Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, March 28, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-41 – கோள்கள் – பலம் பெறும் இடங்கள்


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்பிருகத் ஜாதகா

பகுதி   -  இரண்டு (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[கோள்கள்]

20.        சூரியனும் சந்திரனும் மகரத்திலிருந்து ஏதேனும் ஆறு இராசிகளில் இருந்தால் அவை சேஷ்டபலம் (நகரும் வலிமை) பெறும். இதர கோள்கள் இதற்கு எதிர்மறை நகர்வில் இருந்தால் அல்லது சந்திரனுடன் இணைந்திருந்தால் (சமகமம்) அல்லது அதிக ஒளிர்வுடன் இருந்தால்(1) அல்லது அவை வடக்கு கோள்களுடன், கோள்களின் இணைப்பில் (யுத்தத்தில்) இருந்தால், வலிமை பெறும்.


குறிப்பு: (திரு சிதம்பரம்)

(1)    எனவே, புதன் சூரியனிலிருந்து 290, வெள்ளி சூரியனிலிருந்து 470, மற்றவை சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும்போது.


21.        சந்திரன், செவ்வாய் மற்றும் சனி ஆகியவை இரவில் காலபலம் (தற்காலிக வலிமை) பெறும்; புதன் இரவிலும் பகலிலும் வலிமை பெறும்; மற்ற கோள்கள்(1) பகலில் வலிமை பெறும். நீச்ச கோள்கள் தேய்பிறை நாட்களிலும் (கிருஷ்ண பட்சம்) பிற கோள்கள் வளர்பிறையிலும் (சுக்ல பட்சம்) பலம் பெறும். மேலும், ஒவ்வொரு கோளும் அதனதன் ஆண்டு, மாதம், நாள், நேரம் ஆகியவற்றில் பலம் கொண்டிருக்கும்(2).


குறிப்பு: (திரு சிதம்பரம்)

(1)    அதன்படி, சூரியன், வியாழன், வெள்ளி ஆகியவையாகும். காலபல இராசிகள்பத்தி 19, பகுதி-I
(2)    அத்தகைய வலிமைக்கு நைசார்கிகபலம் என்று பெயர்.

      பின்வரும் பக்கங்களில் அடங்கியுள்ள சோதிட உண்மைகளை பயன்படுத்துவதற்கு முன்பு, ஒவ்வொரு வீடு மற்றும் அதன் அதிபதிகளின் வலிமை, பலவீனம் ஆகியவற்றுடன், அந்த வீட்டில் உள்ள கோள்கள் அல்லது தொடர்புடைய கோள்கள் ஆகியவற்றினை இதனை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். இதற்காகவும் வேறு பல பயனிற்காகவும் வெறும் இராசி சக்கரம் அல்லது நவாம்ச சக்கரத்தினை மட்டும் கோள்களின் நிலையோடு தோராயமாக ஒப்பிடக் கூடாது. ரேவதியிலிருந்து கோள்களும் அத்துடன் இலக்னம் ஆகியவற்றின் சரியான அட்சரேகையினையும் (ஸ்புடம்) அறிந்திருக்க வேண்டும்.குறிப்பு: (நிமித்திகன்)


      அதாவது, சோதிட பலன்கள் உரைத்தல் என்பதில் வெறும் இராசியும் நவாம்சமும் மட்டுமின்றி இன்னும் பல அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் பெரும்பாலான சோதிடர்கள் (அவ்வாறு சொல்லிக் கொள்பவர்கள்) வெறும் இராசியை மட்டுமே வைத்துக் கொண்டு பலன் சொல்வதை நடைமுறையில் காண முடிகிறது. சோதிடம் பொய்யாவதற்கு இதுவும் ஒரு காரணம்.


பகுதி இரண்டுமுற்றிற்று


அடுத்த பகுதி-3, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கான சாதகங்கள்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


Thursday, March 26, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-40 – கோள்கள் – ஐவகை உறவும் பலமும்


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

பிருகத் ஜாதகா

பகுதி   -  இரண்டு (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[கோள்கள்]


18.        ஒரு குறிப்பிட்ட கோளிலிருந்து 2வது, 12வது, 11வது,  3வது, 10வது, 4வது வீடுகளில் இருக்கும் கோள்கள், அந்த குறிப்பிட்ட கோளிற்கு நண்பர்கள், மற்றவை எதிரிகள்ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டும். வேறு சிலரின் கூற்றுப்படி, ஒரு உச்ச கோளின் வீட்டில் இருக்கும் கோள்களும்  அந்த கோளிற்கு நண்பர்கள். இவற்றை ஒருங்கிணைத்து பார்க்கும்போது, மூன்று இயல் உறவுகள் (பத்தி-16 மற்றும் 17), மற்றும் இரண்டு கால அளவு உறவுகள் ஆகியவற்றை, கோள்களுக்கிடையேயான கீழ்வரும் ஐந்து உறவுகளாகப் பிரிக்கலாம்.  அவை அதிமித்ரன் (உயர் நண்பன்), மித்ரன் (நண்பன்), சமம் (சரிநிகர்), சத்ரு (எதிரி) மற்றும் அதிசத்ரு (உயர் எதிரி) ஆகும்.


குறிப்புகள்: (சிதம்பரம்)

      பத்திகள் 16, 17 இவற்றில் மூன்றினைநட்பு, சரிநிகர், எதிரி என நிரந்தரமாக குறிப்பிடுப்படுகிறது. பத்தி 18-ல் இரண்டினை, நட்பு மற்றும் எதிரி என தாற்காலிகமாகக் குறிப்பிடுகிறது. இவற்றினை ஒருங்கிணைத்தால், கீழ்வரும் முடிவுகள் கிடைக்கும்.

பத்திகள் 16, 17

பத்தி 18

முடிவு
மித்ரன்
+
மித்ரன்
=
அதிமித்ரன்
சத்ரு
+
சத்ரு
=
அதிசத்ரு
சமம்
+
மித்ரன்
=
மித்ரன்
சமம்
+
சத்ரு
=
சத்ரு
மித்ரன்
+
சத்ரு
=
சமம்19.        ஒரு கோள் ஸ்தான பலம் (உள் அல்லது இட வலிமை) பெறுவது என்பது, அக்கோள் அதன் உச்ச நிலையில் இருக்கும்போது(1), நண்பனின் வீட்டில்(2) மூலத்திரிகோணத்தில்(3), அதன் நவாம்சத்தில்(4) அல்லது அதன் சொந்த வீட்டில்(5) இருக்கும்போது என்பதாகும்.
       புதனும் வியாழனும் கிழக்கில் அல்லது உதய ராசியில் பலம் அதிகம் பெறுவர்(6). சூரியனும் செவ்வாயும் தெற்கில் அல்லது 10ம் வீட்டில் பலம் அதிகம் பெறுவர். சனி மேற்கில் அல்லது மறைவு இராசியிலும், சந்திரனும் வெள்ளியும் வடக்கிலும் அல்லது 4வது வீட்டிலும் பலமிக்கவர்கள்.


குறிப்புகள் (சிதம்பரம்)
(1)    பார்க்க I . 13
(2)    பார்க்க I . 16 - 18
(3)    பார்க்க I . 14
(4)    பார்க்க I . 6
(5)    பார்க்க I . 6
      இந்த இடங்களுக்கு தொடர்புடைய உறவுகள்பத்தி -11 – பகுதி –XX பார்க்கலாம்.

(6)    அதன்படி: அவை திக் பலம் அடையும். வேறு சில உரையாசிரியர்களின் கருத்துப்படி, புதனும் வியாழனும்  கிழக்கு திரிகோண இராசிகளில், மேசம், சிம்மம், தனுசு ஆகிய இடங்களில் பலம் அதிகம். சூரியனும் செவ்வாயும் தெற்கு திரிகோண இராசிகளில், ரிசபம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் பலம் அதிகம். சனி மேற்கு திரிகோண இராசிகளில், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இடங்களில் பலம் அதிகம். சந்திரனும் வெள்ளியும் வடக்கு திரிகோண இராசிகளில், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய இடங்களில் பலம் அதிகம். – பகுதி-I, பத்தி-19, குறிப்பு (அ) பார்க்கவும்.


நிமித்திகன்: (குறிப்புகள்)

      உரை ஆசிரியர் (சிதம்பரம் அவர்கள்), முன் பத்திகளில் சொல்லியவற்றை அவ்வப்போது தொடர்புபடுத்துவதுடன், இனிவரும் பத்திகளையும் குறிப்பிடுவது  மூலம் அவர் பிருகத் ஜாதகாவினை முழுமையாக கற்றுள்ளதை அறியமுடிகிறது.முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15