Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள். Show all posts
Showing posts with label பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள். Show all posts

Thursday, December 31, 2015

கருப்பும் வெள்ளையும் கலந்த மச்சம் - குழந்தையின் உடம்பில் - பிருகத் ஜாதகா – 64

   
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்


26. மூன்று கோள்கள், அவை அசுபமோ அல்லது சுபமோ, புதனுடன் சேர்ந்து ஒரு இராசியில் இருந்தால், ஒரு வடு அல்லது ஒரு மச்சம், அந்த இராசிக்குரிய(1) உடல் உறுப்பில் நிச்சயம் இருக்கும். தலையிலிருந்து (இலக்கினத்தைக் குறிப்பது) 12 உறுப்புகளைக் குறிக்கும் பிரிவின்படி(2),  6வது வீட்டில் ஒரு அசுபக் கோள் இருக்குமானால், ஒரு வடு (இடுப்பில்) இருக்கும்(3); ஆனால் அந்த அசுபக்கோள் ஒரு சுபக் கோளினால் பார்க்கப்பட்டால், கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு மச்சம் இருக்கும்; ஆனால் சுபக் கோள் ஆறாம் இடத்தில் இருந்தால், அந்த இடத்தில் அடர்த்தியான முடி இருக்கும்.

குறிப்பு(சிதம்பரம் அய்யர்):

(1)     உடலின் பிரிவுகள் பத்தி 24-ல் குறிப்பிடப்பட்டவாறு.

(2)     பத்தின் 23-ல் குறிப்பு(3)-ல் குறிப்பிடப்பட்ட பிரிவின்படி.

(3)     வலிமை மிகுந்த கோளின் தசா காலத்தில். மேலும், கோளானது தனது சொந்தம் அல்லது நவாம்சமான 6வது வீட்டில் இருந்தால், அல்லது ஸ்திர இராசி அல்லது ஸ்திர நவாம்சத்தில் இருந்தால், வடு அல்லது மச்சமானது பிறப்பிலிருந்தே இருக்கும்.


பகுதி-5 நிறைவுற்றது

அடுத்துபகுதி-6 - பால அரிஷ்டம் அல்லது இளம் வயது மரணம்.



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


Wednesday, December 30, 2015

மச்சங்களும் வடுக்களும் குழந்தையின் உடம்பில் எப்போது தோன்றும் - பிருகத் ஜாதகா – 63



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்


24. உடலின் மும்மடி பிரிவுகள் தலையிலிருந்து தொடங்கும், கழுத்திலிருந்து தொடங்கும் மற்றும் அடிவயிற்றிலிருந்து தொடங்கும், முறையே உதய திரேக்கானத்தின் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது என வரும்.

குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

அவை கீழ்வருமாறு:
பன்னிரெண்டு வீடுகள்
உதய திரேக்கானத்திலிருந்து, குறிப்பிடப்படும் உடலின் உறுப்புகள்
முதலாவது
இரண்டாவது
மூன்றாவது
உதய இராசி
தலை
கழுத்து
அடிவயிறு
2வது வீடு
வலது கண்
வலது தோள்பட்டை
உயிர் உறுப்பு
12வது வீடு
இடது கண்
இடது தோள்பட்டை
ஆசனவாய்
3வது வீடு
வலது காது
வலது கை
வலது விதைப்பை
11வது வீடு
இடது காது
இடது கை
இடது விதைப்பை
4வது வீடு
வலது நாசி
வலப்பக்கம்
வலது தொடை
10வது வீடு
இடது நாசி
இடப்பக்கம்
இடது தொடை
5வது வீடு
வலது கோவில்
வலது மார்பு
வலது முழங்கால்
9வது வீடு
இடது கோவில்
இடது மார்பு
இடது முழங்கால்
6வது வீடு
வலது முகவாய்
வலது தொப்பை
வலது குதிகால்
8வது வீடு
இடது முகவாய்
இடது தொப்பை
இடது குதிகால்
7வது வீடு
வாய்
தொப்பூழ்
பாதம்


25. உடலின் உறுப்புகளைக் குறிப்பிடும் இராசிகளில் அசுபக் கோள்கள் இருந்தால், அப்பகுதியில் வடுக்கள் தோன்றும்; ஆனால் அத்தகைய இராசிகளில் சுபக் கோள்கள் இருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ, அத்தகைய உறுப்புகளில் மச்சங்கள் தோன்றும்; அத்தகைய அசுப அல்லது சுபக் கோள்கள் அவைகளின் சொந்த வீட்டில் அல்லது நவாம்சத்தில் அல்லது ஸ்திர இராசியில் அல்லது ஸ்திர நவாம்சத்தில் இருந்தால், வடு அல்லது மச்சமானது பிறப்பிலேயே தோன்றும்; இல்லையெனில், அது எதிர்காலத்தில் தோன்றும்(1). வடுக்களைப் பொருத்தவரையில், அக் கோள் சனியாக இருந்தால், வடுவானது கற்களினாலோ அல்லது காற்றினாலோ ஏற்படும்; செவ்வாய் எனில், அது நெருப்பினால் அல்லது ஆயுதங்களினால் அல்லது நச்சு பொருளினால் ஏற்படும்; (அசுப) புதனாக இருந்தால், அது பூமியினால்(2) ஏற்படும்; சூரியன் என்றால் மரம் அல்லது நாற்கால் விலங்கினால் ஏற்படும்; (தேய்பிறை) சந்திரன் எனில், கொம்பு உள்ள விலங்கினால் அல்லது நீர்வாழ் விலங்கினால் ஏற்படும். இராசிகளில் பிற (சுப) கோள்கள்(3) இருக்குமானால் இராசிகளினால் குறிப்பிடப்படும் பாகங்களில் எவ்வித வடுவும் தோன்றாது.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)     அதாவது, பல்வேறு கோள்களின் தசா அல்லது கோள்களின் நகர்வுக் காலங்கள்.

(2)     அதன் அதிபதி மற்றும் அல்லது அதன் சாரம்

(3)     வியாழன், வெள்ளி, (சுப) புதன் மற்றும் வளர்பிறை சந்திரன்.

இந்த பத்தியில் சொல்லப்பட்டவையானது, உடலின் பிரிவுகள் பற்றி பத்தி 24-ல் சொல்லப்பட்டவைக்கு உரியவை.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15