Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல். Show all posts
Showing posts with label ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல். Show all posts

Monday, July 18, 2016

ஆயுர்தயம் அம்சங்களின் விளக்கம்…. தொடர்ச்சி - பிருகத் ஜாதகா – 81




வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஏழு

ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)


சஷ்டியாம்சம் என்பது இராசி மண்டலத்தில் உள்ள ஒரு இராசியை 60 பாகங்களாகப் பிரிப்பது. 60 பாகங்களின் ஒற்றைப்படை இராசிகள் என்பன:

1.
கோரன்
21.
பத்மா
41.
காளினாசன்
2.
இராட்சசன்
22.
இலட்சுமி
42.
முக்யம்
3.
தேவன்
23.
வாகீசன்
43.
வம்சக்சயன்
4.
குபேரன்
24.
திகம்பரன்
44.
உபதகன்
5.
இரக்ஷோகனம்
25.
தேவன்
45.
காலரூபன்
6.
கின்னரன்
26.
அர்தரன்
46.
சௌமியா
7.
ப்ரஷ்டா
27.
காளினாசன்
47.
மிருதன்
8.
குலக்னன்
28.
க்ஷித்தீஸ்வரன்
48.
சுசிதலன்
9.
கரலன்
29.
கமலகரன்
49.
தம்ஷத்ரகரலா
10.
அக்னி
30.
மண்டத்மஜன்
50.
இந்துமுகன்
11.
மாயன்
31.
மிருத்யூ
51.
ப்ரவீணா
12.
பிரெதுபுரீசன்
32.
காலன்
52.
கலஞி
13.
அபம்பதி
33.
தேவாக்னி
53.
தண்டாயுதா
14.
தேவகணேசன்
34.
கோரன்
54.
நிர்மலா
15.
காலன்
35.
அமயன்
55.
சுபா
16.
அகி
36.
கண்டகன்
56.
அசுபா
17.
அம்ரிதம்சன்
37.
சுதா
57.
அதிசிதலா
18.
சந்திரன்
38.
அம்ரிதன்
58.
சுதா
19.
மிருதன்
39.
பூர்ணசந்திரன்
59.
பயோதிபிராமனன்
20.
கோமளா
40.
விஷப்ரதிகா
60.
இந்துரேகா


மேலும், 60 பாகங்களின் இரட்டைப்படை இராசிகள் என்பன மேலே குறிப்பிடப்பட்டதின் இறங்கு வரிசையாகும்; அதாவது இந்துரேகாவில் தொடங்கி, கோராவில் முடிவடையும்.

இப்போது, ஒரு கோளானது, அதனுடைய குறிப்பிட்ட வீட்டில், நவாம்சத்தில், துவதசாம்சத்தில், திரிம்சாம்சத்தில், முதலியனவற்றில்  இருந்தால், அது வர்க்கத்தில் இருப்பதாக கருதப்படும். ஒரு கோள் இரண்டு வர்க்கங்களில் இருந்தால், அது பாரிஜாத அம்சம் எனப்படும்; அது மூன்று வர்க்கங்களில் இருந்தால், அது உத்தம அம்சம் எனப்படும்; நான்கு வர்க்கங்களில் இருந்தால், கோபுர அம்சம்; ஐந்து வர்க்கங்களில் இருந்தால் சிம்மாசன அம்சம்; ஆறில் இருந்தால் பரவத அம்சம்; ஏழு அல்லது எட்டில் இருந்தால் தேவலோக அம்சம்; ஒன்பதில் இருந்தால் ஐராவத அம்சம்; அது பத்தில் இருந்தால் வைசேஷிக அம்சம் எனப்படும்.


"ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ்நாட்களைத் தீர்மானித்தல்" முடிவுற்றது

அடுத்து … பகுதி-8 - தசா மற்றும் அந்தர தசாக்கள்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16


Sunday, July 17, 2016

ஆயுர்தயம் - அம்சங்கள் விளக்கம் - பிருகத் ஜாதகா – 80


  
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஏழு

ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)


குறிப்பு: (திரு சிதம்பரம்) - தொடர்ச்சி

23. உதய இராசி மகரமாக இருக்க; செவ்வாய் முதல் சூரியன் வரை உள்ள கோள்கள்  அதில் இருக்க, வியாழனாது 3வது வீட்டில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன் ஒரு கல்பம் வாழ்வார்.

24.  மேசத்தின் கடைசி நவாம்சம் உதய நவாம்சமாக இருக்க, வியாழன் அல்லது சுக்கிரன் அதில் இருக்க; சந்திரனானது ரிசபம் அல்லது தனுசுவின் 5வது நவாம்சத்தில் இருக்க அல்லது செவ்வாய் சிம்மாசனாம்சத்தில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன் எண்ணிக்கையில்லாத ஆண்டுகள் வாழ்வார்.

25. சூரியன் மற்றும் புதன் ஸ்திர இராசிகளில் இருக்க; சந்திரன் ரிசபத்திலும், சுக்கிரன் மிதுனத்திலும் இருக்க; உதய இராசி கடகமாக இருக்க அதில் வியாழன் இருப்பது; அல்லது உதய இராசியாக துலாம் இருக்க அதில் சனி இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன், ஒரு முனிவராகவோ அல்லது ரிஷியாகவோ வாழ்வார்.

26. சந்திரன் தேவலோக அம்சத்தில் இருக்க; செவ்வாய் பரவத அம்சத்தில் இருக்க; சூரியன் உதய இராசியிலும், சிம்மாசன அம்சத்திலும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன், ஒரு முனிவராகவோ அல்லது ரிஷியாகவோ வாழ்வார்.

27. சூரியன் மேசத்திலும், வியாழன் ஒன்பதாவது வீட்டிலேயோ அல்லது கடகத்திலேயோ இருக்க; அசுபக் கோள்கள் 3வது, 6வது மற்றும் 11வது வீடுகளில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன், ஒரு முனிவராக வாழ்வார்.


அம்சங்களின் விளக்கம்

பகுதி-1 இல், இராசிமண்டலத்தினை 6 வகைப் பிரிவுகளாக, அதாவது ‘சட்வர்க்கம்’ என வகைப்படுத்தலாம் என பார்த்தோம். சில ஆசிரியர்கள் மேலும் நான்கு பிரிவுகளாக, அதாவது, சப்தாமாம்சம், தசாம்சம், சோடசாம்சம், சஷ்டியாம்சம் என பிரிக்கிறார்கள்.

சப்தமாம்சம் என்பது இராசி சக்கரத்தில் உள்ள ஒரு இராசியை 7 சம பாகங்களாகப் பிரிப்பது. ஒற்றைப்படை இராசிகளின் 7 பாகங்களின் அதிபதிகள் முறையே, இராசி சக்கரத்தின் ஒற்றைப்படை இராசியிலிருந்து தொடங்கும் 7 இராசிகளின் அதிபதிகள் ஆவர்;  இரட்டைப்படை இராசிகளின் 7 பாகங்களின் அதிபதிகள் முறையே, இராசி சக்கரத்தின் 7வது வீட்டிலிருந்து இரட்டைபடை இராசியில் தொடங்கும் 7 இராசிகளின் அதிபதிகள் ஆவர்;

தசாம்சம் என்பது இராசி சக்கரத்தில் உள்ளச ஒரு இராசியை 10 சம பாகங்களாகப் பிரிப்பது. 10 பாகங்களின் ஒற்றைப்படை இராசியின் அதிபதிகள் முறையே இராசி சக்கரத்தின் ஒற்றைபடை இராசியிலிருந்து 10வது இராசியிலிருந்து தொடங்கும் இராசிகளின் அதிபதிகள் ஆவர், 10 பாகங்களின் இரட்டைபடை இராசிகளின் அதிபதிகள் முறையே, இரட்டைபடை இராசியின் 10வது வீட்டிலிருந்து தொடங்கும் 10 இராசிகளின் அதிபதிகள் ஆவர்.

சோடசாம்சம் என்பது இராசி மண்டலத்தில் உள்ள ஒரு இராசியை 16 பாகங்களாகப் பிரிப்பது. ஒற்றைப்படை இராசியின் 16 பாகங்களின் அதிபதிகள், ஒற்றைப்படை இராசியில் தொடங்கி 12 இராசிகள் வரை அவைகளுக்குரிய அதிபதிகளுடன், பிரம்மன், விஷ்னு, ருத்ரன் மற்றும் சூரியன் ஆவர்; இரட்டைப்படை இராசியின் 16 பாகங்களின் அதிபதிகள், இரட்டைப்படை இராசியில் தொடங்கி 12 இராசிகள் வரை அவைகளுக்குரிய அதிபதிகளுடன், சூரியன், ருத்ரன், விஷ்னு மற்றும் பிரம்மன் ஆவர்.


………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16




Saturday, July 16, 2016

பத்தாயிரம் ஆண்டுகள் வாழும் சாதகம் - பிருகத் ஜாதகா – 79



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஏழு

ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)

குறிப்புகள்:(நிமித்திகன்)

கீழ்வரும் குறிப்புகளில் 1000, 2000, 10,000 ஆண்டுகள், ஒரு யுகம் வாழக்கூடிய சாதக அமைப்புகளைத் திரு. சிதம்பரம் அய்யர் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். யதார்த்த உலகில் 120 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்தல் என்பது அரிதிலும் அரிதாகவே உள்ளது. எனவே 1000, 2000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பது கற்பனைப் பாத்திரங்களாக இருக்கலாமே தவிர உண்மையில் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இதனை வேறு கோணத்தில் ஆராய்ந்தால், வாழ்தல் என்பது புகழுடன் வாழ்தல் எனும் பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கரிகால் சோழன், இராசஇராசன் போன்ற மன்னர்கள் இன்றும் புகழோடு பேசப்படுவதை கருத்தில் கொள்ளலாம். ஆக உயிர் உடல் என்பதைக் காட்டிலும், புகழுடலை கணக்கில் கொண்டால், இந்தக் கூற்று உண்மையாக இருக்கலாம். எனவே அவ்வாறான அமைப்புள்ள சாதகர்களின் புகழோ அல்லது அவர்தம் வரலாறோ நீண்ட ஆண்டுகள், அதாவது 1000, 2000 ஆண்டுகள் நிலைத்திருக்கும் எனக் கணக்கில் கொள்ளலாம். இதுவே சரியானது என்பதே எனது கருத்து.


குறிப்புகள் (திரு சிதம்பரம்) – சென்ற பதிவின் தொடர்ச்சி


11. சுக்கிரன் தேவலோக அம்சத்திலும், செவ்வாயானது ஏதேனும் ஒரு கேந்திரத்திலும் இருக்க, வியாழனும் ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருப்பதுடன் சிம்மாசனம்சத்தில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், எண்ணிக்கையில் அடங்காத ஆண்டுகள் வாழ்வார். 

12. சுக்கிரன் ஏதேனும் ஒரு கேந்திர வீட்டில் இருப்பதுடன் வர்க்கோத்தம நிலையிலும், பரவதம்சத்திலும் இருக்க, வியாழன் ஏதேனும் ஒரு கேந்திரவீட்டில் இருப்பதுடன் சொர்க்கலோக அம்சத்திலும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், மருந்துகளின் வலிமையால் முடிவில்லாத ஆண்டுகள் வாழ்வார். 

13.வியாழன் ஒரு கேந்திர வீட்டில் இருப்பதுடன் கோபுர அம்சத்திலும் இருக்க, சுக்கிரன் ஒரு திரிகோண வீட்டில் இருப்பதுடன் பரவதம்சத்திலும் இருக்க, கடகம் உதய இராசியாக இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், ஒரு யுகம் வாழ்வார். 

14. உதய இராசி கடகமாக இருக்க, அதில் வியாழன் இருப்பதுடன் அது தனுசுவின் நவாம்சத்தில் இருக்க, 2 அல்லது 3 கோள்கள் கேந்திரத்தில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், நீண்ட நாட்கள் வாழ்வதுடன் பிரம்ம நிலையையும் அடைவார். 

15. சுக்கிரன் 3வது அல்லது 11வது வீட்டில் இருப்பதுடன் கோபுரம் அல்லது பிற அம்சத்துடன் இருக்க, உதய நவாம்சமானது ரிசபமாக ரிசப இராசியில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், நீண்ட நாட்கள் வாழ்வதுடன் பிரம்ம நிலையையும் அடைவார். 

16. சுக்கிரன் உதய இராசியில் இருக்க, வியாழன் 7வது வீட்டிலும், சந்திரன் கன்னியிலும், உதய நவாம்சமானது தனுசு இராசியுனடைய மேசமாக இருப்பது.  மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், அழிவிலிருந்து காக்கும் நிலையை அடைவார். 

17. புதன் 5வது வீட்டில் கோபுரம் அல்லது பிற அம்சத்தில் இருக்க, உதய இராசி கும்பமாகவும் அதில் வியாழனும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், பிரம்ம நிலையை அடைவார். 

18. வியாழன் ஏதேனும் ஒரு கேந்திர வீட்டில் இருக்க, சனி 11வது வீட்டிலும், சூரியன் 2வது வீட்டிலும், குளிகை (ஒரு கோளின் சுற்றுவட்டப்பாதையின் அதிகபட்ச தூரத்தின் முனைகள்) 7வது வீட்டிலும், செவ்வாய் 9வது வீட்டிலும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், ஒரு யுகம் வாழ்வார். 

19. வியாழன் மற்றும் புதன் திரிகோண வீட்டில் இருக்க; உதய இராசி ரிசபமாகவும் அதில் செவ்வாய் இருக்க, சந்திரன் கோபுர அம்சத்தில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், 2000 ஆண்டுகள் வாழ்வார். 

20. வியாழன் ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருக்க, உதய இராசி கடகமாக இருக்க, செவ்வாய் 7வது வீட்டிலும், சனி 4வது வீட்டிலும், பிறக்கும் நேரமானது மாதத்தின் வளர்பிறையாக இருப்பது. ஒரு மனிதன் பிறப்பானது, பகலில் மேற்படி யோகத்தில் நிகழுமானால்,  அவர் 10,000 ஆண்டுகள் வாழ்வார். 

21. வியாழன், சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவை கேந்திரங்களில் இருக்க, அவை ஒன்றையடுத்து ஒன்றாக கேந்திரத்தில் இருக்க அல்லது அவைகள் திரிகோண வீடுகளில் இருப்பது. ஒரு மனிதன் மேற்படி இரு யோகங்களில் ஒன்றில் பிறந்தால்,  அவர் 10,000 ஆண்டுகள் வாழ்வார். 

22. சுபக்கோள்கள் கேந்திரங்களில் இருக்க; அசுபக் கோள்கள் 3வது, 6வது மற்றும் 11வது வீடுகளில் இருக்க, உதய இராசி சிம்மமாக இருக்க அதில் வியாழன் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன் 60,000 ஆண்டுகள் வாழ்வார்.


………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16