆனால் மேலே கூறப்பட்ட பத்தியின் முதல் பாதியில் விளக்கியவாறு இலக்கினத்தினை கண்டறிய வேண்டும், அதாவது குறிப்பு(1)-ல் கூறியபடி, விருச்சிகத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: