Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 171-180. Show all posts
Showing posts with label Brihat Jataka 171-180. Show all posts

Monday, August 21, 2017

பெண்களின் சாதகக் கணக்கு - பிருகத் ஜாதகா – 180

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று


பெண்களின் சாதகம்


1.     பெண்கள் சாதகத்தின் குறிப்புகள் என்பன ஆண்களின் சாதகத்தினைப் போலவே தான் இருக்கும்; ஆனால் பெண்களுக்கு பொருந்தக் கூடிய பலன்கள் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும், மற்றவை அவர்களின் கணவர்களுக்குப் பொருந்தும். வேறு சிலரின் கருத்துப்படி, அனைத்து பலன்களும்(1) கணவருக்கு மட்டுமே பொருந்தும். கணவரின் மரணம் என்பது பெண்களின் சாதகத்தின் 8-ம் இடத்தினை வைத்து தீர்மானிக்க வேண்டும். ஒரு பெண்ணில் உடலமைப்புகளை, இலக்கினம், சந்திரன் இருக்கும் இராசி ஆகியவற்றைக் கொண்டும், அவரது மற்றும் அவரது கணவரின் எதிர்கால பலனை 7-ம் வீட்டிலிருந்தும் தீர்மானிக்க வேண்டும்.


குறிப்பு:(1) நற்பலனாக இருந்தாலும் கெடுபலனாக இருந்தாலும் இருவரும் அனுபவிப்பார்கள்.  அத்தகைய பலன்களில் பெரும்பான்மையானவற்றை கணவரும், உடல் தொடர்பான பலனை பெண் மட்டுமே, அனுபவிப்பர். எனவே, மிகச்சிறந்த யோகபலனில் பிறந்த பெண்ணை மணப்பது ஆணுக்கு நல்லது.


2.     உதய இராசியும் சந்திரன் இருக்கும் இராசியும் இரட்டை இராசியாக இருந்தால் அந்த பெண் ஒரு நேர்மையான பெண்ணின் குணங்களைக் கொண்டிருப்பார்; அத்தகைய வீடுகள் சுபக் கோள்களால் பார்க்கப்பட்டால் அந்த பெண் நற்குணங்களும் எளிமையானவராகவும்  ஆபரணங்கள் அணிந்தவராகவும் இருப்பார்(1). ஆனால் அத்தகைய வீடுகள் ஒற்றை இராசிகளாக இருந்தால், அந்த பெண் ஆணுக்குரிய உடலமைப்புடனும் ஆணின் குணங்களையும் கொண்டிருப்பார்; அந்த வீடுகளில் அசுபக் கோள்கள் இருந்தாலோ அல்லது அவைகளால் பார்க்கப்பட்டாலோ, அவர் தீய குணங்களும், ஒரு சில நற்குணங்களும் கொண்டிருப்பார்(2).


குறிப்பு:

(1)  வேறு சிலரின் கருத்துப்படி, நல்லொழுக்கம் என்பது நல்ல அணிகலன்கள் என்பர்.

(2)  உதய இராசி அல்லது சந்திரன் இருக்கும் இராசிகளில் ஒன்று, ஒற்றைப்படையாகவும் மற்றொன்று இரட்டைப்படையாகவும் இருந்தால் அவர், ஆணின் குணமும் பெண்ணின் குணமும் இணைந்தவராக இருப்பார். இதே போன்ற பலனே, ஒரு இராசியில் அசுபக் கோள்களோ அல்லது சுபக்கோள்களோ இருந்தாலோ அல்லது பார்த்தாலோ அது போலவே மற்றொரு வீட்டில் அதற்கு மாறாக இருந்தாலோ ஏற்படும்.

….பெண்களின் சாதகம்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Sunday, August 20, 2017

ஏவலர் வேலை செய்யும் நிலை - பிருகத் ஜாதகா – 179


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி

17. ஒருவர் பிறக்கும் நேரத்தில், சந்திரன் சனியுடன் சேர்ந்திருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டு அதனைச் சுற்றிலும் கோட்டை (வட்டம்) கட்டியிருந்தால், அந்த மனிதர் கடுமையான சொற்களை உபயோகிப்பவராக இருப்பார், வலிப்பு நோய் உடையவராகவும், நுகர்வு பிரச்சனை உடையவராகவும் இருப்பார்(1).

பிறக்கும் நேரத்தில், சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை இலக்கினத்திலிருந்து 10வது வீட்டில் இருக்க, அவை சுபக் கோள்களால் பார்க்கப்படாமல் இருந்தால், அந்த மனிதர் பலரின் கீழ் - உயர் அதிகாரி, இடைநிலை அதிகாரி, கீழ் நிலை அதிகாரி ஆகியோரின்(1) கீழ் வேலை செய்பவராக இருப்பார்.


குறிப்பு:

(1)  சந்திரனாது முதல் யோகத்தில் இருந்தால் கடுஞ்சொல்லாளராகவும், இரண்டாவது யோகத்தில் இருந்தால், வலிப்பு நோய உடையவராகவும், மூன்றாவது யோகத்தில் இருந்தால் நுகர்வு பிரச்சனை உடையவராகவும் இருப்பார்.

(2)  மூன்று கோள்களில் ஒன்று 10வது வீட்டில் இருந்தால் அந்த மனிதர் உயர்நில வேலையாளாகவும், இரண்டு கோள்கள் 10வது வீட்டில் இருந்தால் நடுத்தர வேலையாளாகவும், மூன்று கோள்கள் 10வது வீட்டில் இருந்தால் கீழ்நிலை வேலையாளாகவும் இருப்பார்.

தீமைதரும் யோகங்கள் முடிவுற்றது.

அடுத்து .. பகுதி-24 – பெண்களின் சாதகம்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17




Saturday, August 19, 2017

சிறை தண்டனை - பிருகத் ஜாதகா – 178


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி


16.    ஒருவர் பிறக்கும் நேரத்தில் அசுபக் கோள்கள் 12, 5, 2, 9வது வீடுகளில் எப்படி இருப்பினும், அந்த மனிதர் சிறைக்கு செல்வதுடன், உதய இராசியின்(1) தன்மைக்கேற்ப தண்டனையும் அடைவார். மேலும், பிறக்கும் நேரத்தில் உதய திரேக்காணமானது பாம்பின் திரேக்காணமாகவோ(2) அல்லது கயிறு திரேக்காணமாகவோ(3) இருப்பதுடன், அந்த இராசியின்(4) அதிபதி வலிமை மிக்கதாக இருப்பதுடன், அதனை ஒரு பாவக் கோள் பார்த்தால், அந்த மனிதரும் அந்த இராசியின் தன்மைக்கேற்ப சிறை தண்டனை அடைவார்.

குறிப்பு:
(1)  உதய இராசியானது மேசம், ரிசபம் அல்லது தனுசுவாக இருந்தால் கயிற்றால் கட்டப்படுவார். உதய இராசி மிதுனம், கன்னி அல்லது கும்பமாக இருந்தால் சங்கிலியால் கட்டப்படுவார். உதய இராசி கடகம், மகரம் அல்லது மீனமாக இருந்தால் கடுஞ்சிறைக்குள் அடைக்கப்படுவதுடன் பலத்த காவலுடன் இருப்பார். உதய இராசி விருச்சிகமாக இருந்தால் அந்த மனிதர் பாதாள சிறையில் அடைக்கப்படுவார்.

(2)  புஜக திரேக்காணங்கள்: அவை கடகத்தின் முதல் திரேக்காணம், விருச்சிகத்தின் முதல், இரண்டாவது திரேக்காணங்கள், மீனத்தின் மூன்றாவது திரேக்காணம்.

(3)  நிகில திரேக்காணம்: மகரத்தின் முதல் திரேக்காணம்.

(4)  அதாவது, உதய திரேக்காணமானது கடகத்தின் முதல் திரேக்காணமாக இருப்பது. எடுத்துக்காட்டாக அந்த திரேக்காணத்தின் அதிபதி சந்திரன், அதாவது கடக இராசி. உதய இராசியின் திரேக்கானமானது கடகத்தின் இரண்டாவது திரேக்காணமாக இருப்பது, இதன் அதிபதி செவ்வாய் அதாவது விருச்சிக இராசி; கடகத்தின் மூன்றாவது திரேக்காணமானது இருக்க அதன் திரேக்காண அதிபது வியாழன் அதாவது மீன இராசி.


தீமை தரும் யோகங்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17




Friday, August 18, 2017

வழுக்கைத் தலையும் அழகற்ற பற்களும் -பிருகத் ஜாதகா – 177


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி


15.    ஒருவர் பிறக்கும் நேரத்தில், உதய இராசியானது ரிசபம், மேசம் அல்லது தனுசுவில் இருப்பதுடன் அதனை பாவக்கோள்கள் பார்த்தால், அத்தகைய மனிதர் அழகற்ற பற்களைக் கொண்டிருப்பார்; பிறக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு அசுப வீடு(1) அல்லது தனுசு அல்லது துலாம் இராசியானது உதய இராசியாக இருக்க, அத்தகைய வீடு அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் வழுக்கைத் தலையராக இருப்பார்; சூரியன் இலக்கினத்திலிருந்து 9வது அல்லது 5வது வீட்டில் இருக்க அது அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால், அந்த மனிதருக்கு பார்வை குறைபாடு இருக்கும்; பிறக்கும் நேரத்தில் சனியானது 5வது அல்லது 9வது வீட்டில் இருப்பதுடன் அது அசுபக்கோள்களால் பார்க்கப்பட்டால் அந்த மனிதர் பல்வேறு நோய்களுக்கு உட்படுவார்; பிறக்கும் நேரத்தில் செவ்வாயானது 5வது அல்லது 9வது வீட்டில் இருக்க அது அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால் அந்த மனிதர் உடல் உறுப்பு குறைபாடு உடையவராக இருப்பார்.


குறிப்பு(1): அத்தகைய இராசிகள் மேசம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகும்.


தீமை தரும் யோகங்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17