Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label பெண்களின் சாதகம். Show all posts
Showing posts with label பெண்களின் சாதகம். Show all posts

Monday, August 28, 2017

பெண் சன்னியாசி ஆகும் நிலை - பிருகத் ஜாதகா – 187

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

பெண்களின் சாதகம்

15.    ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், சனியானது வலிமை மிக்கதாகவே அல்லது வலிமைகுறைவு ஆகிய இரண்டு நிலையிலும் இல்லாமல் இருக்க, சந்திரன், சுக்கிரன் மற்றும் புதனானது வலிமை குறைந்து இருக்க, சூரியன், செவ்வாய், வியாழன் ஆகியவை வலிமை மிக்கதாகவும், உதய இராசியானது ஒற்றைப்படை இராசியாகவும் இருந்தால், அந்த பெண், ஆணின் குணாதிசயம் கொண்டவராக இருப்பார்(1)
ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், வியாழன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியவை வலிமை மிக்கவையாக இருக்க, உதய இராசியானது இரட்டைப்படை இராசியாக இருந்தால், அந்த பெண் பெறும் புகழ்பெற்றவராக இருப்பதுடன், பெறும் படிப்பாளியாகவும், ஆன்மீக அறிவியலில் கரைதேர்ந்தவராகவும் இருப்பார்.

குறிப்பு: 
(1) வேறு சிலரின் கருத்துப்படி, அந்த பெண் நிறைய ஆண்களிடம் மகிழ்ச்சி அடைவார்.


16.    ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய வீட்டிலிருந்து 7வது வீட்டில், ஒரு அசுபக் கோள் இருக்க, 9வது வீட்டில் சில கோள்கள் இருக்க, அந்த பெண், சந்தேகம் இல்லாமல், 9வது வீட்டில் இருக்கும் கோளின் தன்மைக்கேற்ப, நிச்சயம் சன்னியாசி ஆவார்(1).
இந்த பகுதியில் கூறப்பட்டவை அனைத்தும், கோள்களின் நிலையினைப் பொருத்து, அப்பெண்ணின் திருமணக் கொடையாக கணக்கிடப்படுவதுடன், அத்தகைய திருமணக் கொடையானது(2) கேள்வி கேட்கப்படும் நேரத்திற்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டும்.


குறிப்பு:
(1)  மேலும், 7வது இடத்தில் இருக்கும் கோள்களுக்காக ஏற்கனவே கூறப்பட்ட இதர பலன்கள் கிடைக்காது.

(2)  இருப்பினும் அத்தகைய பலன்கள், பிருகத் சம்கிதையில் திருமணம் பற்றிய பகுதி 100 மற்றும் 103-ல் குறிப்பிடப்பட்ட பலன்களுக்கு முரண்படக்கூடாது.


பெண்களின் சாதகம் முற்றும்


அடுத்து .. பகுதி 25 - இறப்பு



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Sunday, August 27, 2017

கைம்பெண் ஆகும் நிலை - பிருகத் ஜாதகா – 186


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

பெண்களின் சாதகம்


13.    ஓரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருந்தால், அந்த பெண் பிறர் நலனைக் கண்டு பொறாமைப் படுபவராகவும், தமது வசதியைப் பற்றிய தற்சிந்தனை மட்டுமே உடையவராகவும் இருப்பார்; உதய இராசியில் சந்திரன் மற்றும் புதன் இருந்தால், அந்த பெண் நுண்கலைப் பயின்றவராகவும், வசதியை அனுபவிப்பவராகவும், நல்ல குணாதிசயங்கள் கொண்டவராகவும் இருப்பார்; உதய இராசியில் சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் அந்த பெண் அழகியாகவும், அவரது கணவரால் பெரிதும் விரும்பப் படுபவராகவும்,  பாடகியாகவும் இசைக் கருவிகளைப் பயன்படுத்துபவராகவும் இருப்பார்; உதய வீட்டில் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியவை இருந்தால், மிக்க செல்வந்தராகவும், வசதியான வாழ்க்கை உடையவராகவும், நற்குணங்கள் கொண்டவராகவும் இருப்பார். உதய இராசியில் புதன், வியாழன், சுக்கிரன் இருந்தாலும், மேற்கூறிய பலன்களே இருக்கும்.


14.    ஓரு பெண் பிறக்கும் நேரத்தில், இலக்கினத்திலிருன்து 8வது வீட்டில் அசுபக்கோள்கள் இருக்க, அந்த பெண் விதவையாவார், அந்த விதவை நிலையானது(1) 8வது வீட்டின் அதிபதி நவாம்சத்தில் இருக்கும் வீட்டின் அதிபதியின் அந்திரத்தில் நடைபெறும். 8வது வீட்டில் அசுபக்கோள்கள் இருக்க, 2வது வீட்டில் சுபக்கோள் இருந்தால், அந்த பெண், தனது கணவருக்கு முன்பாகவே இறப்பார், மேலும் சந்திரனானது கன்னி, விருச்சிகல், ரிசபம் அல்லது சிம்மத்தில் இருந்தால், அவருக்குக் குறைவான குழந்தைகளே இருக்கும்.

குறிப்பு (1): உரையாசிரியரின் கருத்துப்படி, திருமணத்திற்கு பிறகு.


குறிப்பு(நிமித்திகன்): இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்திர திசை என்பது, வராகமிகிரரின் கணக்கீட்டின்படி வரும் தசாக்கால முறையாகும். தற்போது நடைமுறையில் உள்ள விம்சோத்திரி முறையினை அவர் குறிப்பிடவில்லை.


….பெண்களின் சாதகம்.. தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Saturday, August 26, 2017

7-ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள் - பிருகத் ஜாதகா – 185



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

பெண்களின் சாதகம்

11.    ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், 7வது வீடு அல்லது 7வது நவாம்சமானது சனியாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் வயதானவராக இருப்பதுடன் முட்டாளாகவும் இருப்பார்; அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது செவ்வாயினுடையதாக இருந்தால், அவரின் கணவர் முன்கோபியாக இருப்பார், ஆனால் தனது மனைவியின் மீது அன்புடன் இருப்பார். அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது சுக்கிரனுடையதாக இருந்தால், அவரது கணவர் அழகானவராகவும் மனைவியின் மீது அதீத அன்பு கொண்டவராகவும் இருப்பார்; அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது புதனாக இருந்தால், அவரது கணவர் கற்றறிந்தவராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்.

குறிப்பு:
(1)  இந்த பத்தி மற்றும் அடுத்து வரும் பத்தியின் குறிப்பிட்டிருப்பதானது, 7வது வீடு எவ்வித கோள்களும் இன்றி இருக்க வேண்டும், என உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

12.    ஒரு பெண் பிறக்கும்போது 7வது வீடு அல்லது 7வது நவாம்சமானது சந்திரனுடையதாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் அதிக காம இச்சை உடையவராகவும் இயல்பான குணம் உடையவராகவும் இருப்பார். அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது வியாழனுடையதாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் தைரியமும் நற்குணமும் கொண்டவராகவும் தனது ஆசைகளையும் விருப்பங்களையும் அடக்கி ஆள்பவராக இருப்பார்; அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது சூரியனுடையதாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் மென்மையானவராகவும் பல்வேறு தொழில்கள் செய்பவராகவும் இருப்பார்(1).


குறிப்பு:
(1)  வேறு சிலரின் கருத்துப்படி, இந்த பகுதியில் உள்ள வார்த்தையானது, அதிகர்மா என்பதற்கு பதிலாக ரதிகர்மா என இருக்கவேண்டும் என கூறுகின்றனர், அதன்படி, அவர் அதிக உறவு கொள்பவராக இருப்பார். மேலும், 7வது வீடானது ஒரு கோளின் வீடாகவும், 7வது நவாம்சமானது வேறொரு கோளின் வீடாகவும் இருந்தால், பலனானது, 7வது வீடு அல்லது 7வது நவாம்சத்தின் கோள்களில் எது பலமிக்கதோ அதைச் சார்ந்தே இருக்கும்.


….பெண்களின் சாதகம்.. தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Friday, August 25, 2017

தவறிழைக்கும் பெண்கள் - பிருகத் ஜாதகா – 184


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

பெண்களின் சாதகம்

9.     ஒரு பெண் பிறக்கும் நேரத்தில் உதய இராசியிலிருந்து 7வது அல்லது சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து 7வது வீட்டில் பல அசுபக் கோள்கள் இருந்தால் அப்பெண் விதவையாவார்; அத்தகைய 7வது வீட்டில் அசுபக்கோள்களும் சுபக் கோள்களும் நிறைந்து இருந்தால், அவர் தனது கணவரை விட்டு பிரிந்து வேறொருவரை மணந்து வாழ்வார்; அத்தகைய 7வது வீட்டில் அசுபக் கோள்கள்(1) பலமற்று இருந்து அவை சுபக் கோள்களால் பார்க்கப்பட்டால்(2) அவர் தனது கணவனால் ஒதுக்கப்படுவார்.

சுக்கிரனும் செவ்வாயும் ஒன்று மற்றொன்றில் நவாம்சத்தில் இருந்தால், அந்த பெண் முறைதவறி செல்வார்; உதய இராசியிலிருன்து 7வது வீட்டில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அவள் தனது கணவனின் ஒப்புதலோடு முறையற்று நடப்பாள்.

குறிப்பு:
(1)  சூரியன் அல்லது சனி
(2)  புதன் அல்லது வியாழன் அல்லது சுக்கிரன்.

10.    ஒரு பெண் பிறக்கும் நேரத்தில் உதய வீடானது சனி(1) அல்லது செவ்வாய்(2) ஆக இருந்து அதில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருக்க, அவை அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால், அந்த பெண்ணும் அவரது தாயாரும் முறைதவறி நடப்பவர்களாக இருப்பர்; நிறைவு(7வது வீடு) நவாம்சமானது செவ்வாயினுடையதாக இருப்பதுடன் நிறைவு(7வது) வீடானது சனியால் பார்க்கப்பட்டால், அந்த பெண் கருவுறும் உறுப்பில் நோய்தாக்கப்படுபவராக இருப்பார்; நிறைவு(7வது வீடு) சுபக் கோளினுடையதாக இருந்தால் அவரது கருவுறும் உறுப்பு நல்ல நலனுடன் இருப்பதுடன், நல்ல மனைவியாகவும் இருப்பார்.

குறிப்பு:
(1)  மகரம் அல்லது கும்பம்
(2)  மீனம் அல்லது விருச்சிகம்


குறிப்பு (நிமித்திகன்):

இங்கு, திரு சிதம்பரம் அவர்கள், setting sign எனும் வார்த்தையினை பயன்படுத்தியுள்ளார். அதாவது raising sign எனப்படும் உதய வீட்டிற்கு (இலக்கினத்திற்கு) நேர் எதிர் வீடானது  setting sign எனப்படும் நிறைவு வீடு ஆகும், அதாவது அது 7வது வீடாக இருக்கும். எடுத்துக்காட்டாக, காலையில் 6.00 மணிக்கு தோன்றும் சூரியன் மாலை 6.00 மணிக்கு மறைவது என்பதைக் கணக்கில் கொள்வதுபோல் காலையில் 6.00 மணிக்கு உள்ள இலக்கினமானது மாலை 6.00 மணிக்கு (தோராயமாக) 7வது வீட்டில் இருக்கும், பின்னர் மீண்டும் தொடங்கிய இடத்தினை நோக்கி நகரும். எனவே நிறைவு வீடு என்பது 7வது வீடான களத்திர வீடாகும்). [நண்பர் திரு ஓம் பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி]


….பெண்களின் சாதகம்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17