Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 201-210. Show all posts
Showing posts with label Brihat Jataka 201-210. Show all posts

Tuesday, November 28, 2017

சிம்மத்தின் திரேக்காண பலன்கள் - பிருகத் ஜாதகா – 210



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



13. சிம்மத்தின் முதல் திரேக்காணமானது கழுகு மற்றும் குள்ள நரியின் உருவம் கொண்ட மனிதனாகவும், இலவம்பஞ்சு மரத்தின் மீது அமர்ந்தும், நாயைப் போன்ற உருவமும், அழுக்கான ஆடைகளை அணிந்த மனிதனாகவும், தாய்தந்தையரைப் பிரிந்தவராகவும், ஓசையுடன் அழுபவராகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு மனிதனின், நாற்கால் உயிரினம், பறவை ஆகியவற்றின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சூரியன்.



14. சிம்மத்தின் இரண்டாவது திரேக்காணமானது குதிரைபோன்ற வடிவம் உடைய மனிதனாகவும், தலையில் சற்றே வெண்மை கலந்த பூக்களால் ஆன மாலையினைச் சூடியதாகவும், மான் தோல் போர்த்தியதாகவும், சிங்கம்போல் கொடூரமான, நெருங்கமுடியாததாகவும், கையில் அம்பும், வளைந்த மூக்கும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆயுதம் பூண்ட மனித வடிவில் இருக்கும். இதன் அதிபதி வியாழன்.



15. சிம்மத்தின் மூன்றாவது திரேக்காணமானது கரடி போன்ற முகம் கொண்டதாகவும், குரங்கின் குறும்புத்தனமும், கையில் பழமும் இறைச்சியும், நீண்ட தாடியும் மீசையும், சுருள் முடியும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் நான்கு கால்களும் கொண்டிருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Monday, November 27, 2017

கடகத்தின் திரேக்காண பலன்கள் -பிருகத் ஜாதகா – 209



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



10. கடகத்தின் முதல் திரேக்காணமானது இலைகள், கிழங்குகள், பழங்களைச் சுமந்த மனிதனாகவும், யானையைப் போன்ற உருவ அமைப்பும் கொண்டிருக்கும்; காட்டில் சந்தன மரத்தடியில் வசிப்பதாகவும், ஒட்டகத்தினைப்போல் நீண்ட பாதமும், காட்டுப்பன்றியைப் போன்ற முகமும் குதிரையின் கழுத்தும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது நான்கு கால் மிருகத்தின் வடிவம் கொண்டிருக்கும். இதன் அதிபதி சந்திரன்.



11. கடகத்தின் இரண்டாவது திரேக்காணமானது தாமரை மலர்களைச் சூடிய மங்கைபோன்றும், பாம்பினைக் கையில் கொண்டும், கடினமனம் கொண்டதாகவும், இளமையானதாகவும், காட்டில் அழுதுகொண்டும், பலாபோன்ற மரத்தின் கிளையைக் கையில் பிடித்தவாறும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு பெண்ணின் வடிவம் கொண்டிருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



12. கடகத்தின் மூன்றாவது திரேக்காணமானது, பாம்புகள் சூழ உள்ள மனிதனாகவும், தனது மனைவிக்காக அணிகலன்கள் வாங்குவதற்காக கடலில் படகில் செல்பவராகவும், அணிகலன்கள் அனிந்தவராகவும், தட்டையான முக அமைப்பு கொண்டதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு ஆணின் வடிவமும் பாம்பின் வடிவமும் கொண்டிருக்கும். இதன் அதிபதி வியாழன்.



திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Sunday, November 26, 2017

மிதுனத்தின் திரேக்காண பலன்கள் - பிருகத் ஜாதகா – 208

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]


7. மிதுனத்தின் முதல் திரேக்காணமானது பெண்ணாகவும், தையல் வேலை, அழகியலில் ஆர்வம் உடையதாகவும், அலங்காரத்தில் ஆர்வம் உடையதாகவும், குழந்தைகள் இன்றியும், கைகள் உயர்ந்த நிலையிலும், பருவமடைந்ததாகவும், காம இச்சை எண்ணம் நிரம்பியதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவம் கொண்டிருக்கும்.  இதன் அதிபதி புதன்.


8.     மிதுனத்தின் இரண்டாவது திரேக்காணமானது பூந்தோட்டத்தில் வசிக்கும் மனிதனாகவும், தற்காப்பு ஆடை அணிந்ததாகவும், கையில் வில்லும், சண்டையில் ஆர்வம் உடையதாகவும், அம்புகளைக் சுமந்ததாகவும், கருடனைப்போல் முக அமைப்பும், எண்ணமானது குழந்தைகள், ஆபரணங்கள் சொத்துக்களின் மீதும் கொண்டதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் ஆயுதமும் கொண்டிருக்கும்.  இதன் அதிபதி சுக்கிரன்.



9. மிதுனத்தின் மூன்றாவது திரேக்காணமானது ஆபரணங்கள் பூண்ட மனிதராகவும், பல்வேறு ரத்தினங்களை அணிந்தவராகவும், தற்காப்பு ஆடை அணிந்தவராகவும் இலக்கினைக் கொண்டிருப்பதுடன், கையில் வில்லும், அனைத்து கலைகளும் அறிந்ததாகவும், இலக்கிய எழுத்தாளராகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவம் கொண்டிருக்கும்.  இதன் அதிபதி சனி.


திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Saturday, November 25, 2017

ரிசபத்தின் திரேக்காண பலன்கள் - பிருகத் ஜாதகா – 207

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



4. ரிசபத்தின் முதல் திரேக்காணமானது, குட்டையான மற்றும் சுருளான கூந்தலை உடைய பெண்ணாகவும், பானை போன்ற தொப்பையும், கருகிய ஆடையை அணிந்தவராகவும், தாகமும், உணவிலும் நகைகளில் ஆசையும் கொண்டதாக இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவமும் நெருப்பினைக் கொண்டதாகவும் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.



5. ரிசபத்தின் இரண்டாவது திரேக்காணமானது, ஆணின் வடிவம் கொண்டதாகவும், வேளாண்மை, தானியங்கள், வீடு, பசுக்கள், இசை, நாட்டியம், ஓவியம், எழுத்து இது போன்ற வேலைத்திறன் கொண்டதாகவும், ஏர் உழபவராகவும், பயணத்தோடு தொடர்புடைய தொழிலும், எருதுக்கு இருப்பது போல் வளைந்த கழுத்தும், தாகமும், செம்மறியாட்டின் முகம் போன்ற அமைப்பும், அழுக்கான ஆடைகளை அணிந்ததாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் நாற்கால் வடிவமும் கொண்டிருக்கும்.  இதன் அதிபதி புதன்.


6.     ரிசபத்தின் மூன்றாவது திரேக்காணமானது, யானையைப் போல வடிவம் கொண்ட ஆணாகவும், பெரிய பற்களும், ஒட்டகத்தினைப் போன்ற பாதங்களும், பழுப்பு நிறமும், செம்மறியாடு மற்றும் காட்டின் விலங்குகளை ஒத்தும் இருக்கும்.


குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் நாற்கால் வடிவமும் கொண்டிருக்கும்.  இதன் அதிபதி சனி.


திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Friday, November 24, 2017

மேசத்தின் திரேக்காண பலன்கள் - பிருகத் ஜாதகா – 206


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



1. மேசத்தின் முதல் திரேக்காணமானது வெள்ளை ஆடையை இடுப்பில் அணிந்ததாகவும், கருப்பாகவும்,  தன்னை பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவராகவும், பயமற்ற தோற்றமும், சிவந்த கண்களும், கையில் கோடாரியும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது மனித வடிவமும் ஆயுதம் பூண்டதாகவும் இருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



2.     யவணாச்சாரியாரின் கருத்துப்படி, மேசத்தின் இரண்டாவது திரேக்காணமானது பெண் வடிவம் கொண்டதாகவும், பொன் நகைகளின் மீதும் இனிப்பு பொருட்களின் மீதும் மிகுந்த ஆசை கொண்டதாகவும், பானை போன்ற தொப்பையினை உடையதாகவும், குதிரையைப் போன்ற முகமும், தாகம் கொண்டதாகவும், ஒற்றைக் கால் கொண்டதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவமும், நான்குகால் கொண்டதாகவும், முகமானது பறவையைப் போன்றும் இருக்கும். இதன் அதிபதி சூரியன் ஆகும்.



3.     மேசத்தின் மூன்றாவது திரேக்காணமானது, தீய எண்ணம் கொண்ட மனிதராகவும், கலைகளைக் கற்றறிந்தவராகவும், பழுப்பு நிறம் கொண்டதாகவும், வேலையில் ஆர்வம் கொண்டதாகவும், செய்யும் வேலையில் தோல்வி காண்பவராகவும், கையில் தடியுடனும், சிவப்பு ஆடை அணிந்ததாகவும், கோபம் கொண்டதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்கானமானது மனிதனின் வடிவமும் ஆயுதம் பூண்டதாகவும் இருக்கும். இதன் அதிபதி வியாழன்.


திரேக்காணத்தின் பலன்கள்...தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17