Concept
சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.
o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0
[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Sunday, April 6, 2014
Friday, April 4, 2014
சனி எனும் பனிக் கோள்
![]() |
சனி |
சூரியக்குடும்பத்தின் வரிசையில் ஆறாவது கோளும்
இரண்டாவது பெரிய கோளும் சனியாகும். இது ஒரு வாயுக்கோளாகும். பூமியின் ஆரத்தைப் போன்று
ஒன்பது மடங்கு ஆரத்தைக் கொண்டிருந்தாலும், பூமியின் எடையில் எட்டில் ஒரு பங்கே கொண்டது.சூரியக்
குடும்பத்தில் 6-வது கோள். சூரியனிலிருந்து 143 கோடி கி,மீ. தூரத்தில் உள்ளது. இது
தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 10 மணி 45 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. சூரியனை மிகப்
பொறுமையாக. 29.45 ஆண்டுகளில் சுற்றி வருகிறது.
சூரியனிடமிருந்து மிக அதிகத் தூரத்தில் சனி இருப்பதால் சூரியனின் வெப்பத்தாக்கம்
மிகவும் குறைவு என்பதால், இது பனிக் கோள் என அழைக்கப்படுகிறது.
சனியை இரவு நேரத்தில் வெறுங்கண்ணாலும் பார்க்க
முடியும். இது வியாழன் போல் வெளிச்சமாக காணப்படுவதில்லை என்றாலும், இதனி எளிதில் அடையாளம்
காணமுடியும், .
சனி அடர்த்தி மிகவும் குறைவானக் கோள். வியாழனைப்
போலவே, சனியும் 75% ஹைட்ரஜனும், 25% ஹீலியமும், அதில் தண்ணீர், மீத்தேன், அமோனியம்
மற்றும் பாறைத்துகள்கள் கொண்டது.
இதன் உட்கூடானது, இரும்பு, நிக்கல் மற்றும் பாறைக்
குழம்புகளைக் கொண்டது. திரவ ஹைட்ரஜனும், ஹீலியமும் சூழ்ந்த நிலையில் உள்ளக் கோள். சனி
கருப்பு என்று சொன்னாலும், உண்மையில், மேற்புறம் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டது. காரணம்,
அமோனியப் படிவம் பரவியுள்ளதால் இந்த நிறம்.
அழகு மிகுந்த ஏழு வளையங்கள் சனியைச் சுற்றி வருகின்றன.
வளையங்கள் போல் தோன்றினாலும், அவை எண்ணில் அடங்கா சிறுத் துணுக்குகளைக் கொண்ட நீள்
வட்ட வடிவில் சுற்றி வருபவையே ஆகும். துணுக்குகள் என்றாலும் அவை சில கிலோ மீட்டர் நீளம்
கொண்டவைகளும் உள்ளடங்கியதே. பூமியிலிருந்து சனியின் வளையங்களில் மூன்றினைத் தொலைநோக்கியால்
காணமுடியும்.
சனிக்கு 53 துணைக்கோள்கள் அதாவது சந்திரன்கள்
உள்ளன. ஆனாலும் சந்திரன்கள் எண்ணிக்கை கூடுவதற்கான ஆய்வுகள் உள்ளன. சனி வாயு நிலையில்
இருந்தாலும், அதன் சந்திரன்களில் சில திட நிலையில் இருப்பதால், உயிர் வாழும் சாத்தியக்கூறுகள்
ஆராயப்படுகின்றன.
மற்ற
வாயுக்கோள்களைப் போலவே, சனியும் காந்தப்புலம் கொண்டது. ஆனால் சனியின் காந்தப்புலத்தின்
வீச்சு அதிகம். வியக்க வைக்கும் உண்மை என்னவெனில், அண்ட வெளியில், சூரியனிடமிருந்து
தான் பெறும் கதிவீச்சினைக் காட்டிலும் அதிகமாகவே தமது கதிர் வீச்சினை விண்ணில் செலுத்துகிறது.
சுருக்கமாக:
·
சூரியனிலிருந்து – 143.30 கோடி தொலைவில் சனி உள்ளது.
·
இதன் ஆரம் 58, 232 கி.மீ.
·
சூரியனைச் சுற்றும் காலம் 29.45 ஆண்டுகள்.
·
தன்னைத்தானே சுற்றும் கால அளவு – 10.30 மணி நேரம்
·
வியாழனைப் போல் சனியும் வாயுக் கோள்.
·
காந்தப் புலமும், காந்தப்புலக் கதிர்வீச்சு அதிக
அளவிலும் கொண்டது.
(நன்றி: பல்வேறு
இணைய தளங்கள்)
அடுத்து – யுரோனசும், நெப்டியூனும், புளுட்டோவும்
அவன் – இவன்
|
|
அவன் :
|
சனி மிக மெதுவாகச்
சூரியனைச் சுற்றி வருகிறது
|
இவன் :
|
பதிவும் மிக மெதுவாக பதியப்படுகிறது – கூட்டணிக்கட்சிகளின்
தொகுதி உடன்பாடு போல்.
|
Subscribe to:
Posts (Atom)